அம்மா தாயே என்னும் சகோதரி,திருமா என்ற மானிடன், அன்பு மணி (MONEY) என்னும் பண்புமணி

ஏப்ரல் 18, 2014

5e8530faa44f95e2_intervals.preview

 

இடைவெளிதான் முடிவல்ல:- எழுத்து ஊற்றை கால மண் மேடு மூடியிட்டுள்ளது. வாழ்வில் மிகவும் பிடித்தமான உன்னதமான எழுத்துக்கால்களை தடத்தை பதிக்கவே முடியாமல் நாட்கள் பல கடந்து செல்கின்றன.ஆய்ந்தோய்ந்து பார்த்தால் இயற்கையும் செயற்கையும் கலந்த நாற்றங்கால்களில் இந்த நாட்களின் கொடி படர்ந்தபடி இருக்கிறது உங்களை எல்லாம் சந்திக்க முடியாமல் யான் சந்தோசிக்கமுடியாமல், சுவாசித்தும் சுவாசிக்கமுடியாமல் மூச்சு முட்டிக் கொண்டு…

வாழ்வில் எமக்கு பிடித்தமான எமக்கே உரிய காலத்தின் பிடிப்புகள் எமக்கு மூன்றுதான். அவை: 1. தியானம், 2.நடைப்பயிற்சி, 3. எழுதுவது. படிப்பது கூட பின்னால்தான் இவற்றுக்கு அப்பால் அப்புறம்தான்.

இந்த ஓடிவிட்ட நாட்களில் இவற்றுக்கும் கூட நேரம் ஒதுக்கமுடியாமல் நாட்களும் நேரமும் ஒதுங்கியும் ஒளிந்தும் கடந்து செல்கின்றன. தியான நேரத்தைக்கூட அன்றாடம் எப்படியோ பிடித்து ஒரு மணி நேரம் முடித்து விடுகிறேன். இது இல்லையேல் கோபம் வந்து விடும் வெளியில் செல்வது சண்டையில் முடிந்துவிடும் என்ற நிர்பந்தம் இருப்பதால்.

நடைப்பயிற்சியையும், எழுதுவதையும் ஏன் நடைமுறைக்கு கொண்டு வர முடியவில்லை எனில் எல்லாம் சிறிய சிறிய காரணங்களே. மகன் மணியத்தின் 10ஆம் நிலை இறுதி தேர்வு முடிந்துவிட்டது. துணைவி ஊருக்கு போகிறேன் எனச் சென்றுவிட்டது,மகன் மணியம் 8 கி.மீ தள்ளி கணினி வகுப்பிற்கு 4மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் செல்வதும் அதற்கு முன் பின்னாக குறைந்த பட்சம் 1 மணி நேரமும் தேர்தல் கால கெடுபிடிகளின் காரணம் பாதிப்புகளால் அதிக பட்சம் 2 மணி நேரம் கூட கூட ஆகிவிடுவதுமாக ஒரு பக்கம்… இது எமது நடைப்பயிற்சிக்கு முட்டுக்கட்டையாகிவிட…

பொருளாளராக பொறுப்பு எடுத்துக் கொண்ட கோவில் பணி சிலை எடுக்க செல்ல வேண்டும் என ஒரு புறம் வசூல், இதோ இவர்கள் தனியாக ஒரு சிறு கோயில் கட்ட காலையில் பூசை போடுகிறார்கள் விடியலில் வருக என்று அழைப்பதும்,  அதோ அந்த மனிதர்களில் ஒருவர் கோயில் பணி நிறைவேறுவதை தடைப்படுத்தவே குறியாக செயல்படுகிறார்  என்ற தொலைபேசி அழைப்புகளும் வார வார, பதினைந்து நாளுக்கு ஒருமுறை , அவ்வப்போதைய ஒருங்கிணைப்புக் குழுவின் சந்திப்புக்களும்  கோயில் வளர்ச்சிக் கூட்டமும் மட்டுமல்லாமல் மின் வெட்டும், மதிய நேரத்தில் 104டிகிரி பாரன் ஹீட் வெப்பமும் சாதாரண ஓட்டு வீட்டில் உள் அமரமுடியாமையுமாக கணினி முன் அமரும் நேரம், உகந்த நேரமே மிகக் குறைவாகிக் கொண்டு வருகிறது. அனேகமாக இந்த கோயில் பணி குடமுழுக்குத் திருவிழாவரை, அதன்பின் அதன் அன்றாட அலுவல்கள் என  எமது நேரத்தை உட்கொண்டு விடும் என்றே கருத முடிகிறது தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பார்த்தால்.

நாம் செய்யும் செயல்கள் கீழ்தட்டு மக்களுக்கு ஏதாவது உதவும் என்றால் அதை செய்தாகவேண்டும். அதுபோலத்தான் இந்த கோயில் பணியும் நிறைவடையும்போது எம்போன்றோர் பங்கெடுப்பால் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவும் ஒரு பொது அமைப்பாக இருக்கும்  என்ற நம்பிக்கையும் எமது இரத்தத்தோடு கலந்த சேவை மனப்பானமையுமே தனிப்பட்ட எனக்கே உரிய ஆர்வங்களான நடைப்பயிற்சி, எழுத்து போன்றவற்றைக்கூட பின்னுக்குத் தள்ளி  உள்ளது. நாளடைவில் அதன் அனுபவங்களும் எழுத்துக்களாக பரிமளிக்க வாய்ப்புண்டு எனவே அந்த அனுபவங்களை எல்லாம் தேக்கி வருகிறது எமது மன அணைக்கட்டு.

 

Brandi-flatwater-interval

இதற்கு மேல் சொல்லவேண்டுமானால் ஆங்கங்கே எல்லா கட்சிகளும் அதன் தலைவர்களும் தர்மபுரி, மேச்சேரி, குஞ்சாண்டியூர், புதுசாம்பள்ளி, மேட்டூர் ஆகிய இடங்களில் இன்னும் ஒருவாரத்துக்கும் குறைவான நாட்களுடைய பிரச்சார இயக்கத்தில் சுழன்றுவருகிறார்கள். நேற்று இந்தப்பக்கம் அன்புமணியும், தர்மபுரியில் அம்மா ஜெவும் நேற்று குஞ்சாண்டியூர் மற்றும் மேச்சேரி  பகுதிகளில் ஸ்டாலினும் பேசிச் சென்றுள்ளனர்.

ஏனோ இம்முறை இவர்களை இவர்கள் பேசும் பேச்சை கேட்டு ஒரு பதிவிட வேண்டும் என்ற அவா கூட எழவில்லை. ஜெ வின் குரல் கோரிக்கையாக வேண்டுகோளாக பண்பலைகளிலும் செல்பேசிகளிலும் ஹெலிகாப்டரில் இருந்து இறங்குவது போல 23 நொடிகள் இறங்கி வருகிறது. விஜய்காந்த், ஸ்டாலின் போன்றோரின் விளம்பரங்களும் விதிவிலக்கல்ல.

நேற்று காதில் விழுந்தது: அன்புமணியின் குரல் வண்டியை நிறுத்தி: 5 ஆண்டு காலம் மத்திய மந்திரியாய் இருந்தவன்,பான் பராக் குத்கா போன்றவற்றை தடைசெய்தவன்(?) 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்தவன் எனச் சொல்லி வாக்களித்தால் இந்தியாவில் இன்னும் நிறைய செய்வேன் என சொல்லி சென்றார். எப்படியும் மோடி பிரதமரானால் மறுபடியும் சுகாதாரத் துறையை பிடித்து விடலாம் ஜெயித்தால்  என நினைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்கள் செய்யும் புதிரும் வெளிச்சமும் மே 16ல் வெட்டவெளியாகிவிடும்.

அம்மா, ஜெ என்றவர் உங்கள் அன்புச் சகோதரி என அழைக்க ஆரம்பித்திருக்கிறார். இவர் கடுமையாக மோடியை சாடுவது போல (நடிக்கிறார் என்கிறார்கள்) இருக்கிறது இவர் பேச்சு எல்லாம், தேர்தலுக்குப் பிறகு மக்களை எல்லாம் மடையர்களாக்கிய பிறகு இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட திருப்பங்களில் யூ டர்ன் எடுப்பார்கள் எடுப்பதை சில வாரஙகளில் பார்க்கலாம்.

திருமா என்ற மானிடன் தொகுதி வாக்குக்காக தீட்சிதர்களுக்கும் எனக்கும் எந்த வித பகைமையும் இல்லை,பிணக்கும் இல்லை கருத்து வேறுபாடும் இல்லை என சிதம்பரம் தொகுதியில் அவர்களுடன் நின்று கொண்டு அவர்கள் போட்ட சால்வையை போர்த்தியபடி இந்தியாவின் பாரம்பரிய பழம்பெரும் கோயிலின் சரித்திரத்தை உச்சநீதிமன்றம்  சீர் குலைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு வாக்குகளுக்காக சிறுமை படுத்திக் கொள்வது நன்றாக அப்பட்டமாக தெரிகிறது.

இப்படி இவர்கள் எல்லாம் வாக்குகளுக்காக இவ்வளவு கீழ்த்தரமாக தேர்தலின் போதுமட்டும் கீழ் இறங்குவதும் வெல்வதற்காக, வென்று முடித்தால் மேல் ஏறுவதுமாக வாழ்வது முரண்படவில்லை? இதற்கு வேறு ஏதாவது கண்ணியமான பிழைப்பு ஏதும் செய்து வாழமுடியாதா? அரசியல், ஆட்சி என்ற இந்திய முறைகள்தான் எளிய வழியில் பிழைக்கும் நெறியா?  வழியா? முறையா?

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

அம்மா தாயே என்னும் சகோதரி,திருமா என்ற மானிடன், அன்பு மணி என்னும் பண்புமணி.(MONEY)


இந்த உலகில் எல்லோருக்கும் இடம் இருக்கிறது -Charlie Chaplin

ஏப்ரல் 16, 2014

CHAPLIN

மன்னித்துக்கொள்ளுங்கள், நான் ஒரு பேரரசனாக ஆக விரும்பவில்லை. அது என்னுடைய வேலையும் அல்ல. நான் யாரையும் ஆளவோ வெற்றிகொள்ளவோ விரும்பவில்லை. முடிந்தால், அனைவருக்கும் உதவி செய்யவே விரும்புகிறேன்.

யூதர்கள், யூதரல்லாதவர்கள், கருப்பினத்தவர், வெள்ளையினத்தவர் என்று அனைவருக்கும் உதவவே விரும்புகிறேன். நாமெல்லோரும் ஒருவொருக்கொருவர் உதவிசெய்துகொள்ளத்தான் வேண்டும். மனிதர்கள் அப்படித்தான். நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் மகிழ்ச்சியை ஆதாரமாகக் கொண்டுதான் வாழ வேண்டும், அடுத்தவர்களின் துன்பத்தை ஆதாரமாகக் கொண்டல்ல. நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் வெறுக்கவும் துவேஷம் கொள்ளவும் வேண்டியதில்லை.

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் இடம் இருக்கிறது. நம்முடைய நல்ல பூமி வளம் மிக்கது, எல்லோருடைய தேவைகளையும் நிறைவேற்றக் கூடியது.

தொலைத்துவிட்ட பாதை

வாழ்க்கைப் பாதை என்பது சுதந்திரமானதாகவும் அழகானதாகவும் இருக்க முடியும். ஆனால், அந்தப் பாதையை நாம் தொலைத்துவிட்டோம். மனிதர்களின் ஆன்மாக்களில் பேராசை விஷத்தைக் கலந்துவிட்டது. அந்தப் பேராசை, வெறுப்பால் இந்த உலகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டது, துன்பத்திலும் துயரத்திலும் நம்மைத் தள்ளிவிட்டது. வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.

ஆனால், நாம் நமக்குள்ளே முடங்கிப்போயிருக்கிறோம். ஏராளமாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும் என்ன பயன், நாம் வறுமையில்தான் உழன்றுகொண்டிருக்கிறோம். நமது அறிவு யார் மீதும் நம்பிக்கையற்றவர்களாக நம்மை ஆக்கிவிட்டது. நமது புத்திசாலித்தனம் கடின மனம் கொண்டவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் நம்மை ஆக்கிவிட்டது. மிதமிஞ்சி சிந்திக்கிறோம், மிகமிகக் குறைவாக அக்கறைகொள்கிறோம். இயந்திரங்களை விட நமக்கு அதிகம் தேவை மனிதமே.

புத்திசாலித்தனத்தைவிட நமக்கு அதிகம் தேவை இரக்கவுணர்வும் கண்ணியமுமே. இந்தப் பண்புகள் இல்லையென்றால், வாழ்க்கை கொடூரமானதாக ஆகிவிடும். அப்புறம் நமது கதை அவ்வளவுதான்.

கண்டுபிடிப்புகளின் அடிப்படை

விமானமும் வானொலியும் நம் அனைவரையும் மிகவும் நெருங்கி வரச் செய்திருக்கின்றன. மனிதர்களின் நற்குணத்தையும், உலகளாவிய சகோதரத்துவத்தையும், அனைவரது ஒற்றுமையையும் வலியுறுத்துவதுதான் இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படை இயல்பே.

இந்த உலகில் உள்ள கோடிக் கணக்கானவர்களை என் குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது. நம்பிக்கையை இழந்த ஆண்கள், பெண்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் என்று கோடிக் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. அதாவது, அப்பாவி மக்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்துவதும் சிறைப்படுத்துவதுமான ஒரு சித்தாந்தத்தின் பலிகடாக்களை எனது குரல் இந்தத் தருணத்தில் சென்றடைகிறது.

சுதந்திரம் ஒருபோதும் அழியாது

நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லுகிறேன்- நம்பிக்கை இழக்காதீர்கள். நம்மை ஆட்கொண்ட துன்பம் என்பது வேறொன்றுமில்லை, பேராசையின் விளைவுதான் அது. மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சும் மனிதர்களின் கசப்புணர்வுதான் அது. மனிதர்களின் வெறுப்பு கடந்துபோகும், சர்வாதிகாரிகள் இறந்துவிடுவார்கள், மக்களிடமிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட அதிகாரம் மக்களிடமே திரும்பும். மனிதர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்வது நீடிக்கும்வரை, சுதந்திரம் என்பது ஒருபோதும் அழியாது.

நீங்கள் இயந்திரங்கள் அல்ல

போர்வீரர்களே, கொடூரர்களிடம் உங்களை ஒப்படைக் காதீர்கள். அவர்கள் உங்களை வெறுப்பவர்கள், உங்களை அடிமைப்படுத்துபவர்கள், உங்கள் வாழ்க்கையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தக்கூடியவர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், எதை உணர வேண்டும் என்றெல்லாம் சொல்பவர்கள்! உங்களைப் பழக்குவார்கள், உங்களைக் குறைவாக உண்ண வைப்பார்கள், கால்நடைகளைப் போலவே உங்களை நடத்துவார்கள்.

உங்களைப் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையாக்குவார்கள். மனித இயல்பற்ற அவர்களுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். இயந்திர மனங்களையும் இயந்திர இதயங்களையும் கொண்ட இயந்திர மனிதர்கள் தான் அவர்கள். நீங்களெல்லாம் இயந்திரங்கள் அல்ல, நீங்களெல்லாம் கால்நடைகள் அல்ல, நீங்கள் மனிதர் கள்! மனிதம் மீதான அன்பு உங்கள் இதயத்தில் இருக்கிறது. நீங்கள் யாரையும் வெறுப்பதில்லை. நேசிக்கப்படாதவர்கள்தான் வெறுப்பார்கள் – நேசிக்கப் படாத, மனித இயல்பற்ற மனிதர்கள்தான் அவர்கள்! போர்வீரர்களே, அடிமைத்தனத்துக்காகப் போரிடாதீர்கள்! சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்!

கடவுளின் சாம்ராஜ்யம்

17-வது அதிகாரத்திலே புனித லூக்கா சொல்லியிருக்கிறார்: “கடவுளின் சாம்ராஜ்யம் மனிதனுக்குள்தான் இருக்கிறது.” ஒரு மனிதனுக்குள்ளோ, ஒரு குழுவுக் குள்ளோ என்பதல்ல இதன் அர்த்தம். எல்லா மனிதருக் குள்ளும் என்பதுதான் இதன் அர்த்தம்! உங்களுக் குள் இருக்கிறது என்பதுதான் அர்த்தம்! மக்களே, உங்களிடம்தான் இருக்கிறது சக்தி – இயந்திரங்களை உருவாக்குவதற்கான சக்தி.

மகிழ்ச்சியை உருவாக்கு வதற்கான சக்தி! இந்த வாழ்க்கையைச் சுதந்திரமான தாகவும் அழகானதாகவும் ஆக்குவதற்கான சக்தியும், இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக்குவதற்கான சக்தியும் மக்களே உங்களிடம்தான் இருக்கின்றன.

புதியதோர் உலகைப் படைப்போம்!

அப்படியென்றால், ஜனநாயகத்தின் பெயரால், நாமெல்லோரும் அந்த சக்தியைப் பயன்படுத்துவோம், நாமெல்லோரும் ஒன்றுசேர்வோம். புதியதோர் உலகைப் படைப்பதற்காக நாமெல்லோரும் போராடுவோம். மனிதர்களுக்கு வேலை பார்ப்பதற்கான வாய்ப்பையும், இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும் முதியவர்களுக்கு அரவணைப்பையும் தரக்கூடிய கண்ணியமான அந்தப் புதிய உலகத்துக்காகப் போராடுவோம்.

இதையெல்லாம் வாக்குறுதிகளாகக் கொடுத்துதான் கொடூ ரர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள். அவர்கள் சொன்ன தெல்லாம் பொய்! அவர்கள் தங்களுடைய வாக்குறு திகளை நிறைவேற்றவில்லை, அவர்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது!

சர்வாதிகாரிகள் தங்களை விடுவித்துக்கொள்வார்கள். ஆனால், மக்களை அடிமைப்படுத்திவிடுவார்கள்! அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாம் ஒருங்கிணைந்து போராட இதுவே தருணம்! நாடுகளுக்கிடையிலான பாகுபாடுகளைத் தகர்க்கவும், பேராசையையும் வெறுப் பையும் சகிப்பின்மையையும் குழிதோண்டிப் புதைக்கவும் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராடுவோம், புதிய உலகைப் படைக்க.

அறிவியலும் முன்னேற்றமும் மனிதர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதையே நோக்க மாகக்கொண்டிருக்கும் அந்த உலகத்துக்காக, பகுத்தறிவின் உலகத்துக்காக அனைவரும் போராடுவோம். வீரர்களே, ஜனநாயகத்தின் பேரால், அனைவரும் ஒன்றுசேர்வோம்!

(ஹிட்லரைப் பகடிசெய்து சார்லி சாப்ளின் 1940-ம் ஆண்டு உருவாக்கிய ‘த கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தின் இறுதியில் சாப்ளின் ஆற்றும் உரை.)

தமிழில்: ஆசை

நன்றி : தமிழ் இந்து.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


கண்டு பிடிப்புகளை ஏன் கண்டு கொள்ள மறுக்கிறார்கள்?

ஏப்ரல் 15, 2014

07th_inadequate_07_1832458e

சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோ கண்டுபிடிப்பின் பின்னணியில் உருக்கமான தகவல்கள் உள்ளன.

இக்கருவியைக் கண்டுபிடிக்க மூளையாக செயல்பட்ட எம்.மணிகண்டன் (43), ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கோவில்பட்டிக்கு 2003-ம் ஆண்டில் பிளம்பர் வேலைக்கு வந்தேன். அப்போது, எனது 3 வயது மகன் தினேஷ்பாபுவை அழைத்து வந்திருந்தேன். நான் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகன், அங்குள்ள ஆழ்துளைகிணற்றில் விழும் தருவாயில் தடுத்து காப்பாற் றினேன். அதுதான் எனது மனதில் பொறியாக உருவெடுத்தது.

பலியைத் தடுக்க…

நாட்டில் பல்வேறு சம்பவங்களில் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்களும் என்னை வெகுவாக பாதித்தன. அவர்களைக் காப்பாற்றும் வகையில் கருவி யைக் கண்டுபிடிக்க வேண்டும் என, அப்போதிருந்தே முயற்சி செய்தேன். எனது செலவில் தொடக்கத்தில் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் குழந்தைகளை மீட்பதில் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் படிப்படியாக தொழில் நுட்பங்களைப் புகுத்தி, கருவியை நவீனப்படுத்தினேன்.

நான் பணிபுரியும், மதுரை டி.வி.எஸ். கம்யூனிட்டி கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி செய்தனர். அதன் அடிப்படையில் கருவியை நவீனப்படுத்தி, தற்போது குழந்தையை மீட்டுள்ளது  சந்தோஷமளிக்கிறது.

கண்காட்சியில் பரிசு

இக்கருவியின் மாடலை, எனது மகன் அறிவியல் கண்காட்சியில் வைத்து மாநில அளவில் பரிசும் பெற்றுள்ளான். இக்கருவியை அறிமுகம் செய்தபோது, அரசுத் துறைகள் வரவேற்பு அளிக்க வில்லை. கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத் துறைக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பி யிருந்தேன். இதற்காக எனது சொந்த காசை செலவிட்டு சென்னைக்குச் சென்று, கருவியின் செயல்விளக்கத்தை செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப் படவில்லை.

நானும் என்னோடு இருப்ப வர்களும் முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி, சேவையாகவே இப்பணியில் ஈடுபடுகிறோம். எங்களுக்குத் தகவல் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றுக்குள் மணல் விழுவது உள்ளிட்ட காரணங்களால் போர் வெல் ரோபோ மூலம் நாங்கள் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வந்தது.

அனைவரும் ஒத்துழைப்பு

சங்கரன்கோவில் பகுதியில் முழுமையாக அனைத்து தரப்பி னரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணியை மேற்கொண்டதால், சிறுவனை உயிருடன் மீட்டோம். இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பாக தீயணைப்பு நிலை யங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும் என்றார் மணிகண்டன்.

1,000 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையையும் மீட்கலாம்!

ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற மதுரையைச் சேர்ந்த எம்.மணிகண்டனால் உருவாக்கப்பட்டுள்ள போர்வெல் ரோபோ கருவியின் செயல்பாடு குறித்து அவரே விளக்குகிறார்:

ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

thanks: the Thamil Inthu.
மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

 


அரசியல் வாதிகளின் அந்தப்புரங்கள்:

ஏப்ரல் 14, 2014

check_order_of _your warrirors and if you have 4 shots and very weak enemy that can be killed in one shot begin rearanging non-ranged warriors for 2nd enemy

 

 

அரசியல் வாதிகளின் அந்தப்புரங்கள்: நமோவின் யசோதா பென்,நேருவுடன் மௌண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா,கருணாநிதி,சசிதரூர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்களின் கைவண்ணங்கள் நாட்டை பாதிக்கின்றனவா? தனிப்பட்ட வாழ்வின் ஆராய்ச்சி அவசியமா? பொது வாழ்வுக்கு வரும் பிரமுகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் தூய்மை கடைபிடிப்பது அவசியமா என்ற சிக்கலான கேள்விகளுக்கு உலகளாவிய அளவிலான கேள்வி பதில் சர்ச்சைக்கு இன்று வரை அறுதியிட்ட பதில் இல்லை என்பதே நிதர்சனம்.

63 வயது நமோ 62 வயதான யசோதா பென்(ண்) பற்றி அவர்கள் 15 வயதுக்குள் செய்து கொண்ட மணம் பற்றிய சர்ச்சை அவசியமா? என்றால் அவசியம்தான் அவர் பிரதமராக வாய்ப்பு இருக்கும்போது என்கிறது ஒரு பக்கம். அதைப்பற்றிய சர்ச்சை அவசியமில்லை அவர் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றித்தான் இனி நாடு கவலை கொள்ள வேண்டும் என்பது மறு பக்கம்.

இது போன்ற தனி மனித வாழ்வின் இரகசியங்களை அலசி வெளிக்கொண்டு வருவதே இன்வெஸ்டிகேசன் ஜர்னலிஸம், புலனாய்வு பத்திரிகை இதழியலின் பெரும்பானமையான நோக்கம் என்கிற பத்திரிகையாளர்களும் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதான வாழ்வுமுறைதான் காமராசர் போன்ற கர்ம வீரர்களின் வாழ்வு முறையும், எளிமை கடைப் பிடித்த பொதுவுடைமைக்கட்சிக்காரர்களான ஜீவானந்தம், கல்யாணசுந்தரம், நல்லகண்ணு , ஜோதிபாசு, காங்கிரஸ் கட்சி சார்ந்த லால்பகதூர், காந்தி, வினோபா,படேல், போன்ற உண்மையான தலைவர்களின் வாழ்வாகும்.

மேலை நாடுகளில் அது இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனிதஒழுக்கம் போன்றவற்றிற்கு பொதுவாழ்வில் பெரிதான பங்கு இல்லையென்ற போதிலும் அவர்களைப் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவதில் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்ற நிலையை மைக்கேல் ஜாக்ஸன், டையானா போன்றோர் வாழ்வு உலகுக்கு கொண்டு சேர்த்தது.

இந்தக் கதையின் நாமறிந்த கதாபாத்திரங்களாக நமது நாட்டை கட்டமைத்ததாக சொல்லப்படும் நேருவின் மனைவியான கமலா நேரு 37 வயது கூட வாழாமல் மறைந்தவுடன் நேரு தமது மகள் இந்திரா பிரியதர்சினியுடன் வாழ்ந்த பெரும் புகழ் பெற்றது என்றாலும் இலை மறை காய் மறையாக இவருக்கும் மௌண்ட்பேட்டன் மனைவிக்கும் தொடர்பு இருந்திருக்கிறது என்ற செய்தியும் இல்லாமல் இல்லை. எனவே இவரது தனிப்பட்ட வாழ்வில் இவரது உடலும் மற்றொரு உறவுக்காக, உடலுக்காக அவ்வப்போது ஏக்கப்பட்டதை இவரது வாழ்வு வெளிப்படுத்தி உள்ளது எனினும் இவர் ஆட்சி இந்தியாவுக்கு கிடைத்த நல்லாட்சி என்றே பெரும்பாலும் பேர் வழங்குகிறது சீனப்போரில் இந்தியா தோற்றபோதிலும் கூட, ஆலைகளும், அணைகளுமே இந்த நாட்டின் கோயில்களாக இருக்கவேண்டும் என்ற கருத்துடன் இவர் ஆண்டதால்…மேலும் இறப்புக்கு பின்னே என்ன இருந்தாலும் அதைப்பற்றிய கவலையோ சிந்தனையோ எனக்கில்லை என இருக்கும்போதே உறக்கம் தவிர்த்தும் கூட இவர் உழைத்ததால்…

இப்படி ஒவ்வொரு பெயராக கீழ் இறக்கிக் கொண்டே வந்தாலும் கூட கருணாநிதி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் போன்ற நமது தமிழகத்தை ஆண்டவர்கள் தனிப்பட்ட வாழ்வெல்லாம் பிறர் பின் பற்றத் தக்க வாழ்வாய் இல்லை. அனைவருமே காமக்களியாட்டத்தில் இப்படி அப்படி இருந்தவர்கள்தான் என்பதை இவர்களது தனிப்பட்ட வாழ்வை உற்று நோக்கினால் அறிந்து கொள்ள முடியும். எம்.ஜி.ஆர் , கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய எல்லாருக்குமே ஒன்றுக்கு மேற்பட்ட உறவுகள் ஏன் பல உறவுகள் இருந்திருக்கின்றன என்கின்றன வரலாறுகள். இதை வரலாறு என்று கூட சொல்ல முடியாது.

நிலை இப்படி இருக்கையில் சசிதரூர், போன்ற கனவான்கள் அழகாய் இருக்கும் பெண்களை எல்லாம் ஒரு இராசா போல கொய்து விட நினைக்கும் காங்கிரஸ்காரர்கள் நிறைய இருப்பதாய் அந்தக் கட்சியின் வரலாறுகள் சொல்லி வருகின்றன. பெற்ற மகனையே தம் பிள்ளை இல்லை என்னும் திவாரிகளும் இந்த கட்சி வழியில் சிறந்த நிர்வாகிகள் எனப் பெயர் பெற்று மாநில ஆளுனர், மத்திய அமைச்சர் வரை பதவி வகித்தவர்கள்தான்.

இந்நிலையில் கருணாநிதி போன்றோர் நமோ உண்மையை மறைத்து விட்டார் என அவர்மேல் சாடுவது: கண்ணதாசன் சொன்ன கதைக்கு வண்ணம் பூசுவதாக உள்ளது. அதாவது: இவருக்கு அனைவரும் அறிந்து சில மனைவிகள், அனைவரும் அறியாமல் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பது அவருக்கும் அவர்களுக்கும் தான் தெரியும். அது மட்டுமில்லாமல் நடிகைகளுடன் அவ்வப்போது சேர்ந்து கொள்வதாகவும் உண்டு. அது மட்டுமின்றி காசுக்காக உடலை விற்ற பெண்ணிடம் கூட காசு கொடுக்காமல் இவர் ஏமாற்றி அனுப்பிய கதையை இவரது தோழராக இருந்த கண்ணதாசன் தமது வனவாசம், மனவாசத்தில் குறிப்பிடுகிறார். இவர் சொல்கிறார் மோடி மறைத்து விட்டார் என்பதாக. அதுதான் நகைப்புக்குரிய செய்தியே.

இவர்கள் அனைவருமே தேர்தல் காய்ச்சலில் ஒவ்வொருவரைப்பற்றியும் தரக்குறைவாக விமர்சித்து தமரதுதகுதியை வெளிப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். மக்களுக்கு இது ஒரு வாய்ப்பு சொல்லப்போனால் அரிய வாய்ப்பு அறிவுள்ள மக்களுக்கு இவர்கள் பற்றி யாவும் அறிந்து கொள்ள. அப்படி அறிந்து கொண்டவர்களாவது இவர்களது தலைமையை விட்டு விலகுவார்கள் எனில் அதனால் இந்த நாடு திருந்தலாம். ஆனால் இங்கு எல்லாமே அடிச்சு வைச்ச பிள்ளையார்கள். அப்படியே இருக்கிறதுகள் . மேலும் சொல்லப் போனால் ஏதோ ஒன்றிற்கு அடிமையான மாண்டூகங்கள்.

எனவே நமோ போன்றோர் சிறு வயதில் என்ன சொன்னார், என்ன செய்தார் என்பதை விட நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார்? இவர் பிரதமராகுமளவு நாட்டை வழி நடத்தி செல்லுமளவு வல்லமை நல்லமை உள்ளவரா ? அர்விந்த் கெஜ்ரிவால் சொல்வது போல அம்பானியின் கார்பரேட் ஆள்தானா,? தனிவுடமைப் பாட்டுதானே அன்றும் இன்றும் என்றும் பி.ஜே.பியும், காங்கிரஸ் கட்சியும் பாடும், அருண் ஷோரி போன்ற பத்திரிகையாளரை நன்றாக செயல்படும் பொது நிறுவனங்களை உடைத்து தனியாருக்கு விற்பதற்கென்றே ஒரு துறையை அமைத்து செயல்பட்டதும் இந்தகட்சிதானே? அடுத்து தங்க நாற்கர சாலை என்று தனியாருக்கு தாரை வார்த்த செயலை செய்து முடுக்கி விட்டதும் இந்த கட்சிதானே? போன்ற கேள்விகளை வைப்பது தான் பொருத்தமாய் இருக்குமே தவிர அவர் பால்ய விவாகம் செய்தவர் என்ற தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் தேவையில்லை என்பதே எமது கருத்தும். எமது தளத்தின் கருத்தும்.

தனிப்பட்ட வாழ்வின் மேல் தான் பொதுவாழ்வே இருக்கிறது என்ற போதிலும் சிறு சிறு தவறுகளை எல்லாம் ஊதி பெரிதாக்குவது காற்றுள்ள பலூனை ஊதி உடைப்பதாகிறது.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


மறுபடியும் பூக்கும்வரை: கவிஞர் தணிகை.

ஏப்ரல் 10, 2014

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கோம்பூரான் காடு:ஸ்ரீ கபாலி தியேனேஸ்வரர் ஆலயம் சுவாமி சிலைகள் உபய பங்கேற்பு அழைப்பிதழ்.

 

Shiv_Lingam

சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம், கோம்பூரான் காடு, ஸ்ரீ கபாலி தியானேஸ்வரர் ஆலயம் மிக விரைவாக உருப்பெற்று வருகிறது. இதற்கு ஸ்தாபகராக சிவத் தொண்டர் வி.க.கிருஷ்ணன் அவர்கள் தமது உணவு, உடை, உறக்கம், காலணி பற்றி கூட கவலையின்றி உடல் பொருள் அத்தனையும் குழைத்து ஆன்ம நேய வெளிப்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மாவையும் அர்ப்பணித்துவருகிறார். இவருக்கு உதவும் பொருட்டு ஒரு குழுவினர் இப்போது தயாராகி உள்ளனர். அந்தக் குழுவினர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்றை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த கோயில் வளாகத்தில் நடத்தி வருகிறார்கள்.தேவையேற்படும்போது சிறப்புக் குழுவின் கூட்டமும் நடைபெற்று வருகிறது.

அதில் கடந்த ஞாயிறு அன்று: உயர் மட்டக் குழு ஒன்றை எம்.சி.பச்சையப்பர் என்பவர் தலைமையிலும், மக்கள் தொடர்புக்குழு ஒன்றை பல்லவா கணேசன் அவர்கள் தலைமையிலும் அமைத்துள்ளனர். இதில் நிறைய உறுப்பினர்கள் அடங்கியுள்ளனர். அவற்றில் சில குறிப்பிடத்தக்க கவுன்சிலர்கள், தியாகு, சுரேஷ், சிவகுமார்,முருகன் போன்றோரும் பாலாஜி நடேசன், பவர் பழனி, இரத்தின வேலு, கௌரி அன் கோ பழனிசாமி. சின்னக்கண்ணு என்கிற காளியப்பன், பொன்னுசாமி, பெருமாள்,வனக்குழு வெங்கடாஜலம்,குழந்தைவேலு, பாலசுப்ரமணியம், சென்னியப்பன், அக்னி சேகர், நாகராஜ்,மகேந்திரன், வேலு என்கிற இராஜா, ராஜேந்திரன், ஆர்.பழனி, கணபதி, போன்ற 13 ஊர்களின் பிரதிநிதிகள் கூடி கோயில் வளர்ச்சி பற்றி சுமார் 2 மணி நேரம் விவாதித்தனர்.

கூட்டத்தில் ஏக மனதாக சிட்கோ தலைவர்: மாதப்பன் தலைவராகவும், சரவணன் செயலாளராகவும், கவிஞர் தணிகை மணியம் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த பொறுப்புகளுக்கு உதவும் பொருட்டு இணை, துணை நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். அது மட்டுமின்றி கடந்த திங்கள் அலுவலக அறை ஒன்றும் அதற்காக ஒதுக்கப்பட்டு கூட்டம் நடத்த 30 இருக்கைகளும், ஒரு அலுவலக பீரோ மற்றும் மேஜை ஆகியவற்றுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 06.14.2014ல் நடந்த கூட்டத்தில் ஒரு அழைப்பிதழும்  அச்சடிக்கப்பட்டு சுற்றறிக்கைக்கு விடப்பட்டது. அதில்:

அன்புடையீர்;
நமது பகுதியில் ஸ்ரீ கபாலி தியானேஸ்வரர் ஆலயப்பணிகள் மிக விரைவாக நடபெற்று வருவதை அனைவரும் அறிந்ததே!

இந்த ஆலயத்தில் கன்னி மூல கணபதி, ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன், ஸ்ரீ முருகன், ஸ்ரீ ஐய்யபன் சுவாமி, நவக்கிரகங்கள், கால பைரவர் ஆகிய தனித்தனி ஆலயங்களும் அமைந்து வருகின்றன.

எனவே இந்த ஆலயத்தில் அமைய உள்ள சிவலிங்கம், புவனேஸ்வரி அம்மன், கன்னி மூலகணபதி, முருகன், தட்சிணாமூர்த்தி, ஐய்யப்பன், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நந்திகேஸ்வரர், பலிபீடம், நவக்கிரகங்கள், பிரம்மா,விஷ்ணு, சூரிய சந்திர துவாரக பாலகர்கள், கொடிமரம், உற்சவ மூர்த்தி, ருத்திராட்சத் தேர் மற்றும் நான்கு நுழைவாயில்களுடன் அமையவிருக்கும் பணிகள் இடம் பெறுகின்றன.

இந்த புனிதமான அறப்பணியில் தாங்களாக முன் வந்து ஆலயப் பணிகள், விக்கிரகங்கள், சுவாமி சிலைகள், ஆலயத்தேர் ஆகியவற்றில் பொருளாதாரப் பங்கெடுத்துக்கொண்டு , தங்கள பெயரை பதித்துக் கொண்டு சிவன் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு திருப்பண்க்குழுவின் சார்பாக பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

சித்திரை மாதம் 12 ஆம் நாள் 25.04.2014 வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து சுவாமி சிலைகள் செய்ய முன்பணம் கொடுக்க புறப்பட இருப்பதால் உபயதாரர்கள் அனைவரும் பொருள் உதவியுடன் பங்கு பெற வேண்டுகிறோம். என்பதே அதன் வேண்டுகோளாகும்.

குறிப்பு: மகா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற இருப்பதால் நன்கொடையாளர்கள் மற்றும் உபயதாரர்கள் தங்களது பெயரை திருப்பணிக் குழுவிடம் பதிவு செய்து கொள்ளவும்.

இவண்:
திருப்பணிக்குழு
ஸ்ரீ கபாலி தியானேஸ்வரர் ஆலயம், கோம்பூரான் காடு.
தொடர்புக்கு: 94432 22868,86954 66644,80155 84566.

பி.கு: இதுவரை நன்கொடை கொடுத்தவர்களின் பட்டியலின் முதல் பகுதியை கிரானைட் கல்லில் பெயர் பதித்து கோயிலின் இராஜகோபுர உள்ளறையில் ஒட்டப்பட்டும் விட்டது.

இந்த பகுதியிலேயே இவ்வளவு சிறப்பாகவும் உயரமான இராஜகோபுரமுடையதாகவும் இத்தனை இந்துமதக் கடவுளர்களின் சிலைகளையும் உள்ளடக்கி, தேர் முதற்கொண்டு இதற்கே உரித்தானபடியும் உருவாகி வரும் கோயில் இந்த சிவன் கோயிலாகத்தான் இருக்க முடியும். எனவே இதைப் படிப்பவர்கள் கூட விருப்பமிருந்தால் இந்த அறப்பணியில் பங்கு பெறலாம். வாழ்வில் எதையாவது சாதிக்க வேண்டும், செய்ய வேண்டும் என்பவர்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சி இது. இதில் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு பங்கு பெற விரும்புபவர்களை இரு கரம் நீட்டி அன்போடு அழைக்கிறோம். இதன் முதல் தன்னார்வத் தொண்டராக இந்த சிவத் தொண்டர் : வெற்றி.கந்தசாமி.கிருஷ்ணன் அவர்களுக்கு: இராஜ இரத்தினம் என்ற மனிதர் தம்மை இணைத்துக் கொண்டுள்ளார் எனபதும் குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


உச்ச நீதிமன்றம் 3 வாரம் ஜெ வழக்கை நிறுத்தி வைத்தது சரியா?

ஏப்ரல் 9, 2014

nixon

 

 

உச்ச நீதிமன்றம் 3 வாரம் ஜெ வழக்கை நிறுத்தி வைத்தது சரியா?சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் கோணல்,சங்கரமடம் சங்கரராமன் கொலை வழக்கில் சூன்யம்,இப்போது பெங்களூரில் ஜெ வழக்குக்கு 3 வாரத் தடை இதெல்லாம் நீதியின் பால் மக்களுக்கு இருக்கும் நேர்மையை நீர்த்துப் போகச் செய்கிறது.

எம் வேட்பாளரைக் கை வைத்தால் மாவட்டம் எரியும் என காடுவெட்டி குரு எச்சரிக்க, ஏன் அடிக்கிறார்கள் என அர்விந்த் கெஜ்ரிவால் திகைத்து ஒன்றும் புரியாமல் காந்தி சிலை இருக்குமிடம் செல்ல,மான நட்ட வழக்குதொடரமுடியுமா? என வைகோ கருணாநிதி பார்த்து கேட்க, என்றெல்லாம் தேர்தல் சூடு ஏற வெயில் காலத்தையும் மறந்து அரசியல் வாதிகள் கொடும் சொல் ஆண்டு கொண்டிருக்க இந்த தேர்தல் இதுவரை நடந்த இந்திய தேர்தல்களிலேயே மிகவும் தரம் தாழ்ந்து கொண்டிருக்க தேர்தல் ஆணையம் தமது பணிகளை தொடர்ந்து கொண்டிருக்க இன்று முதல் கட்ட தேர்தல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடந்து கொண்டிருக்க இதை எல்லாம் விட்டு விட்டு நாம் நீதி பற்றி ஏன் எழுத வேண்டியுள்ளது?

நீதிமன்றத்தின் படிக்கட்டுகள்தான் இந்திய மனிதர்களுக்கு இருக்கும் ஒரே கடைசி வாய்ப்பு.புகலிடம். அதிலும் கை விரிப்பு நடத்தும்போது. சுற்றியிருக்கும் தீப கற்ப இந்தியாவின் 3 கடல்களிலும் மாய்ந்து போவதன்றி வேறு வாழ்ந்து வழி என்ன?

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி- ஜஸ்டிஸ் டிலேயிடு ஈஸ் ஜஸ்டிஸ் டினைடு என்னும் வாசகம் நீதித்துறையில் மிகவும் பிரபலமானதாகும். ஏறத்தாழ ஜெ அம்மாவின் வழக்கு சொத்து குவிப்பு வழக்கு இந்த நாட்டில் நடந்து வரும்போதும் தற்போது உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை நடத்தாமல் 3 வாரம் ஒத்தி வைக்க பவானி சிங் என்னும் அரசு வழக்கறிஞருக்கு ஆதரவாக நீதி வழங்கியுள்ளது. இது படு அப்பட்டமாக ஜனநாயக கேலிக்கூத்தான தீர்ப்பாக உள்ளது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடக்க ஆரம்பித்து விட்ட இந்த காலத்தில் அதுவும் தமிழகத்தில் ஒரே கட்டத் தேர்தல் ஏப்- 24 வியாழன் அன்று நடைபெறுகிற நேரத்தில் எதற்கிந்த வழக்கு நடக்க தடை விதிக்கவேண்டும் எனில் அது எந்த வகையிலும் குற்றம் சாட்டப்பட்டவர்க்கு எதிரான தீர்ப்பை இந்த தேர்தல் காலத்தில், வாக்குப் பதிவு தினத்திற்குள்ளாக அல்லது அதற்கும் பிறகு தேர்தல் முடிவு அறிவிப்பு வரை கூட வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

9ஆம் தேதி யிலிருந்து எப்படியும் 3 வார காலம் என்றால் இந்த ஏப்ரல் முழுதும் போய்விடும் அதிலும் வாரவிடுமுறை மேலும் கோடையின் கொடுமை யாவும் இந்த வழக்கை, தீர்ப்பை பின்னுக்குத் தள்ளிவிடும். அது எந்த வகையிலும் வாக்களிக்கும் மக்களிடம் எதிர்விளைவை ஏற்படுத்தாது. அதன் பின் மோடி வந்தாலும் இந்த வழக்கு பெரிதான விளவை ஒன்றும் ஏற்படுத்தி விடாது என நோக்கர்கள் கருதுகிறார்கள்.

கொட நாடு, 898 ஏக்கர் நிலம், சிறுதாவூர் நிலம், 20 வருடம் நாளுக்கொரு சேலை கட்டினாலும் தீராத சேலைக் கடல், தங்கம், வெள்ளி, காலணிகள் மொத்த சொத்து மதிப்பு அதை பெற்ற விதம் செலவு செய்த விதம் யாவும் தனி நீதிமன்றம் பெங்களூருவில் வெளிவந்து கொண்டிருக்க , சென்னை வருமான வரி நீதிமன்றம் வேறு நேரில் ஜெ, தமது கணக்கை 1990,1991 போன்ற ஆண்டுகளில் சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக ஆஜராக சொல்லியிருக்க, ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறங்காமல் தேவதையாயும் கடவுளாயும் அவர் கட்சிகளுக்குத் தெரியும் அம்மா மீது அவர் செய்த ஊழல் சொத்து குவிப்பு வழக்கு நிரூபணப்படுத்தப்பட்டு குற்றவாளியாக தண்டனையும் வந்து விட்டால் என்ன ஆகும்? தமிழ் மண்ணே கடலுள் புகுந்து விடாதா? எனவே என்னவோ செய்து நீதியை வளைத்துவிடுகிறார்கள்.

சதாசிவம் என்ற நல்ல தமிழர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நல்ல பேருடன் 27.04.2014ல் பணி நிறைவு செய்ய இருக்கும் இந்த காலக் கட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தம் என்று ஒரு மக்களை நாட்டை அதன் நலனை சிறிதும் கருதாது ஒரு தீர்ப்பளித்ததோ அதற்கு இணையாக அதற்கு எந்தவிதத்திலும் குறைவின்றி இந்த ஜெ சொத்து குவிப்பு வழக்கிலும் 3 வாரம் நிறுத்தி வைக்கச் சொல்லி நீதியற்ற நீதி வழங்கி உள்ளது.

ஆமாம் பாமரனுக்குத்தான் நீதியும், தண்டனையும், பணக்காரருக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் அதுஎந்த வகையிலும் வளைந்து விடுமோ? அதென்ன நீதி? கண்களை மூடிக்கொண்டு… அப்படி கண்களை மூடிக் கொள்ள என்ன செலவாயிற்றோ? ஆக இந்த உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு ஒரு சட்ட வெங்காயமும் தெரியா பாமரர்க்குமே அநீதி என்று தெரிகிறது. இதற்கு எதற்கு உச்ச நீதிமன்றம் என்ற பேரும் நாட்டின் மிக உயர்ந்த அந்தஸ்தும் என்றுதான் தெரியவில்லை.இந்தியாவின் பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு துரோகம் இழைத்த சிதம்பரம் நடராஜர் கோயில் தீர்ப்பு போல இந்த தீர்ப்பும் ஏதோ பின் சூழ்ச்சியுடன் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே படுகிறது . கேட்டால் நீதியரசர் என்பவர்கள் நடுவர்கள் போல்தான் யார் பக்கம் சரியாக வழக்கு எடுத்துச் சொல்லப்படுகிறதோ அதன் அடிப்படையில்தான் நீதி இருக்கும் என்றும் சொல்லலாம். மொத்தத்தில் இந்த நாட்டில் அரசியல் வாதிகள் செய்யும் தவறுகள் தண்டிக்கப்படுவதேயில்லை.

எம்.ஜி.ஆர் ஒரு நல்லவர், என்று அரசியலில் பேர் எடுத்தவர் .அவரே மாயத்தேவர் என்னும் அவரது கட்சியின் முதல் பாராளுமன்ற வேட்பளராய் நின்று வென்றவரிடம் வெள்ளைத்தாளில் கையொப்பம் வாங்கினார் அவருக்குப் பின் கட்சியில் இணைந்த பெண் ஒருவருக்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு மாயத்தேவர் அதை மறித்து தமக்கு மந்திரி பதவி கிடையாதா எனக் கேட்டதற்கு என்று அவரே இப்போது கூறியுள்ளார். இத்தனைக்கும் அவரும் ஒரு வழக்கறிஞராக இருந்து அவரது கட்சிக்காரர்களுக்கே சென்னை நீதிமன்றத்தில் வழக்காடியவர் என்றிருந்தபோதும்.. ஆக இந்த 3 வாரத் தள்ளி வைப்பும் அந்த வழக்கு எப்படியும் 20 ஆண்டுகால கொண்டாட்டத்தையும் தொட்டுவிடும் முடியாமலே என்பதற்கும் அந்த கட்சிக்காரர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் உலகின் நீதிச்செம்மல்கள் என்ற பட்டத்தை கொடுத்தால் சரியாக இருக்கும் .

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்

ஏப்ரல் 8, 2014

Don’t-point-out-other-people’s-flaws-because-you’re-not-perfect-You-have-to-look-in-the-mirror-before-you-can-look-out-the-window-520x245

 

 

ஆற்றல் ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும்: அறிவியலும் இயற்கை /கடவுள்/இறை இரண்டுமே ஒன்றாகவே தெரிகிறது. அறிவியல் கண் கூடாக விரைந்து செயல்பட இறைச் சக்தி கட்புலனாகா உணர்வெளியில் ஒளியாய் நின்று செயல்படுகிறது ஆனால் இதன் ஆற்றல் நிரூபணமாக ஆண்டுகள் பல அல்லது காலம் அதிகம் தேவைப்படுகிறது

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அது ஒரு வகையில் மறையுமாயின் பிறிதொரு வகையில் வெளித் தோன்றும் என்பது ஆற்றல் மாறாக் கோட்பாடு.இது ஒரு அறிவியலின் அழிக்கலாக விதி இதை அனைவரும் அறிவோம். அதுவே இறைச் சக்தியாக ஆன்மாவின் வெளிப்பாடாகிறது பொறுமையுடன் சகிப்புத்தன்மையுடன் ஊன்றி கவனிக்கும் ஆதமயோகிகளுக்கு அல்லது ஆத்ம சாதகர்களுக்கு.

இவ்வளவு பீடிகை ஏன் எதற்கு என்று கேட்கிறீர்களா? ஒரு விளக்கிச் சொல்லத் தக்க விஷியம் நடந்திருக்கிறது எம் வாழ்விலும். அது அவ்வளவு பெரியதல்ல எனினும் குறிப்பிடத்தக்கதாய் இருப்பினும் உங்களிடம் பகிர்கிறேன்.

இந்த நாட்டின் மிக உச்சமான குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற நீத்பதிகள் ஆகியோரிடம் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்திய எனக்கு பல புத்தகங்களை வெளிக்கொணர முடிந்த எனக்கு இது பெரிய விஷியமேயில்லைதான். ஆனால் இந்த ஊரில் யாம் பிறந்த ஊரில் யேசு சொல்லியபடி”வீட்டிலும் சொந்த ஊரிலும் தவிர வேறெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவர் ” என்று சொல்லியதற்கேற்ப நாடெங்கும் சேவை செய்து இவரது சேவையும் மகாத்மா காந்தி, மதர் தெரஸா சேவை போன்றதுதான் என வார்த்தையாடப்பட்ட எனக்கு நாம் பிறந்த ஊருக்கும் ஏதாவதுசெய்யவேண்டுமே என ஆதங்கம். ஒரு முறை தபால் பெட்டி போராடி பெற்றுக் கொடுத்தேன். பல அவைகளில் இந்த ஊரைச்சார்ந்தவனாக அங்கம் வகித்து அடையாளம் பெற்றேன் . ஊருக்கு இருநாளுக்கொரு சேதியாக பொன்மொழிகளை பல ஆண்டுகளாக பல தொல்லைகளையும் தாண்டி என்றும் தொடர்கிறேன்.

ஆனால் ஊர் மாரியம்மன் திருவிழா நிகழ் குழுவில் அங்கம் வகித்து அளப்பரிய சேவையை பேர் வாங்க வேண்டும் என்ற சிறு துளி எண்ணமும் இல்லாமல் செய்து வருவது கண்டு ஊர்ப் பெரியவர்கள் உங்களை ஊர் மாரியம்மன் கோயிலின் திருவிழாக் குழுவில் பொருளாளாராக நியமிக்க உள்ளோம். இன்று ஊர் கூடுகிறது. நீங்கள் அன்று தவறாமல் வேறு எந்த நிகழ்விருந்தாலும் இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என கேட்டபோது இசைந்தேன். சுருக்கமாகவே சொல்கிறேன். அன்றைய கூட்டத்தில் எனது பெயர் முன்மொழியப்பட்டபோது சாதி, கட்சி ஆகியவற்றின் சார்பில்லாத காரணத்தால் வேறு நபரை தேர்வு செய்தனர். துணைத்தலைவர், தணிக்கையாளர் போன்றவரை தான் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. தலைவராகவோ, செயலாளராகவோ, பொருளாளராகவோ என்னை எப்படியும் தேர்வு செய்யக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர்.தகுதி உள்ள நபர்களை புறக்கணிப்பதும், தகுதியில்லா நபர்களை பொறுப்புக் கட்டில் ஏற்றுவதன் வரலாறு நாட்டுக்கும் வீட்டுக்கும் ஊருக்கும் விதிவிலக்கல்ல. அதன் விளைவை அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டும் . ஊரும் அனுபவித்தே வருகிறது.

வேறு எங்கு வேண்டுமானாலும் நீ பெரிய ஆளாக இருக்கலாம், ஆனால் இங்கு உன்னை அப்படி விடமாட்டோம்.என வெளிப்படையாகவே சூளுரை செய்து எமது செயலாற்றலை புறம் தள்ள தலைப்பட்டனர். நான் செய்தது: பெயருக்காக அல்லாமல் எல்லா பணிகளிலும் பங்கு கொண்டதுடன் முக்கியமாக ஊரின் வசூல் வருவாய் போன்றவற்றில் உண்டியல்,சாமி மாலைப்பணம், கடைசியில் பொருள்கள் ஏலம் வரை எல்லாவற்றிலும் ஒரு வெளிப்படைத்தனமையாக இருந்ததும் , பொதுமக்களின் வசூல் பணத்தில் எங்காவது தவறு நேர்ந்தால் அதை சுட்டிக் காட்டி அந்த தவறுகள் நேராவண்ணம் காக்க முனைந்ததும்.

இதன் எதிரொலியாக ஒரு அவையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் ஒரு தனிமனிதராக ஒருவர் எனது பெயர் இரண்டு இடங்களில் இடம்பெறுகிறது அப்படி கூடாது என தன்னிச்சையாக முறையின்றி நீக்கியதை தட்டிக்கேட்கப் போய் அவருக்கும் எனக்கும் வாக்குவாதம் முற்றி அது முறையில்லாமல் மதுவின் ஆக்கிரமிப்புடன் என்னை இரவு தாக்கவும் தயார் என்று வந்துவிட்ட நிலையிலும் சமாதானமாகசெய்து விட்டோம் என ஊர் பெரியவர்கள் எனது பணியும் சேவையும் முன்போல் தொடர வேண்டும் என வீடு தேடி வந்து கேட்டுக் கொண்டதை தவிர்க்கமுடியாமல் காவல் நிலைய வழக்கு என முடியாமல் பணியில்பங்கெடுத்துக் கொண்டும், அந்த தனிநபர் தமது கட்டுக்குள்ளேயே எல்லா விஷியங்களிலும் அங்கிருந்த திருவிழாக்குழுவை ஆண்டு கொண்டிருந்தார்.

இதன் எதிரொலியாக ஊருக்குள் நிறைய பிரச்சினை ஏற்பட்டு அவரே அந்த போராட்ட முறைமைகள் கண்டு கோவிலை இந்துசமய அறநிலையத் துறைக்கு அதாவது அரசுத் துறையின் ஆளுகைக்குள் கொண்டுவந்து தற்போதும் அவர்களே முன் நின்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஊர் கோயிலை அரசு எடுத்துக் கொண்டது என்ற பேரில். அதன் மிச்சமாகும் திருவிழாவின் மிச்சமாகும் பணத்தில் எல்லாம் ஏற்படுத்தும் சொத்துக்கள், கட்டடங்கள் கதை எல்லாம் வேறு. அவை பற்றி எல்லாம் இங்கு குறிப்பிட்டால் உங்களால் படிக்கவே பொறுமை இல்லா அளவு இந்த பதிவு மாறும்.

ஆனால் அப்படிக் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை அவர்கள் மின்வாரியத்துக்கு வாடகைக்கு தரமுயல பலரின் பலவிதமான போராட்டத்திற்கும் பிறகு அந்த கட்டடம் பெயரளவிற்கு 1 ரூ பெற்றுக்கொண்டு தானமாக அரசு மின் வாரியத்துக்கு விடப்பட்டுள்ளது. அதின் அடியேனின் பங்கும் அப்படி ஒன்றும் சாதாரண மானதல்ல. நிறைய போராட்டம் அந்த கோயிலின் நிர்வாகத்தை தூயமைப்படுத்துவதில் கோஷ்டிகளாக. கடைசியில் எல்லா யுக்திகளும் கையாளப்பட்டு அந்த கோயிலின் நிர்வாகம் அவர்கள் வசமே உள்ளது. உள்ளூர் எம்.எல்.ஏ, காவல்துறைத் தலைவர், கோட்டாட்சியர் இப்படி எல்லாம் விசாரணை முடிவு பெற்று சரியான நீதி நிலைநாட்டப்படவில்லை.

 

அடுத்த கதை: ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்த கோயில் பெயர்:முத்துக் குமார சாமி. அதன் முக்கிய புள்ளிகள் இருவர் சில கட்டுக்கள் நோட்டுக்களுடன் வந்து நீங்கள்தான் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என வீடு தேடி வந்து கேட்டுக் கொள்ள அது முறையாகத் தெரியாததால் அதையும் அடியேன் ஏற்கவில்லை. இன்று எமது நன்கொடையெல்லாம் பெற்ற அந்த கோயில் புதிதாகவே கட்டப்பட்டு வருகிறது . அதிலும் பெரிதான பங்கு பணிகள் எமக்கில்லை.

ஆனால் தற்போது ” சிவத் தொண்டர்: வி.கே. கிருஷ்ணன் அவர்கள் யாம் ஏற்கெனவே குறிப்பிட்டோம் நண்பர் ஒருவர் பெரிய அளவில் ஒரு “கபாலி தியானேஸ்வர ஆலயம்” ஒன்றை மிகுந்த போராட்டத்திற்கிடையே அமைத்துவருகிறார். அதற்கு பல ஊரின் மக்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். அந்த கோயிலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் மாதமிருமுறை அந்த கோயில் வளாகத்திலேயே நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிறு அன்று அந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்துடன், ஏகோபித்த நிலையில் இந்த அடியவனை அந்தக் குழுவின் கூட்டம் “பொருளாளராக” தேர்ந்தெடுத்துள்ளது.

அதன் ஸ்தாபகரும், நிறுவனரும், சிவத்தொண்டருமான வி.கே.கிருஷ்ணன அவர்கள், இவர் போன்ற மனிதரைப் பார்ப்பது அரிது. இவரை தக்கவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு ரூபாயை கூட தவறாமல் கணக்கில் ஒப்படைக்கும் நேர்மையாளர் எனவே இவர்தான் இவரே இந்த பொறுப்புக்கு மிக்க பொறுத்தமானவர் என்றெல்லாம் எம்மை கூச்சபடும்படியாக பாராட்டி தேர்வு செய்துள்ளனர். இன்று அதன் அலுவலக சாவி, பீரோ, டேபிள் அதன் சாவிக்கொத்தையும் ஒப்படைத்துள்ளனர். இந்தகோயில் சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமான மதிப்புடையாதாக மாறி வருகிறது. எல்லா வகையான பிரார்த்தனைக்கெற்ற உருவ வழிபாடும் இங்கு உண்டு. ஆனால் மூலவர்: தியான கபாலீஸ்வரர் என்ற லிங்க மூர்த்தி, புவனேஸ்வரி அம்மன், தட்சிணாமூர்த்தி, நவாக்கிரகங்கள்,சண்டிகேஸ்வரர், கொடிமரம், பலிபீடம், தனித்தனியே கன்னி மூல கணபதி, முருகன், அய்யப்பன் போன்ற ஆலயங்களும் காலபைரவர், விஷ்ணு என எல்லா மூர்த்திகளையும் உள்ளடக்கி தேர்நிலை, தேர், தியான அறை, மடப்பள்ளி பிரசாதம் கொடுக்குமிடம் போன்ற் எல்லா வசதிகளையும் உள்ளடக்கி, கருவறையும் மண்டபமும் கிராணைட் போடப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.

ஆக சொல்ல வந்தது: இயற்கை சக்தி உண்டு அது சிலருக்கு கடவுள், சிலருக்கு இறை, சிலருக்கு இயற்கை. மாரியம்மன் கோயிலில் எமக்கு கிடைக்காத வாய்ப்பு, ஒதுக்கி எம்மை இழிவு படுத்திய கோலம், முத்துக்குமார சாமி கோயிலில் ஏற்க முடியாமை, எல்லாம் மறைந்து பல ஆண்டுகளுக்க்கும் பிறகு இந்தகோயிலில் யாம் கோராமலே எமது வாழ்வின் நடைமுறை கவனித்து எமக்கு கிடைத்திருக்கிறது.

கடவுள் முறைகள், கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் நிறைய இருந்தாலும் சேவைக்குள் ஏது வேறுபாடு. சிவன் சொத்து குல நாசம் என்பார். இந்த கோயில் பணியில் நண்பர் அனுதினமும் போரடி நிறைய பிரச்சனைக்கிடையில் அவரது ஆத்மாவின் இறுதி வார்ப்பை நிகழ்த்திவருகிறார்.இலட்சக்கணக்கில் அவரது உழைப்பின் பயனை இட்டு வருகிறார். அவருடன் தோளுடன் தோள் நின்று இந்த கொடுத்திருக்கும் வாய்ப்பை சேவையை செய்வது எமக்கு பெருமையே. இதற்காக நேரம் பல தொல்லைகளின் எல்லா எல்லைகளையும் கடந்து பாடுபடுவேன் ஏன் எனில் அதுவே எமது மார்க்கம். இதிலிருந்து எந்தபொருளும் எவரும் எடுத்து செல்லல் பெரும்பாவம். இதில் பல பொதுமக்களும் தமது பொருளை நம்பிக் கொடுத்து வருகையில் இதிலிருந்து ஒரு துரும்பும் தனி நபரின் சுகபோகத்துக்கு சென்று விடக்கூடாது என்பதிலும் அனைவர்க்கும் இது ஒரு அருமையான தூய எண்ணங்கள சமர்ப்பித்து தம்து குறை களைய ஒரு அடைக்கலாமாக இந்த கோயிலும் இதன் எதிர்கால செயல் நடவடிக்கைகளும் மாறும் என்பதில் எமக்கு ஐயமில்லை. அதற்கு எமது உழைப்பு உச்சகட்டமாக இரவும் பகலுமாக இருக்கும். இருக்கிறது.

 

 

thought for the day903

ஒரு உண்மை உருப்பெற பல ஆண்டுகளாகிறது. அதுவரை பொறுத்திருக்கவேண்டியது நல்மனிதரின் கடமை.சேவை செய்வதற்கும் கூட.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


இந்தியாவின் ஆளும் வர்க்க சிக்கல்கள்:-

ஏப்ரல் 4, 2014

 

pa

 

இந்தியாவின் ஆளும் வர்க்க சிக்கல்கள்:- நாட்டை ஆள இந்த 16 ஆம் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்கள் ஒன்று கோடீஸ்வரர்கள் அல்லது குற்றவாளிகள்,போடதே ஓட்டு அது பூமிக்கே வேட்டு என்று வினவுதளம் சொல்ல முடியுமளவு சொல்ல எமக்கு எண்ணமில்லை எனினும் அம்பேத்கார், பகத்சிங்க், காந்தி சொன்ன சொல்லும், கண்ட கனவும் மக்களுக்கு எட்டாமல் விலகி விலகியே போய்க் கொண்டிருக்கிறதை இந்த தேர்தல்கள் வெளிப்படுத்துகின்றன.

எடுத்துக்காட்டாக டில்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொதுகளுக்கும் நிற்கும் வேட்பாளர்களாக 150 பேர் களம் இறங்குவதாகவும் அதில் 50 பேருக்கும் மேல் அலுவலக ரீதியாகவே தாம் கோடீஸ்வரர்தான் என்ற சொத்தை சாரி சொத்து மதிப்பை காண்பித்து வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்கின்றன செய்திகள். இதில் ஆம் ஆத்மிக்களும் விலக்கில்லை.அலுவலக கணக்கிற்கே இப்படி என்னும்போது தெரிவிக்காத கணக்குகள் பற்றியும் இந்தியாவின் இதர வேட்பாளர்கள் பற்றியும் நாம் சொல்ல அவசியமில்லை.

ஆ.ராசா கூட பரவாயில்லை டி.ஆர். பாலு 12 கப்பல்கள் வைத்திருப்பதாக அழகிரி கருணாநிதி சொல்லியிருப்பதாக செய்திகள்.இவரை மன்மோகன் மௌனகுருவே ஒரு போது ஏற்கவில்லை மந்திரியாக பதவி ஏற்க. ஏன் இவர்தான் சேது சமுத்திர நாயகன் என்றால் பாருங்கள். சேது சமுத்திரம் நல்ல திட்டம்தான் ஆனால் இவர்கள் எதற்காக செய்கிறார்கள்? செய்ய ஆசைப்படுகிறார்கள், மக்களுக்கா? நாட்டு நலனுக்கா? வீட்டு நலனுக்கா? சொந்தபந்தங்களுக்கா? உற்றார் உறவுகளுக்கா? நட்புக்கா? என்பதுதான் கேள்வி. மேலும் இது போன்ற ஒரு கட்சியில் அன்பழகன் போன்ற நபர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான் வியப்புக்குரிய விஷியம். அதுவும் சுயநலம் தானே?

அம்மாவின் கொடநாடு எஸ்டேட் 900 ஏக்கர் விஸ்தீரணத்துக்கும், சிறுதாவூர் பங்களாவும் தற்போது பெங்களூரு வழக்கை முடிக்க விடாமல் இழுக்குமளவு வல்லமையுடையவை.

இதே பாட்டாளி மக்கள் கட்சியை சார்ந்தோர்,வன்னிய சங்கம் சார்ந்தோர் எம்.ஜிஆர் ஆட்சி காலத்தில் கல்லெடுத்து அடித்து பேருந்துகளும் தனியார் வாகனங்களும் நொறுக்கப்பட்டவை எண்ணிலடங்கா. வேரோடு வெட்டுண்டு சாய்ந்த மரங்கள் எண்ணிலடங்கா. ஆனால் நேற்று அன்பு மணி இராமதாஸ் கார்மீதே கல்லடி விழுந்திருக்கும்போது அது பெரிய செய்தியாகிவிட்டது எல்லாமே மனித உயிர்கள்தான் அன்புமணி இராமதாஸ் மந்திரியாக இருந்ததால் ஒரு கட்சியின் தலைவராக இருப்பதால் அது பெரும் செய்தியாகிவிட்டது. அல்லது இவர்களே கல்லெறிந்து விட்டு காவல் துறை பாதுகாப்பு கேட்டோம். இன்னும் தரவில்லை எனவே இப்படி கல்லெறிந்தாவது பிரபலப்படுத்தி தாக்குதல் நடைபெறுகிறது காவல்துறை பாதுகாப்பு கொடுங்கள் என கேட்க முனைகிறார்களோ என்ற ஐயப்பாடும் உள்ளது. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். யாம் சொல்லவந்தது எந்த அசம்பாவிதங்களுமே நாட்டுக்கு நல்லதல்லதான். ஆனால் அப்பாவி பாமரனுக்கு ஒன்று நடக்கும்போது அது செய்தியாகக் கூட ஆவதில்லை. அதுவே பிரபலமானவர் என்றால் அது அவர்கள் சொரிந்து கொண்டாலும் ஒரு செய்தியாகி விடுகிறது செய்தியாக்கி விடுகிறார்கள். இது இந்த நாட்டின் நான்காவது தூண் எனச் சொல்லப்படும் ஊடகவியலாளர்களின் ஒழுக்கத்தை நெறிகளை கட்டவிழ்ட்த்து விடும் அடையாளங்களாகும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அனைத்து கட்சியினரும் முன்னெச்சரிக்கையாக அவரவர் கட்சி பொறுப்பாளர்களிடம் பண மூட்டைகளை அவிழ்த்து விட்டனர் என்றும் வாகனங்களிலும், போக்குவரத்திலும் பெரிதாக அரசியல் கட்சியினரின் பண மூட்டைகள் ஏதுமே சிக்கவில்லை தேர்தல் ஆணைய கெடுபிடிகளால் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு பொறுப்புள்ள கட்சியின் நல்ல இளைஞரே பகிர்ந்து கொள்கிறார். மேலும் செய்திகளும் கட்சிகள் இம்முறை பணத்தை ரொக்கமாக இறக்குவதற்கு பதிலாக சிக்கன், மட்டன்,மீன், இறைச்சிகள், மது கலந்து கொள்ளும் நபருக்கேற்ப ஆணுக்கு இவ்வளவு பெண்ணுக்கு இவ்வளவு என்று கொடுத்தே கூட்டம் சேர்ப்பதாகவும் பரவலான ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.

 

 

india_economy_smiling_20130829

இனி இந்த நாட்டில் கோடீஸ்வரர்களும் குற்றவாளிகள் மட்டுமே அரசியல் பண்ண முடியும் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. அது தேர்தலுக்கு தேர்தல் வலுப்பெற்றுவருவதை நன்கு உணர முடிகிறது. அதே போல கட்சி நடத்துவதாயிருந்தாலும், கட்சியில் ஒரு பெரும்புள்ளியாக வேண்டுமென்றாலும் தியாகம் , சேவை எல்லாம் அவசியமில்லை, செலவு செய்யும் ஆற்றல் , பணம் , சொத்து ஆகியவையே போதும். தேர்தலில் நிற்பதற்கே இருப்புத்தொகை கட்டணமே 25,000 ஆகியிருப்பதும் நாட்டின் நிலையை விளக்கும்.மக்களும் வாக்கை விற்பது உடலை விற்பதை விட கேவலமானது ,மோசமானது அபாயமானது என்று சொன்னாலும் கேட்பதாயில்லை.

காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று சொன்ன காந்தியின் பேரை மட்டும் நிறைய இடங்களில் தொடர்பின்றி பயன்படுத்தி வரும் இந்த நாடு அந்த மனிதரின் நோக்கத்தை எங்குமே இல்லாமல் செய்து வருவதும்,

பகத் சிங் நொந்து கொண்டபடி இந்த ஆட்சிகள் வெள்ளையரிடமிருந்து இந்த நாட்டின் கட்சிக்காரர்களிடம் கட்சியில் முன்னணி வகிக்கும் சுயநலவாதிகளிடம் சென்று சிக்கிக் கொண்டது. அம்பேத்கார் சொன்னபடி கீழ்தட்டு மக்களுக்கு நமது சுதந்திரம், பொருளாதார விடுதலை , கல்வி எல்லாம் சரியாக சென்றடையாவண்ணம் பெரும் இரும்புக்கதவுகள் சலாகை கொண்டு ,இலஞ்சம், கட்சி, சாதி, மதம் ஆகியவற்றால் அடித்து இறுக்கி மூடப்பட்டுவிட்டது. கிரீமி லேயர் என்று சொல்லப்படும் முன்னால் இருக்கும் இந்த கட்சி நபர்களிடம் அல்லது அவர்களோடு தொடர்புடைய நபர்களோடு மட்டுமே நல்வாழ்வ்வும் செல்வ வளமும் நின்று விடுகிறது. மற்ற பெரும்பானமையான சதவீத மக்கள் தொகை எல்லாம் இவர்களிடம் பிச்சைக்கேட்டு நிற்கும் பிச்சைக்காரர்களே.

இனிமேல் காந்தி, கக்கன், காமராசர், ஜீவா, இன்னும் பிற் பொது நலவாதிகளும் , நாட்டுக்கு உயிர்,இரத்தம், குடும்பம், எல்லாம் இழந்த மனிதர்கள் கண்ட காண விரும்பிய இந்திய நாடு என்பது இனி என்றுமே வர வழியில்லாதபடி தூரம் தூராமாய் எட்டி எட்டியே போய்க் கொண்டிருக்கிறது.

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் தேர்ந்தெடுக்கபட்ட பிறாகாவது கட்சி, சி(ன்)னம், சாதி,மதம் , சுயநலம் என்ற கட்டுகளில் இருந்து விலகி எல்லா மக்களுக்கும் தாம் பிரதிநிதி எல்லாருக்கும் நாம் நன்மை செய்ய கடமைப்பட்டவர் என்ற நோக்கமே அறவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிற நாட்டில் எப்படி சார்பின்மையை எதிர்பார்க்க முடியும் நல்ல ஆட்சியை. கேட்டால் எல்லாருமே எனக்கு வாக்களித்தார்கள் எல்லாரும் வாக்களித்து நான் ஜெயிக்கவில்லை, எமது கட்சிக்காரர்களும், எமது அனுதாபிகளும், நான் வரவேண்டும் என்று விரும்பிய மனிதர்களும்தானே எனக்கு வாக்களித்தார்கள் என்பது போன்ற மறுமொழிகள் நியாயங்களாகின்றன. இவை இப்படி இருக்கும்வரை எப்படி இந்த நாட்டில் நடப்பது ஜனநாயகமாகவும், நடப்பது மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தலாக இருக்கமுடியும்? வேண்டுமானால் கட்சிப் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தலாக வேண்டுமானால் சொல்லிக் கொள்ள முடியும்.

கடந்த தேர்தல் முறைகளில் அதுவரை இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்களை எல்லாம் மாற்றுவார்கள். தேர்தல் முடியும்வரை தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சியை கொண்டுவர தேர்தல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செய்யும் ஆட்சித்தலைவர்களை மாற்றி விடுவார்கள். ஏற்கெனவே இருப்பவர்கள விட மாட்டார்கள். ஆனால் இந்த தேர்தலில் அதைக் கூட தேர்தல் ஆணையம் தமிழகத்தைப் பொறுத்தவரை சரியாக செய்யவில்லை. ஏற்கெனவே இருந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அப்படியே இருக்கிறார்கள். சகாயம் ஐ.ஏ.எஸ். பொன்றோர் சேலையும் வேட்டியும் விற்றபடி கோ-ஆப்டெக்ஸ் இலாபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நிர்வாகிகளை அவமானப்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போல இருக்கும் மாவட்ட ஆட்சியர்களை அப்படியே விட்டு தேர்தல் ஆணையளர்களாகவும் செய்திருக்கிறார்கள். இதிலிருந்தே இந்த தேர்தல் எப்படி என்று பார்க்கலாம். மற்றபடி 200மீ கோடுகள், கொடி, சின்னம், தலைவர்கள் பேர் எல்லாம் பொது இடங்களில் இடம்பெறுவதை தடுத்து நிறுத்துவதில் சரியாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கூட ஆளும் கட்சி பேர்கள் சில வாரங்களுக்கு பின்னும் எதிர்கட்சிக்காரர்களின் பேர்கள் எல்லாம் சில வாரங்களுக்கு முன்பாகவுமே அழிக்கப்பட்டுவிட்டன.

அம்மா இன்னும் ஹெலிகாப்டரில்தான் எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருக்கிறார் அந்த தேர்தல் செலவுகள் எந்த வரையறைக்குள் வருகிறது என்றுதான் தெரியவில்லை. 104 டிகிரி வெயில் நமக்கு தெரியுமளவு அவர்களுக்குத் தெரியுமா? இந்த தேர்தல் முடிந்தவுடன் அந்த பாராளுமன்ற பிரதிநிதிகளை மக்கள் சென்று பார்க்க முடியுமா என்ன? முதல்வரை பார்க்கமுடியா, பிரதமரை பார்க்க முடியா நாடு இது பார்க்கலாம் சுதந்திர, குடியரசு தின உரையின்போதும், ஊடகத்தில் பெருமைப்படுத்தி பேசும்போதும் பார்க்கலாம், இவர்கள் சாதனை பற்றி சொல்ல வெளியில் வருவார்கள் . தற்போது மக்களை சாமி என்பார்கள், அப்புறம் அவர்கள் சாமியோ சாமி ஆகிவிடுவார்கள்.

இந்த நாட்டிற்கு மக்கள் தொண்டர்கள் தேவை. சக மனிதராக இருக்கும் தலைவர்கள் தேவை. ஆம் ஆத்மிக்களுக்கும் கூட போர்ட் பவுண்டேசன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சேவை நிறுவனங்கள் நடத்துவதற்காக பணம் பல நூறு கோடி டாலர்கள் வருகிறது அவர்கள் எல்லாம் அதாவது சேவை நிறுவனங்கள் நடத்துவதாக வெளிநாட்டு பணம் பெறுபவர்களே இந்த நாட்டின் அரசியல் கட்சிகளை எதிர்க்க சேர்ந்திர்க்கிறார்கள் என்பதும் செய்தி.ஆனால் அதுபோன்று அமெரிக்க நாட்டின் நிறுவனத்திடம் இருந்து யாம் பெறவேயில்லை என்றும் சொல்கிறார்கள் அவர்கள். நரேந்திரமோடியின் குஜராத் அரசு கூட அல்லது அவரது ஜீ ஈ ஈ ஆர் (கீர்) என்னும் அமைப்புக் கூட கல்வி சார்ந்த முன்னேற்றத்திற்கு இந்த நிறுவனத்திடம் இருந்து பல கோடிகள் பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் சொல்கிறார்கள்.

இதல்லாமல் காந்தி மீது பிர்லா மாளிகையில் தங்கி இருந்த குற்றச்சாட்டு இருப்பது போல இந்த மோடி, ராகுல் யாவருமே டாட்டா, பிர்லா, அம்பானி போன்றோரின் பணத்தில் உழல்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியா மறுக்கப்படாத குற்றச்சாட்டு. உண்மையில் அவர்கள் தான் நீரா ராடியா போன்ற இடைத்தரகர்களைக் கொண்டு அரசுக்கும் இந்த பணகோபுரங்கள்/மலைகள்க்கும் பாலமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். மேலும் சச்சின் டென்டுல்கர் போன்ற விளையாட்டு வீரர் கூட பாரத இரத்னா விருது பெற்றதும் அவர் தமது விளையாட்டு பண மழையில் இருந்து ஓய்வு பெற்றதும் இந்த அம்பானி வீட்டிற்குத்தான் மும்பையில் விருந்துக்கு சென்றார் என்பதும் அனைவர்க்கும் நினைவிருக்கும் …இப்படியே ஒரு இடம் விடாமல் இந்தியா தியாக வழியை மறுத்து மறந்து அல்ல விலக்கி பணத்தின் வழி பயணம் செய்து 60 ஆண்டுக்கும் மேலாகி வெகு விரைவாக அமிழ்ந்து வருகிறது.

 

 

shutterstock_53941375

இது இந்த நாட்டின் மிகப்பெரும் சிக்கல். இதிலிருந்து வெளிவராமல் இனி இந்த நாட்டுக்கு பொருளாதார சுதந்திரம் என்பதெல்லாம் கிடைக்க வழியில்லை ஏன் எனில் எல்லாம் தேர்தல், கட்சி, மதம், சாதி, நாடு , ஆட்சி யாவுமே பணச்சுழற்சியில் சுழற்றிய பகடைக்காய்களாகி விட்டன. மனிதர்களாகிய நாம் மறைவோம். இந்த நாட்டை வரும் தலைமுறைகளை மாற்றி அமைக்கும் ஒரு நல்ல தலைமை வருமா? அனைவருமே இறக்கும்போது இந்த கேள்விக்கு விடை தெரியாமலே இறக்கிறோம். இருக்கும்போதும் அப்படித்தான் இருக்கிறோம். எந்த தலைமுறையிலிருந்து அந்த வாய்ப்பும் அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறதோ?

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

 


மூடிடி..

ஏப்ரல் 2, 2014

 

DAKOTA

 

மூடிடி:ஸ்டெல் அதாங்க நம்ம ஸ்டெல்லா மேரி ராணி ஜோஸப் கிளமென்ட்ஸ்க்கு 104 டிகிரி பாரன் ஹீட் வெயிலால் உடம்பு சரியில்லை. சாப்பிடலை.ஓஸ்ட்டோபோன்,புரோட்டான் டானிக் ஊற்றலாம் என்றால் ஸ்டேர்ஸ் அடியில் இண்டு இடுக்கில் வலுக்கட்டாயமாக அதன் வாயைத் திறந்து மணியை ஒரு மூடி மருந்தை விடச் சொல்லி மறுபடியும் மருந்தை நன்றாக உள் செலுத்த வாயை இறுக்கி மருந்து இறங்க அதன் வாயை இறுக்கி நான் மூடிக் கொண்டிருக்கும் போது மணி மூடிடி, மூடிடி என்று கத்த மறுபடியும் வாயைத் திறந்தால் ஸ்டெல் மூடியை வெளி உமிழ்ந்து துப்பினாள்.டைனசரஸ் வாயிலிருந்து மனிதர் வந்து விழுந்தது போல மூடி வந்து விழுந்தது.
மருந்தை விடச் சொல்லி ஊசி எல்லாம் கொடுத்தார்கள் மருந்துக் கடையில் ஊசி எதற்கு பீச்சி அடிக்க, குத்தி காயமெல்லாம் ஆகிவிட்டால் என்ன செய்வது என மென்மை இல்லாமல் மேன் -ஹேண்டிலிங் செய்யவேண்டியதாகிறது. மணி மருந்தை ஊற்றுவதற்கும் பதிலாக மருந்துடன் அப்படியே பயந்து கொண்டு மூடியையும் போட்டு விட்டார்.கையை கடித்து விட்டால் என்ன செய்வது என்ற பயமோ,மூடியை விழுங்கி விட்டால் ஸ்டெல்லுக்கு என்ன ஆகுமோ என்ற கவலையோ மணி மூடிடி, மூடிடி என்று கத்த ஸ்டெல்லும் அழுத்திப் பிடித்திருந்த கைகளில் இருந்து வாய் விடுபட கீழே துப்பி விட ..நல்ல நகைச்சுவையாகியது. உடன் சகோதரி வீட்டில் குடியிருந்து வரும் கண்ணனும் பங்கு கொண்டு என்ன சார் என்ன நடக்குது என்றார், மூடிடி மூடிடி என்று கேட்டார் மணியம் என கதையை அல்ல நடந்ததை மறுபடியும் சொல்லி சிரி சிரி என்று சிரித்தோம்.

ஆம், மற்றவர்களின் வேதனை சில சமயம் நமக்கெல்லாம் வேடிக்கையான வாடிக்கையாகிவிடுகிறது. ஆமாம் ஸ்டெல் யாரென்று சொல்லவில்லையே? அது ஒரு இரண்டாண்டு நிறைவு பெற்ற பெண் நாய். ஆனால் நமது நாட்டு நாய் அல்ல. வேறு ஏதோ கலப்பின நாய். நல்ல வெள்ளை நிறம். ஆனால் சிறிய உடல். சிட்டுக்குருவி போல் ஒரு நொடி சும்மா இருக்காது. அந்ததெருவில் ஒரு சிறிய அரவம் சரக்கென்று சத்தம் கேட்டாலும் ஆடி ஓடி சுழன்று சுழன்று கத்தும் ஒலி ஊருக்கே கேட்கும். இப்படித்தான் 2 பூனை, 2 நாய், அதில் ஒன்றின் பேர் அப்பு . அது ஆண், 2 பெண் ஒன்றின் பெயர் ரோமியோ- ஆண், மற்றொன்று ஜுலியட் -கறுப்பு -பெண். தற்போது சகோதரி வீட்டிற்கு 2 கிளிகளும் வரவு. இரண்டுமே பெண் கிளிகள். கிளிக்குஞ்சுகள். பள்ளிப் பிள்ளைகள் பிடித்து கிராமப்புறங்களில் விற்க தலைமை ஆசிரியரும்2 கிளிப்பிள்ளைகளை வாங்கி வந்து விட்டார் பாவம்.இந்த கடுமையான வெயிலில் அவை படும் பாடு நமக்கு பார்க்க முடியவில்லை.

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு என்பார்கள். அந்தக் காலத்தில். ஆம். எம் வீட்டில் எம் தாய் படு மாடு வைத்திருந்த கதை கூட சொல்வார்கள். வீட்டின் பின்புறம் நிறைய பூச்செடிகள் மல்லிகை, கனகாம்பரம், மைசூர் மல்லி, அந்தி மந்தாரை, என மரங்கள் கொய்யா, கொழிஞ்சி, பூவரசு என அதன் அடையாளமாக இன்றும் அதன் எச்சங்களாக மிச்சங்களாக சில செடிகளும் மரங்களும் எம் வீட்டின் புழக்கடை பக்கம்.

 

 

pet-veterinary-eddm1

சரீரம் நீங்கு முன்னர், இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும், சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்கவல்லானோ அந்த மனிதன் யோகி, அவன் இன்பமுடையோன்.

தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தனே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான்.

இருமைகளை (நன்மை-தீமை,குளிர் – சூடு, இன்பம்- துன்பம் என எல்லா பொருள்களிலும் இரட்டை நிலைகள்) வெட்டி விட்டுத் தம்மை தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்கள் ஒழித்து பிரம்ம நிர்வானம் அடைகிறார்கள்.

விருப்பமும், சினமும் தவிர்த்து சித்தத்தை கட்டுப்படுத்திய ஆதம் ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.

புறத் தீன்டுதல்களை அகற்றிப் புருவஙகளுக்கிடையே விழிகளை நிறுத்தி, மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகக் கொண்டு:

புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி
விடுதலையிலக்கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்த்தோன்
முக்தனே யாவான் முனி.

“வேள்வியுந் தவமும்” மிசைவோன் யானே;
உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யான், என்
றறிவான் அமைதியறிவான்

என்கிறது சந்நியாச யோகம் இது கீதையில் 5 ஆம் அத்தியாயம்.

ஆனால் திருவள்ளுவன் ஒரே பாடலில் இல்வாழ்க்கை பற்றி:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்

என இல்லற வாழ்வை நல்லபடியாக வாழ்வாரை தெய்வத்துள் ஒருவராக வைத்து வணங்கலாம் என்றும்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

முனிவர், தேவர், மும்மூர்த்திகள் என்ற மூவர்க்கும் துணையாக நிற்பவர்கள் என்றும்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

என்றும் உழவுத் தொழிலை மேன்மை மிகு தொழிலாக சொல்வது போல எத்துணை உயிர்கள் அழிய நேரிட்டு அத் தொழிலை செய்தாலும் அனைவர்க்கும் உணவு படைக்கும் தொழிலாக இருப்பதால் அதுவே தொழில்கள் யாவற்றுள்ளும் த்லை சிறந்தது என்பது போல இல்வாழ்க்கை என்பதே வாழ்க்கை யாவற்றுள்ளும் சிறந்தது. அவரே யாவர்க்கும் துணை நிற்பார். அந்த வாழ்வில் இருந்து கொண்டே தெய்வீக நிலை, ஆன்மீக ஒருமைப்படு அடைதல் வேண்டும் அப்படியும் முனிகுமாரர்கள், ரிஷிகள் யாவரும் வாழ்ந்துள்ளனர் என்பர்.

ஆனால் விவேகானந்தர், இரமணர், இராமனுஜர், சங்கரர், இன்ன பிற ஆன்மீக ஞானிகள் யாவரும் உடற்புணர்ச்சி நீங்கி, காமம் நீங்கி இறை நிலையை அடைதலை வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

எனவே அது இதை விட சிறந்தது, இது அதை விடச் சிறந்தது, அது அதை விட சிறந்தது எது எதை விடச் சிறந்தது என்றெல்லாம் பார்க்காமல் எதிலுமே ஒரு நேர்மை , நியாயம், ஒழுக்க நெறி நின்றால் நீடு வாழலாம். பேர் சொல்லும் பூமி சவமாகி உருவமழிந்து போனபின்னும் அருவமாகி அனைவர்க்கும் உதவலாம் கருத்துக்களாய் நின்றும் வழிகாட்டலாம்.

நகைச்சுவையாக எழுதலாம் என்றால் கூட நமக்கு ஆன்மிகமே வருகிறது. எனவே மூடிடி என்ற பதிவை இத்துடன் மூடி விட எண்ணுகிறேன்.மேலும் இந்த இரண்டின் கலவையாகவே எம் வாழ்வு பின்னிப் பிணைந்திருக்கிறது.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 


கடற்கரையின் கடவுள் காக்கும் தெய்வம் வெங்கடேசன்:

ஏப்ரல் 1, 2014

Lohachara

 

கடற்கரையின் கடவுள் காக்கும் தெய்வம் வெங்கடேசன்:
மின்னலைப் பிடித்து வைக்க முடியாதது போல சில தருணங்களையும்: சென்னை மெரினா கடற்கரையில் வெங்கடேசன் என்னும் ஒரு இளைஞர் இதுவரை 300 பேருக்கும் மேல் கடல் அலை கொண்டு சென்றவர்களை உயிருடன் மீட்டு இருக்கிறார் என்ற செய்தி படித்ததில் இருந்து.

அதைப் படித்து முடித்ததும் அதற்கு நீ ஒரு தெய்வமடா, கோயில் தெய்வம் கூட உண்டியலுக்கு காசு கேட்கிறது பூசைக்கு பூசாரி வழியாக தட்சணை கேட்கிறது, பூ, பழம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பராணி இன்னும் சக்திக்கு தக்கபடியான அர்ச்சனைக்கு எல்லாம், சென்று பார்ப்பதற்கு எல்லாம் வழிக்குத் தக்கபடி, வசதிக்குத் தக்கபடி வகைக்குத் தகுந்தபடி பொருளாதாரம் கேட்கிறது ஆனால் பக்தர்கள் கேட்டது நடக்கிறதோ இல்லையோ…ஆனால் இந்த இளைஞர் எந்த ஒரு பிரதிஉதவியும் எதிர்பார்க்காமல் கடல் அலைக்குள் சிக்கிய 300 பேரைக் காப்பாற்றியிருக்கிறார் என்ற செய்தி படித்தவுடன் மனம் நெகிழ்ந்துவிட்டது . அதிலும் அவர் சொல்வது: யாரிடமிருந்தும் பணம் காசு ஏதும் வாங்கியதில்லை என்கிறார்.

அப்படி தம்மால் காப்பாற்றப்பட்ட ஒருவரிடம் ஒரு முறை வாங்கிவிட்டால் மறுபடியும் மீண்டும் மீண்டும் ஒவ்வொருமுறையும் எவரையாவது காப்பாற்றும்போதெல்லாம் மனம் எதிர்பார்க்க அரம்பித்துவிடுமே என யதார்த்தமாக தர்மம் சொல்கிறார் செய்கிறார்.

இவருக்கு அங்கிருக்கும் கடற்கரை சார்ந்த காவல் நிலையம் சார்ந்த காவலர்கள் எல்லாம் அன்னியோன்யம். ஆனால் ஒரு செல்பேசி கூட வைத்துக் கொள்வதில்லை. கேட்டால் நான் எப்போதுகடலில் குதிக்கிறேன் என எனக்கேத் தெரியாதபோது அதை வேறு எப்படி சார் நான் நீர் படாது காத்து வைப்பது என்கிறார்.

இவரது தாய் இவரதுசிறு வயதில் தனக்குத்தானே தீவைத்துக் கொண்டு இறந்து விட்டார் என்றும் இவரது தந்தையும் நல்ல மாதிரிதான் இவரை தம்முடன் வந்துவசிக்கும் படி கேட்டபோதும், இவர் மறுத்து சென்னை மெரினா கடற்கரையே இனி தாய் மடி என அதன் அலைகள் தாலாட்டில் தம்மை மறந்து கிடக்கிறார் வாழ்கிறார் என்று சொல்லமுடியும்.

இப்படிப்பட்ட தெய்வாம்சம் நிறைந்த இளைஞர் ஒரே ஒரு முறை 3 சிறுவர்களைக் காப்பாற்ற முனைகையில் 2 பேரைக் காப்பாற்றி கரை சேர்த்த பிறகு 3 வது சிறுவனைக் காப்பாற்ற முயற்சிக்கையில் அவர் ஒரு பேரலையில் இவர் கண்முன்னே அடித்து செல்லப்பட்டு காப்பாற்ற முடியாமல் போனது தமது வாழ்வில் குறிப்பிடத்தக்க சோகமாக நினைவு படுத்திக் கொள்கிறார்.

மேலும் ஒரு இளம் பெண் தற்கொலை முயற்சியில் கடலில் மூழ்கியவரைக் காப்பாற்றினாராம். அவரும் நன்றிக்கடனாக அல்லது காதலுடன் சில முறை அல்லது இரண்டு மூன்று முறை இவரை வந்து பார்த்தாராம். அதன் பிறகு வருவதில்லையாம். எனக்கெல்லாம் எப்படி சார் காதல் இருக்கமுடியும் என்கிறார்.

எல்லா அலையும் இவருக்கு அத்துபடியாம். அந்த அலையின் குணாம்சங்கள், விளைவுகள், எல்லாம் சொல்கிறார். பேசிக்கொண்டே இருக்கும்போதே யாராவதுகடலில் இறங்குவதைப் பார்த்தால், யேய், யேய் அது சுழல் அலை சுருட்டிக் கொண்டு போய்விடும்,அங்கே போகாதீர்கள் , என எச்சரிக்கை விடுத்து கடலுக்குள் இறங்குவதை தடுத்து விடுகிறார்.ஆமாம் அலையில் கூட ஆண் அலை பெண் அலை என உண்டாமே? ஒரு அலை இழுத்து சென்று விடுமாம், ஒரு அலை இழுத்து சென்றதைக் கூட மறுபடியும் கொண்டு சேர்ட்த்துவிடுமாமே?

இந்த இளைஞருகு என்று தங்குமிடம் ஏதும் கிடையாது. எங்கு உன்னை சந்திப்பதுஎன்றால் இங்கேதான் கடற்கரையில் எங்காவது இருப்பேன் என்கிறார். எப்படியாவது கடற்கரையிலேயே ஒரு கடை வைத்துக் கொண்டு பிழைத்துக் கொண்டு இதே போல கடல் மாதா கொள்ளவிருக்கும் உயிர்களை எல்லாம் காத்து இரட்சிக்க வேண்டும் என்பது தான் இவரது வாழ்வின் போக்கும் இலட்சியம் ஆகும் என பெரிய வார்த்தையில் இல்லாமல் எளிய வார்த்தையில் சொல்கிறார்.

யாராவது வாங்கிக் கொடுக்கும் உணவுடன் வயிற்றுப்பாடும், உடைப்பாடும் தீர்ந்து விடுகிறது தங்க இடம் எங்காவது கிடைத்து விடுகிறது. அதுவும் இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கடல் அன்னையின் தாலாட்டு சொல்லும் மடியான கடற்கரை மணல்.

இவரது வாழ்வைப் பார்க்கும்போது படிக்கும்போது ஏற்கெனவே ஒரு நாய் இது போன்ற பணியை செய்து வந்ததாக சில ஆண்டுகளுக்கும் முன்னால் நாமெல்லாம் படித்தது நினைவுக்கு வருகிறது. இப்படியும் சில ஜீவன்கள் இருப்பதால்தான் இயற்கை இந்த பூமியை அழிக்காமல் இருக்கிறதோ!

இந்த வெங்கடேசன் அந்த உலகின் அதிகம் வருவாய் ஈட்டும் திருப்பதி ஏழுமலை வெங்கடேசனை விட எனக்கு அதிகம் புனிதமாகத் தெரிகிறான். ஆனால் ஜீவன்களுக்கு எல்லாம் முடிவு என்ற ஒன்று இருக்கிறதே. எனவே இந்த வெங்கடேசன் நீடூழி காலம் வாழ்ந்து இன்னும் தவறிப் போகும் கடல் மேல் பழி போட்டு
அதனுள் மாயவிருக்கும் பல உயிர்களை காக்கும் புண்ணியம் பெறட்டும். இது நீச்சல் தெரியாத மக்களின் சார்பான கோரிக்கை.

நிறைய நேரங்களில் மிக சிறிய சம்பவங்கள் வாழ்வின் பாதையை மாற்றிப் போட்டுவிடுகிறது. அந்த சிறிய சம்பவங்கள் மின்னலாய் விரைந்து நடந்து முடிந்திருந்தாலும் வாழ்வெலாம் நினைவை விட்டு அகலாது. அது போலத்தான் இந்த வெங்கடேசனின் வாழ்வும் மனிதகுலத்துக்கு.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


இயற்கையை வெல்ல முடியுமோ இந்த ஆசைப் பேய்களால்?:-

மார்ச் 31, 2014

girl-hiking-nature_68866_600x450

 

 

இயற்கையை வெல்ல முடியுமோ இந்த ஆசைப் பேய்களால்?:-மலேசிய விமானம் இன்னும் இருக்கும் இடம் தெரியவில்லை,நீர்த்தேக்கம் இருக்கும் எம் இடத்திலேயே பாலைவனத் தட்ப வெப்ப நிலை நிலவுகிறது,காடுகள் எங்கும் தீ, குடிநீர் இல்லா தீ தாகம்,இந்த கோடையில் பிராணிகள், பிரயாணிகள், பறவைகள் எல்லாம் பாடாய்ப்படுகின்றன.

இளநீரும், தர்பூஜனிப் பழங்களும், பழச்சாறுகளும் ஏழைகளுக்கு எட்டாத விலையில் உயர உயரப் பறக்கின்றன. குடிநீருக்கு ஒவ்வொரு ஊரிலும் 15 நாள், 20 நாள் என காத்திருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் அம்மா குடிநீர், காவிரி மினரல்ஸ்,சிறுவாணி,கங்கா, என நதிகளின் பேர்களுடன் பிளாஸ்டிக் குடுவைகளின் நீர் ஏகபோக குடிநீர் வியாபாரமாகிவிட்டது. சிறு சிறு பிளாஸ்டிக் பைகளில் தூய்மையான குடி நீர் கிடைப்பதில்லை. அது மிகவும் அசுத்தமானதாக இருப்பதால் குறைந்தவிலைக்கு கிடைக்கிறது. எல்லா ஐஸ்க்ரீம், ஐஸ் போன்ற நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளில் எல்லாம் அதிக பட்ச விலையை விட 2 ரூபாய் சேர்த்து கடைக்காரர்கள் விற்க ஆரம்பித்து விட்டனர் சரளமாக எந்த வித கூச்சமும் கூச்சலும் இன்றி. ஒரு பனை நுங்கு 2 ரூபாய். மோர் தயாரிக்கவும் உரிய பால் எல்லா நேரத்திலும் கிடைக்கவில்லை . ஒருநேரத்துக்கு ஒரு விலை அதிலும் இடத்துக்கு தக்கபடி.

சூரியச் சூடு தகிக்கிறது காவிரியின் கரையும், அணை நீர்த்தேக்கமும் உள்ள பகுதியிலேயே 40 டிகிரிக்கும் மேல் சாதாரணமாக வெப்பம் தணலாய் கொதிக்கிறது இந்த மார்ச் இறுதியிலேயே. மேலும் இரவு, விடியற்காலைப்போதில் வெகுவாக குளிரும் இருக்கிறது. பாலவன மணல்தான் சூரிய உஷ்ணத்தால் நெருப்பாகி, இரவில் குளிர்ந்து இப்படி இருக்கும் என்பார்கள். அதே நிலை இங்கு நிலவுகிறது. முகமெங்கும் பனிவெடிப்பும், அதே சமயம் உடலில் வெப்ப விளைவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

மரஙகளின் தேவை தெரிய ஆரம்பிக்கிறது நிழலின் அருமை உறைக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் வாகனங்களின் போக்குவரத்தும், இரசாயன் ஆலைகளும் தமது இயக்கத்தினை குறைத்துக் கொள்வதாகவோ நிறுத்திக் கொள்வதாகவோ தெரியவில்லை. மனிதர்கள் வெயிலில் கூட அடங்காமல் திரிந்து கொண்டே இருக்கிறார்கள் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ? என்றால் மகன் அவர்கள் எல்லாம் அதற்குரிய தடுப்புகளான குளிர் பதனிகளை எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறான் தினமும் அவ்வளவு விலை கொடுத்து நுகர எப்படிடா அவர்களுக்கு கட்டுப்படியாகிறது என நாங்கள் பேசியபடி இருக்கிறோம்.

மனிதர்கள் பெரிய சாதனையாளர்களாகத் தெரிகிறார்கள், திரிகிறார்கள். ஆனால் இயற்கையின் ஒரு ஜ்வாலை முன்னால் பொசுங்கியபடி. புவிப்பரப்பில் எங்கே சென்றாலும் ஒரு சிறு வாகனத்தைக் கூட செயற்கைக் கோள் வழியே கண்காணிக்க முடியும் என்றெல்லாம் பெரிதாக பேசுகிறார்கள். ஆனால் மலேசியாவின் எம்.எச்.370 என்ற விமானத்துக்கு என்ன ஆயிற்று என்றே மாதம் ஒன்றாகியும் இன்னும் மனித இனத்தால் கண்டறியவே முடியவில்லை. கடலில் வீழ்ந்ததா? கடத்தப்பட்டதா? பயணம் செய்த 239 பேர் என்ன ஆனார்கள்? அதில் சீனர்கள் 130 பேருக்கும் மேல் என்றெல்லாம் செய்திகள்..மேலும் தற்போது இந்து மகா சமுத்திரத்தை ஒப்பு நோக்கும்போது இந்த விமானம் பற்றி அறிய ஆண்டுகள் சில ஆகலாம் என அமெரிக்க கடற்படை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

காடுகள் மேற்பரப்பில் தீ எரிகிறது. பற்ற வைக்கப்பட்டு எரிகிறதா? தாமே மரங்களுடன் மரங்கள் உராய்ந்து எரிகிறதா தெரியவில்லை . அவ்வளவு வெப்பம் நிலவுகிறது. ஒரு சூரியனையே நம்மால் சமாளிக்க முடியவில்லை எனில் வானெங்கும் நாம் பார்க்கும் நட்சத்திரங்கள் யாவுமே சூரியன்கள்தான். அண்டம், பேரண்டமாக, நட்சத்திரத் தொகுதிகளாக, அவற்றில் அடுக்குகளாக இயற்கையை மனிதரால் இன்னும் அறியமுடியவில்லை. ஆனால் அவற்றை கை கொள்ளப்பார்ப்பது என்ற முயற்சியில் மனித இனம் இயங்கி தம்மையும் அழித்து இயற்கை வளங்களையும் அழித்து வருகிறது.

காடுகள் அழிகின்றன, மரஙகள் குறைகின்றன. இயற்கை வளங்கள் யாவும் அழிகின்றன. நீர் இல்லை. இயற்கை வளங்களுள் ஒன்றான நிலக்கரி, பெட்ரோல் போன்றவை வெகு விரைவாக தீர்ந்து வருகின்றன. ஆனால் ஒரு மனிதர் நடந்தால் அவரை ஏன் வண்டி/வாகனம் இல்லை? என குறைவாக ஏன் சில சமயம் கேலியாகக் கூட பார்க்கும் நிலை நிலவி வருகிறது.

 

 

130927_NEWSCI_ClimateChange_ChinaPollution.jpg.CROP.promo-mediumlarge

மழைக்கும் மரங்களுக்கும் தொடர்பில்லை என இரசாயன படிப்பில் பட்டம் பெற்ற ஒரு இரசாயன ஆலை நடத்துபவரே மொழிகிறார். இயற்கையான புயல், கடல் சீற்றம் போன்றவற்றால் உண்டாகும் மழைதான் புவிக்கு என இயற்கையை கூட தமது சுயநலப்பார்வைக்கு உள்ளாக்குகிறார். இல்லை இல்லை யாம் பிற மரஙகளை எல்லாம் வெட்ட ஊக்குவிக்கவில்லை வேலிமுட்மரஙக்ளைத்தான எமது ஆலைக்கு வெட்டி வருவதை ஏற்றுக் கொள்கிறேன் என்கிறார். முரண்பாடாய், கருத்து வேறுபாடாய் இல்லை ஒரு புறம் ஆன்மீகம், கோயில் என்று பேசியபடியும் மறுபுறம் இப்படி செய்வதெல்லாம் இரட்டை வேடமாயும், போலியாகவும் படவில்லையா நண்பரே என்றால் தாம் செல்லும் பாதையில் இருந்து பின் வாங்க மறுப்பதாகவே தெரிகிறது.

இப்படிப்பட்ட ஒரு நபர் அல்ல, இவர் நமக்கு வெகு அருகாமையில் இருப்பதால், நாமறிந்திருப்பதால் இவரை சுட்ட முடிகிறது, சுட்டிக் காட்ட முடிகிறது. எம்மை எமது மண்ணை எமது ஊரை இரசாயன முறைகளால் தின்று தீர்த்து இன்னும் சில நூறு பேர்களுக்கு உணவளிக்கிறேன் என இயங்கி வரும் கெம்ப்ளாஸ்ட் சன்மார் ஆலை, அதன் தொடர்புடைய ஆலைகள், சேவை செய்கிறோம் என ஆண்டுக்கு சில முகாம்கள் நடத்திவிட்டு தொழிலாளர்களின் வயிற்றில் அடித்து விட்ட ஸ்டெரிலைட் ஆலையின் வேதாந்தாக் குழுமம், அரசின் அனல் மின் நிலையம் -இதில் அவ்வப்போது கடந்த ஆட்சியில் தயார் செய்கிறோம் என சீனாவின் பொருட்களை தரமில்லாத பொருட்களை உபயோகித்து தயாராகியும் அவ்வப்போது படுத்துக் கொள்ளும் மேட்டூர் அனல் மின் நிலையம், இப்படி எல்லாமே இயற்கைக்கு மாறாகவே இயங்கி இயற்கைப் பேரிழிவை ஏற்படுத்துபவைதான்.

அது மட்டுமல்லாமல் வாகனப் பெரு நெரிசல், பெருக்கம், சென்னை, சேலம் போன்ற பெருநகர்களில் மட்டுமல்ல, எமது ஊரிலும் கூட பல மடங்கு இந்த சில ஆண்டுகளிலேயே எகிறிவிட்டது. சாலையை கடக்க முடியவில்லை. இவ்வளவுக்கும் இயற்கை எப்படி தாக்குப் பிடிக்கும் ஈடு கொடுக்கும். ? எனவே அழிந்து வருகிறது. அழித்து வருகிறது. மனிதர் வாயில் இருந்து வருவது யாவுமே சுயநலம். பொய் தவிர புனை சுருட்டு, சூது , வாது போன்றவைதான். நல்லவை , நல்லவர் குறைந்து வருகிறார் ஆயிரத்துக்கு இனி 10 தேறுமா என்பதுகூட அரிதே.

 

 

dream3

இதே நிலை நீடித்தால் மழை மாரி பொய்த்தால் மாடு கன்று, ஜீவன்கள் முதலில் நீரின்றி மாயும், புல் பூண்டு கருகும். பசிப் பிணி பெருகும். மனிதம் கருகும். தீவினைப் பெருகும், இந்த ஆண்டு பஞ்சாங்கத்தில் மழை நிறைய உண்டு என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்றிருக்கும் நிலையை வைத்துப் பார்த்தால் அது அப்படி இருக்குமோ என ஐயுறவே தோன்றுகிறது. இன்னும் கத்ரி வெயில் எனச் சொல்லப்படும் அக்கினி நட்சத்திர வெயில் மே 4 முதல் இந்த 2014ல் மே 28 வரை 24 நாள் நீடிக்கும் என காலக்குறிப்புகள். இப்போதே இப்படி இருக்கும்போது அப்போது மழையின்றி இருந்தால் எப்படி இருக்குமோ? இயற்கையே, உன்னை வணங்குகிறோம். மனித உயிர்களை மட்டுமல்ல இந்த புவியின் உயிர்களை வாழவை. தெய்வம் போற்றுதும், செம்மழை போற்றுதும், ஞாயிறு போற்றுதும் நானிலம் போற்றுதும்…!.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


இந்தியாவில் இருப்பது ஜனநாயகமல்ல நடப்பது மக்களாட்சிக்கான தேர்தலுமல்ல:இந்தியக் குடியரசுக்கு வயது 64க்கும் மேல் ஆகியும்

மார்ச் 28, 2014

 

173747055_70b300e8ae

இந்தியாவில் இருப்பது ஜனநாயகமல்ல நடப்பது மக்களாட்சிக்கான தேர்தலுமல்ல:இந்தியக் குடியரசுக்கு வயது 64க்கும் மேல் ஆகியும் நாடு ஆங்கில பாராளுமன்ற முறையில் மறைமுகமாகவே தமது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது.மன்மோகன் சிங் மக்களிடம் வாக்கு பெறாமலே தமது 10 ஆண்டு கால ஆட்சியை ஆண்டு இந்திய சரித்திரத்தில் நேருவுக்கு அடுத்து அதிக காலம் பிரதமராக ஆண்ட பெருமையை பேரை பெற்று வெளியேறுகிறார். அவரது பிறப்பு புண்ணியம் பெற்றது பாவப்பட்ட மக்கள் அப்படியேதான் இருக்கிறோம்.

ஐ.நா.வின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு 23 நாடுகள் ஆதரவாக வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் பாகிஸ்தான், ரஷியா,சீனா ஆகிய 12 நாடுகள் எதிர்த்து வாக்களிக்க இந்தியா சேர்ந்த 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இது தமிழ் இனத்திற்கு இந்தியா என்ற ஒட்டு மொத்த பேரில் உள்ள நாடு இழைத்த துரோகம். சிதம்பரம் கோயில் துரோகம் போல. இது தமிழகத்தேர்தலில் எதிரொலிக்குமா? வாக்களிப்பில் எதிரொளிக்குமா என்பதை மது அடிமைகளாக மாற்றப்பட்ட மனிதர்கள் முடிவு செய்யலாம். ஆனால் அதுகுறித்து தி.மு.க முதுபெரும் தலைவரும், சிதம்பரம் பாப்பாவும் மிக கவலை வெளியிட்டுள்ளனர்.

எம்மை இந்த அடியவனை ஏன் இவ்வளவு தேர்தல் வெயில் 39 டிகிரி கொளுத்தும் போது நீங்கள் அது பற்றி வாய் கை கணினி திறப்பதேயில்லை எனக் கேட்கிறார்கள்.இந்த நாட்டில் நடப்பது ஜனநாயக முறையுமல்ல, நடப்பது மக்களின் பங்கெடுப்புடனாக நாட்டை ஆட்சி புரிய நடைபெறும் நிகழ்ச்சியுமல்ல என தெளிவடைந்திருப்பதுதான் காரணம். நாம் வாயைத் திறந்தாலே வம்பும் வந்து சேர்கிறது. தமிழக அரசியல் வானை 5 போலி மழை மேகங்கள் சூழ்ந்து வருகின்றன. அவை ஏப்ரல் 24 வரை மழை தருவோம் நீங்கள் மரம் நடுங்கள் என்று கோரும், மே16 வாக்கில் முடிவாகும் அப்புறம் மறுபடியும் அந்த சூல் கொண்ட மேகங்கள் விலகிப்போகும் அல்லது அவற்றில் இருந்தவை எல்லாம் இரசயான மழைப் பொழிவுக்கான அமிலங்கள் என்பதே தெரியவரும்

இந்த நாட்டை 60 ஆண்டுகளுக்கும் மேல் ஜனநாயக வழியில் உலகின் பெரும் நாடு என்று ஆட்சியும் நிர்வாகமும் வழிநடத்தி வருகையில்: தேர்தல் சீர்திருத்தமோ, ஜனநாயக மறு சீரமைப்புப் பணிகளோ இன்னும் ஈடேறவில்லை. அது:1. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை, 2. கட்சிகள் வாக்கெடுப்பதற்கேற்ப விகிதாசார முறையிலான பிரதிநிதித்துவம், 3. மக்களால் நேரடியாக அதன் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யும் முறைகள் (இந்தியா இங்கிலாந்து போல கட்சியோ, அதன் தலைமையோ, அதன் பெருவாரியான உறுப்பினர்களோ அல்லாமல் அமெரிக்கா போல் ஆட்சியாளரை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் முறை குறைந்த பட்சம் இப்படியாவது வேண்டும் ஜன நாயக சீர்திருத்தம் பாதையில் ஆரம்பமாக)

இப்படிப்பட்ட மாறுதல்கள் கூட வராமல் தற்போதுதான் நோட்டா போன்ற மாற்றங்களே தேர்தல் ஆணையத்தால் முன் மொழியப்பட்டிருக்கிறது. அதிலும் பழைய 49 ஓ வுக்கு என்ன ஆயிற்று என்று அறியமுடியவில்லை. அதற்கும் இதற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா என்பவை எவருக்கும் தெளிவாக சொல்லத் தெரியவில்லை. கேட்கலாம் என்றாலும் புகார் அளிக்கத்தான் தேர்தல் ஆணைய எண்கள் அளிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய விளக்கமளிக்க ஏதும் இருப்பதாக எமது தேடல் வரை இன்னும் தெரியவில்லை.

சரி அடுத்து காங்கிரஸ்: தமது 3 ஆம் முறை ஆளும் ஆசைக்காக: நேற்று முன் தினம் ஒரு அறிக்கை அம்மா, மகன், டபேதார் ஆகியோர் ஒட்டுமொத்தமாக நின்று வெளியிட்டு இருக்கிறார்கள். அதில்:

1.ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் இலவச வீடு
2. குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி
3. வரும் 3 ஆண்டுகளில் 8 % பொருளாதார வளர்ச்சி
4. ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள்(ஆட்சிக்கு வந்தால் தானே?) அன்னிய நேரடி முதலீடு ஊக்குவிப்பு
5. தனியார் துறையில் கூட எஸ்.சி, எஸ்.டி வேலைவாய்ப்பு ஒதுக்கீடு
6. எல்லா சாதியப்பிரிவினர்க்கும் வேலை வாய்ப்பில் கல்வியில் ஒதுக்கீடு
7. கருப்பு பணத்தை மீட்க முயற்சி

8. 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு . ஆட்சிக்கு வந்த 100 நாளில் .
அடுத்த 10 ஆண்டுகளில் மின்சாரம், போக்குவரத்து, ஆகியவற்றில் 60 இலட்சம் கோடி முதலீடு என தெரிவித்துள்ளதாக எல்லா செய்தி ஏடுகளிலும் ஊடகங்களிலும் செய்திகள்.

யாரு? இந்த பொருளாதார மேதைகள் ஏற்கெனவே இந்த நாட்டை சுமார் 55 ஆண்டுகளாக ஆண்டு வந்தவர்கள்.கடந்த 10 ஆண்டுகளாகவும் ஆண்டவர்கள். மறுபடியும் 3 ம் முறையும் தொடர்ந்து ஆள அனுமதி கேட்கிறார்கள். இதே மன்மோகன் சிங்க்: உச்சநீதி மன்றம் இந்தியாவின் தானியக்கிடங்குகளில் தானிய மணிகள் அழுகி விரயமாகின்றன இதை ஏன் ஏழைகளுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ கொடுக்கக் கூடாது என்று கூறியதற்கு அதெல்லாம், அரசின் கொள்கை முடிவு அதில் எல்லாம் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சொன்ன அதே மன்மோகன் மேற் சொன்னவற்றை எல்லாம் சொல்ல தேர்தல் அறிக்கை அளிக்கிறார்.

சிதம்பரம் பாப்பா நாங்கள் கேட்டதற்கு, ஸ்விஸ் வங்கி கருப்புப் பணம் வைத்து இருப்போர் 758 பேர் பற்றி விவரம் அளிக்க மறுத்துவிட்டது என தற்போது தேர்தலுக்கு ஒர் மாதத்துக்கும் நாட்கள் குறைவாக இருக்கையில் தெரிவிக்கிறது. மேலும் அது இளைய தலைமுறைக்கு வழிவிட்டுள்ளது. மேலும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காதது இந்தியாவின் தவறு தான் இது ஏன் இப்படி எனத் தெரியவில்லை என புட்டிப் பால் குடித்துக் கொண்டு இருக்கிறது . இந்த தமிழர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறது. இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டே…

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தமது கற்பை தி.மு.க மேல் காட்டி காப்பாற்றிக் கொண்ட காங்கிரஸ் கோல்கேட் கரி ஊழல் பற்றி வாயே இன்னும் திறக்கவேயில்லை. எப்படிப்பார்த்தாலும் நக்மாவை முத்தமிடுகிறார் கூட்டத்தில், ராகுலை ஒரு பெண் வந்துமுத்தமிடுகிறார். இப்படி காங்கிரஸ் காரர்களுக்கும் பெண்களுக்கும் பொது இடங்கள்தான் களியாட்டஙகளுக்கே. இந்த ராகுல் தம்பிக்கு 40 க்கும் மேல் வயதுஆகிறதே தவிர பொறுப்பு இல்லை. நதி நீர் இணைப்பு எல்லாம் சாத்தியமில்லை என தவ வாக்கு சொல்லி விட்டது ஏற்கெனவே வீரியமற்ற குழந்தை.

காங்கிரஸ்தான் இப்படி என்றால் நமது சொந்த நாட்டில் தமிழகத்தில்: பிரதான கட்சி அம்மாதான் அதிகம் தொகுதிகள் வரும் என்ற போதிலும் அவர்களால்
1. 3 ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் சொன்ன மின் வெட்டை சரி செய்து மின் விநியோகத்தை சீர் செய்ய இயல வில்லை.
2. வழக்கம் போல கட்சிக்கு எல்லாம் தலைமை ஒன்றுதான் எல்லா அங்கமாகவும் பிறர் எல்லாம் காலில் விழுந்து பின் எழாமல் குனிந்து செல்வது போன்ற சக்தி மைய குவியமும்
3. மது மானியமும்
4. விலையில்லா பொருட்கள் உயிர்கள் தருகிறோம் என்று சொல்லி எல்லா விலையுமே யாரும் எட்ட முடியாமல்: ஒரு தேங்காய் 20 ரூபாய் வரை விற்க, ஒரு டம்பளர் மோர் கோடைக்கு குடிக்க மாதம் ஒன்றுக்கு ரூ 300 அதிகம் தேவைப்பட குறையாத விலைவாசி
5. எங்கு பார்த்தாலும் அம்மாவும் இரட்டை இலையுமாகவே இருக்க வேண்டும் என மை கவர்ன்மென்ட் எனப் பேசும் அபாயம்.
6. 15லிருந்து 18 ஆண்டுகள் ஆனாலும் பெங்களூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடாமல் நல்ல நீதி காக்கும் அரசாட்சி.

அடுத்து தி.மு.க:
நேற்று தி.மு.கவின் ஐம்பெரும்தலைவர்களாக அண்ணா காலத்தில் இருந்தவர்களை ஒரு தோழர் அறிஞர் அண்ணா, நெடுஞ்செழியன், என 5 பேரை போட்டுவிட்டு இன்று தி.மு.வின் ஐம்பெரும் தலைவர்களாக: கருணாந்தி, ஸ்டாலின், கனிமொழி, அழகிர்,கிறு கிறு, தயாநிதி மாறன் என்று போடுமளவு எல்லாமே அவருக்கு குடும்பம்தான்.ஆனால் வாக்களிக்கவும், மக்கள் வேண்டும், வேலை செய்யவும் மட்டும் தொண்டர் படை ,இளைஞர் படை, மகளிர் அமைப்பு வேண்டும் என கட்சியும் குடும்பமும் ஒன்றாகி விட்ட அருமையான திராவிட இயக்கம் கண்டவர். ஆ.ராசாவையும், கனிமொழியையும் சி.பி.ஐ வசம் சிறைக்கனுப்பிய செம்மல், கலைஞர் தொலைக்காட்சிக்காக சொந்த மனைவியைக் கூட விசாரணைக்குட்படுத்திய மாமனிதர் இவரது கட்சி பற்றியும் சொல்வதற்கில்லை. இவருடன் இன்று மற்ற கட்சிகள் சேராததும், இவர் காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் அருகாமையுடன் இருப்பதும் இவரது வரலாறு நெருங்கி நெருக்கி வருவதன் அடையாளங்கள். பாவம் ஸ்டாலின் தந்தை காலத்தில் முதல்வராகும் கனவு நிறைவேறாமலே…

அடுத்து: எதிர்கட்சித் தலைவர்: அவரே மேடையிலேயே ஒப்புக் கொள்கிறார். மதுவின் மான்மியத்தை. அவரது மனைவியார் பிரேமலதாவுக்கு கட்சி நடத்துகின்ற வல்லமை இருப்பதை அவர்கள் நடத்திய மாநாட்டில் பார்க்க கேட்க முடிந்தது. எனினும் அவர்கள் கூட இரண்டு பிரதான திராவிட கட்சிகளுடன் சேராமல் அதிகம் தொகுதிகள் வெல்வோமே எனச் சொல்வது புதிய வாக்களார்களையும், மடைமாற்றம் ஆகா வாக்களார்களையும் கணக்கில் எடுக்காமல் சொன்னால் செல்வாக்கிற்காக அல்ல சொல்வாக்கிறகாக. ஒரு பேச்சு வளத்திற்காக . எப்படியும் இவர்களுக்கு 10% வாக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை உண்டு.

அடுத்து இவர்கள் கூட்டணியில்: பாரதிய ஜனதா கட்சிக்கு ஏதோ மத்தியில் ஆட்சியை பிடித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு ஊருக்குள்ளும் சில மனிதர்கள் சேர்கிறார்களே ஒழிய ஒரு மதிப்பு மிக்க எண்ணிக்கையிலான கூட்டம் இல்லை. இது தமிழக காங்கிரஸ் போல நலிவடைந்த பிரிவே.

அடுத்து பாட்டாளி மக்கள் கட்சி: நடிகர் கட்சியை விட மூப்பு அடிப்படையில் முன்னால் வந்த கட்சி என்றாலும் அதற்கு இருக்கும் செல்வாக்கு கூட இவர்களுக்கு இல்லை ஒதுக்கப் பட்டிருக்கும் 8 தொகுதிகளுள் 4 வந்து விட்டாலும் இவர்களுக்கு பெரு வெற்றி. தர்மபுரி தொகுதியில் : அன்புமணி இராமதாஸ், ஜூனியர் வாழப்பாடி, தாமரைச் செல்வன் என பிரபலங்கள் நின்றாலும் அ.இ.அ.தி.மு.கவுக்கே இந்த பிரிவினை வாதவாக்கெடுப்பால் பி.எஸ்.மோகன் பி.ஏ.பி.எல் வேட்பாளருக்கே சாதகம் அதிகம். அதை மீறி எவர் வேண்டுமானாலும் வரலாம் அது அவர்கள் பணியாற்றும் திறன் பற்றியது. அன்பு மணிக்கு இந்த முறை தர்மபுரி மாங்காய் கிடைக்கும் என அந்த கட்சியினர் பெரிதும் நம்பி எதிர்பார்க்கின்றனர். இந்த கட்சி கூட பிரதான கட்சிகளுடன் கூடி இருக்கும்போது தொகுதிகள் வென்றனர். மற்ற படி இது போல உதிரியாக நிற்கும்போது பெரிதும் இலக்கடைவது சந்தேகமே.

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கேட்பாரற்ற அனாதையாக பூத் ஏஜன்ட் கூட இருக்கிறார்களா இல்லையா என்னுமளவு சிறுத்து கிடக்கிறது . சிதம்பரம் பாப்பா போன்றோர் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக இந்தியாவின் மாபெரும் 3 வது பெரிய கட்சியான கம்யூனிஸ்ட் பேரியக்கம் அம்மா ஜெயலலிதா கழற்றி விட்ட செருப்பாக ஓரம் ஒதுங்கி, அப்போதும் உழைப்போம் என இரண்டு கட்சிகளும் தங்களுக்கு உண்டான பொது உடமை வீறாப்புடன் 9+9= 18 தொகுதிகளில் தனித்தே நிற்பதாக செய்திகள். நல்லதே தமது பலத்தை இனியாவது தனியாக நிறபதன் மூலம் இந்த கட்சிகள் உணரத் தலைப்படட்டும்.

ஆக இப்படி 5 பிரிவாக இருப்பது அம்மாவுக்கு அடித்த லக்கி பிரைஸ். தமிழகத்தில் உதாரணமாக அவர்கள் 33 % பெற்றால் கூட பெரும்பாலான தொகுதிகளில் வென்று 20லிருந்து 30 தொகுதிகள் வெல்வார்கள். இரண்டாம் அணியாய் தி.மு.க 30 % வாக்குகள் பெற்றாலும் தொகுதிகள் எத்த்தனை வெல்வார்கள் என்று சொல்ல வழியில்லாதிருக்கிறது. அவர்கள் உழைப்பும் மக்கள் நம்பிக்கையும் பார்த்த பின் தான் தெரியும் சிக்கலான காலச் சூழல் தி.மு.கவுடையது. அடுத்து இந்த 3 அணியானது 20 % மதிமுக,தேமுதிக;பாமக ஆகிய கட்சிகள் அடங்கிய பிஜேபி அணி அனேகமாக எல்லாம் சேர்ந்து ஒரு 8லிருந்து 10 தொகுதிக்குள் வரலாம் என்றே நினைக்கிறோம் அல்லது தி.மு.க அணியுடன் இந்த எண்ணிக்கை சேர்ந்தும் இருக்கலாம்.

அண்ணன் வைகோவின் ம.தி.மு.கவுக்கு 7 தொகுதிகள் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் அவருக்கு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு இருப்பது போல் தெரிகிறது. மாநிலம் தழுவி பெருவாரியான இடங்களில் அவருக்கு பணி புரியக்கூட ஆட்களிருப்பதாக தெரியவில்லை. எனவே இந்த கூட்டணி தி.மு.கவுக்கு செய்யும் கேடு. ஆனால் தமக்கு ஏதும் பெரிய பலன் விளைத்துக்கொள்ளாது. ஆனால் அம்மாவுக்கு நேரும் நல்ல விளைவுகள் இதனால் எல்லாம். மேலும் இந்த பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகள் அல்லது கட்சிக்கு ஒன்றிரண்டு தொகுதிகள் வந்தாலும் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றும்போது ஒரு மந்திரி பதவி கூட கிடைக்கும் நாடெங்கும் பிரபலமான ஆடமபரமான வசதி வாய்ப்புகள் கிடைக்க இந்த கூட்டணி இவர்களுக்கு உதவும்.

ஆனால் பிஜேபி மட்டுமே ஒருமித்த பெரிய கட்சியாக ஆட்சி அமைக்குமளவு உருவெடுக்காது போனால் இந்தியாவுக்கு இந்தியாவின் ஒரு கட்சி ஆட்சிமுறைகளுக்கு இது ஒரு சிந்திக்க வேண்டிய தேர்தல் முடிவுகளை தரும் தேர்தலாக இருக்கும். காங்கிரஸ் வரும் என்று குழந்தை கூட சொல்ல முடியாது. உதிரிகட்சிகளும், மாநிலம் சார்ந்த கட்சிகளும் இரட்டை இலக்க எண்ணிக்கையுடன் வரும்போது 3 இலக்க எண்ணிக்கை தொடாத போது எல்லா கட்சிகளுக்குமே அதிர்ஷ்டம்தான். அர்விந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி பெரிதான அலை ஏதும் எழுப்பாதபோதும் கட்சி தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் என்றே தோன்றுகிறது. பி.ஜே.பிக்கும் மோடிக்கும் அதிகம் வாய்ப்பிருப்பதாகவே படுகிறது . இல்லயேல் மாநிலத்தின் இராஜாக்களும், இராணிகளும் தமது பணநாயக சக்திகளை பயன்படுத்தி டில்லியின் செங்கோட்டையை பிடிக்க ஆகாயக் குதிரை அல்ல ஆகாய இரதம் ஏறி பறப்பார்கள் புறப்படுவார்கள். அதில் அம்மா ஜெ, மமதா, மாயாவதி, முலாயம் சிங்க், நிதிஷ்குமார்,ஜெகன்மோகன் ரெட்டி,சந்திரபாபு நாயுடு,இப்படி மாநிலத்தின் பெயர்கள் எல்லாம் மத்தியில் உரசப்படும். வைக்கோ கேட்பது போல ஒருங்கிணைந்த பெடரல் பாரதம் ஆட்சிமுறை அமலுக்கு வரலாம்.

இப்படி எல்லாம் இருக்கும்போது யாம் என்ன அரசியல் பேசுவது? எப்படி பேசுவது? எதை பேசுவது? இந்தியாவில் தற்போது போய்க் கொண்டிருக்கும் பாதை ஜனநாயகம் போகும் பாதையாக இல்லை. மோடியும், ராகுலும் அம்பானியின் செலவில் போய்க்கொண்டிருப்பதாக விமானம் ஏறி ஹெலிகாப்டர் பயணம் செய்வதாக வெளிப்படையான குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அந்த பணம் இந்த நாட்டின் திறந்த வெளிக்கழிப்பிடம் பயன்படுத்தும் கழிப்பிட வசதிகள் கூட இல்லாத 60 கோடி மக்களுடையது அல்ல. 1350 கோடி சொத்து மதிப்புள்ள ஒரே வீட்டை சொந்தமாக வைத்திருக்கும் 3 ஹெலிபேட் வசதிகள் கொண்ட முகேஷ் அம்பானி போன்றவர்களுடையது என்று செய்திகள் அடிபடும்போது எந்த கட்சிதான் வந்து என்ன மாதிரியான ஜனநாயகத்தைத்தான் தந்துவிடப்போகிறது? அது எந்த வகையில் சாதாரண மனிதர்களுக்கு பயன்பட்டு விடபோகிறது?

அப்படிப்பட்ட மக்களுடைய அங்கங்களுடன் அவர்களின் பங்கெடுப்புகளுடன் அமைவதாயிருந்தால் எந்தவகையிலான தேர்தலும் மகிழ்வளிக்கும் . ஆனால் இந்த தேர்தல் மறுபடியும் ஒரேயடியான பழைய மாதிரியான மறைமுகமான முறைகளில் ஆட்சியாளர்களைக் கொண்டு வரும் என்னும்போது வாக்கின் மதிப்பு மக்களுக்கு இன்னும் கூட சென்றுசேராதபோது எம் போன்றோர்க்கு எப்படி மகிழ்வளிக்கக் கூடும்.அதில் ஒரு ஆறுதலான செய்தி என்ன எனில்: உச்ச நீதி மன்றம், தேர்தல் ஆணையம் நல்ல முறையில் மக்களுக்கான அமைப்பாக செயல்பட முயல்வதுதான். அதிலும் தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு நடைமுறை வேறாகவும் மற்ற கட்சிகளுக்கு நடைமுறை வேறாகவும் இருப்பதை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாமல் இருப்பதுமான நிலையே நிலவுகிறது. இது பொது கருத்து. இப்படி இருப்பது ஏற்புடையதல்ல. ஒரு சாதாரண நியாயவிலைக்கடையில் விநியோகிக்கும் பொருட்கள் ஒரே சீராக விநியோகிக்க முடியாமல் அரசும் ஆட்சியும் நிலவும்போது இந்த அரசும் ஆட்சிகளும் என்ன சாதித்து விட முடியும்?

இதை எல்லாம் மீறித்தான் இஸ்ரோ நல்ல பேரை உலக அளவில் இந்தியாவுக்கு ஈட்டி வருகிறது. எல்லாவற்றையும் மீறி நதி நீர் இணைப்பு பற்றி நமோவும், ஜெவும் பேசி இருப்பது அதுவும் தேர்தலின் போதே அறிவிப்புகள் வெளியிட்டிருப்பது எம் போன்றோர்க்கு பெரும் ஆறுதலாகி இருக்கிறது. அப்படி ஒருக்கால் இவர்கள் பதவிக்கு வந்து அப்படிப்பட்ட அரிய பெரிய இந்தியாவுக்கே முன்னோடியான திட்டத்தை நிறைவேற்றி விட்டார்கள் எனில் அப்போது அதை யார் செய்கிறார்களோ அவர்களுக்கே எமது இறப்பு வரை வாக்களிப்பது எனத் தீர்மானிப்பது மட்டுமல்ல உண்மையாகவும் வாக்களிப்பேன். அல்லாது தற்போது எல்லாம் வரும் தேர்தலில் எல்லாம் எமது வாக்கு 49 ஓ இருந்தால் அதற்கு அல்லது அது இல்லை எனில் நோட்டாவுக்கு. ஒருவரது வாக்களிப்பை எவருக்கும் தெரிவிக்கக் கூடாது ஒரு வாக்களார் என்ற விதியும் நெறியும் இருக்கிறது என அறியும்போதும் இதை உரக்கச் சொல்வேன் பாருக்கும் ஊருக்கும் எமது வாக்கு 49 ஓவுக்குத்தான். ஏன் எனில் ஒருவருக்கு அளித்துவிட்டு மற்றொரு கட்சிக்கு அளிக்காமல் விடக்கூடாதல்லவா? அத்தனை பேரும் அத்தனை கட்சிகளும் அவ்வளவு நல்லதாக ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுக்கமுடியாமல் சேவையாற்றுகின்றன அடித்தட்டு இந்திய மக்களுக்கு. எனவே அடித்தட்டு மக்களுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேல் சேவை ஆற்றியவன் என்ற முறையில் இதுதான் இந்த அடியவனது முடிவு.

கடைசியாக ஒரு கொசுறுச் சேதி:2 டம்பளர் மோர் சாப்பிட மாதம் 1/4 லி பாலுக்கு ரூ ஒரு ஆளுக்கு 300 தேவைப்படுகிறது கொடும் கோடையில். உப்பு கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் கூடியுள்ளது டாட்டா லைட். ஒரு தேங்காய் விலை 20 வரை. ஒரு பழம் சிறியதானாலும் ரூ3 முதல் 5 ஆகிவிட்டது வாழைப்பழம்தான். அம்மாவின் விலையில்லா அரிசி நியாயவிலைக்கார்டுதாரர்களுக்கு செல்வதை விட அநியாய வழியில் மட்டுமே அதிகம் பயணம் செய்வதாக செய்தி. நியாயவிலைக் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறையாவது வாங்காவிட்டால் சலுகை இரத்து செய்யப்பட்டு விடுமே என்ற போட்டி யுத்தத்தில் மன்றாடி வாங்கும் படியான நிலை நிலவுகிறது. இவர்களின் விலையில்லா பொருட்கள் விநியோகத்தை விட விலைவாசி இறக்கம் பற்றி கவலைப்படும் அரசு வந்தால் பரவாயில்லை. அந்த விநியோகம் கூட அவர்கள் கட்சிக்கு முன்னுரிமை. 3 ஆண்டுகள் ஆனபின்னும் எமது பக்கத்தில் எல்லாம் காற்றும் இல்லை. இது மதிமுக பார்த்திபன் தொகுதி.

 

 

garbage

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாகி அரசில் அங்கம் வகிக்கும் மந்திரி போன்ற பதவிக்கும் அல்லதது தொகுதிக்கும் பிரதிநிதி ஆகிவிட்டால் அனைத்து மக்களையும் சமமாக பாவித்து நன்மை செய்யும் மனப்பானமை நிலவாமல் அவர்கள் சார்ந்த கட்சிக்கு மட்டுமே நல்லது செய்யும் கட்சிப் பிரதிநிதிகளைத்தான் இந்த தேர்தல்கள் தேர்ந்தெடுக்கிறதே ஒழிய எல்லா மக்களுக்கும் சமமான பார்வை செலுத்தி சேவை செய்யும் மக்கள் பிரதிந்திகளை இந்த தேர்தல் அமைப்பும் ஜனநாயகமும் இந்த நாட்டில் 60 ஆண்டுக்கு மேல் சுதந்திரம், குடியரசு ஆகியும் உண்டு பண்ணவே முடியவில்லை.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


பசிக்கு உண்பதை விட ருசிக்கு உண்பதால்:-

மார்ச் 27, 2014

 

shutterstoc1

 

பசிக்கு உண்பதை விட ருசிக்கு உண்பதால்:- காடு மேடு கழனி வயல் வெளிகளை மையமாக வைத்து மனிதர்கள் கடுமையாக உழைத்தபோது பசிக்கு நிறைய உண்ணும்போது ஆயுள் பெருகியது, தற்போது ருசிக்கு உண்ணுகிறேமே அதனால குறையும் ஆயுளும் பீடிக்கும் பிணிகளும் சொல்லில் அடங்கா(து).

அறிவியலும், மருத்துவமும் அதிகம் முன்னேறாத காலமதில் பாம்பு,விஷக் கடிகளும், காலரா, மலேரியா போன்றவற்றுடன் இயற்கை இடர்பாடுகளால் மட்டுமே மனிதம் அழிந்தது .உரிய மருந்துகளும் மருத்துவ முறையும் தெரியாமல் அறியாமல். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் பெரும்பாலும் உண்ணும் உணவாலும், உட்கொள்ளும் மருந்தாலுமே பெரும்பாலும் வியாதிகளும் மரணங்களும் நிகழ்ந்துவருகின்றன. எண்ணிலடங்கா பிரிவுகளுடைய மனிதரை சாவிலிருந்து மீட்பதாக சவால் விடும் மருத்துவ முறைகள் யாவுமே இருந்தபோதும்.

நன்றாக ஊன்றிக் கவனித்தோம் என்றால் யாவற்றுக்கும் அடிப்படை. மனிதர்களாகிய நாமனைவருமே பசிக்காக சாப்பிடுவதை விட ருசிக்காக சாப்பிட ஆரம்பித்ததுதான்.

அனைவருமே கடுமையாக உழைக்காததுதான். அட அடியேன் அனுதினமும் நடைப்பயிற்சியை உடல் ஆரோக்யத்திற்காக மேற்கொள்பவன் என்றவுடன் சிலர் புதிதாக கேட்பவர்கள் உங்களுக்கு என்ன சுகர்/நீரிழிவு வியாதி இருக்கா என்கின்றனர். எவருமே நடப்பதில்லை. நடந்து எங்காவது சென்றாலும் அவரிடம் வண்டி ஏதும் இல்லைபோலிருக்கிறது. பாவம் எப்போதும் நடந்தே செல்கிறார் என்கிறார்கள். கால்சட்டையை ஆங்கில பாணியில் இருந்து மாற்றி வேட்டி கட்டினால் போதும் “அங்கிள் என்று அழைக்கும் வாண்டுகள்” எல்லாம் தாத்தா என்று சொல்லி கூப்பிட ஆரம்பித்து விடுகின்றனர். இதெல்லாம் நமதுட் தமிழகமும், இந்தியாவும் மாறி வரும் கலாச்சாரத்தினால் தனது இயல்பான வண்ணம் இழந்து சாயமிழந்து பல்லிளித்த பழைய துணியாக போய்க் கொண்டிருக்கிறது என்று சொல்லாமல் சொல்கின்றன.

சரி சாப்பாடு என்றால்: காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டை, தேன், நல்ல குடிநீர், என்று கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை. அதற்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த நம்மாழ்வார் போன்றோர் சென்று சேர எம் பக்கத்திலும், சில மனிதர்கள் ஆயிரத்திற்கு 5லிருந்து 10 பேர் மட்டுமே இயற்கை விவசாயம் பற்றி அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். பசுமை விகடன் போன்ற இதழ்கள் வருவதெல்லாம் சற்று ஆறுதல்.
அந்தக் காலத்தில் அறிவியல் பாடத்தில் :கார்போஹைட்ரே,புரோட்டீன், கொழுப்பு,தாது உப்புக்கள், தண்ணீர், வைட்டமின்கள் யாவும் உடல் வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்திற்கும், வீரியத்திற்கும் இன்றியமையாத தேவைகள் இதெல்லாம் உணவில் சரி சம விகித அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்க என்று எளிமையாக: கா,பு,கொ,தா,த,வை என்று எளிமையாக நினைவிற் கொள்க என்று அறிவியல் ஆசிரியர்கள் சொல்வார்கள். அதுமட்டுமில்லாமல்: அறுசுவை உணவை நினவில் கொள்ள: இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு,உப்பு, உவர்ப்பு, கைப்பு-கசப்பு எல்லாமே மனிதர்க்கு வேண்டும் என்பார்கள். அப்படி சாப்பிடும்போதுதான் மனித உடலின்: வாதம், பித்தம், கபம்/சிலேட்டும/சளி போன்ற உடலின் இரச பாகங்களுக்கு சமச்சீராக இருப்பதற்கு உதவும் என்பார்கள்.

மேலும் அது போன்ற சிறுதானியப் பயிர்களும் அந்த வகை வகையான உணவு முறைகளும் தற்போது பெரும்பாலும் அருகி மறுபடியும் அதன் முக்கியத்துவம் கருதி வரத்தலைப் பட்டிருக்கின்றன.அதன் அவசியம் கருதிய மனிதர்கள் மறுபடியும் அவற்றின் தேவையை வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். வரவேற்கத் தக்கது.

தற்போது ஒரெ மேனியா: அது மதுவுக்கு தவறாமல் சென்று பொருளாதாரத்தை இரைத்து விரயம் செய்வது அடுத்த மனிதர் வாழ்வதற்கு ஒரு நூறு ரூபாய் கூட விட்டுத்தர மனமில்லா குடிகாரக் குடும்பங்களில் அவரவர் குடும்பப் பெண்டிர் தமது குடிகார கணவரை, மகன்களை, சகோதரரை சீர் செய்ய முடியாமல் தமது குடும்பத்தின் பெரும்பகுதியான ஊதியத்தையும் முதலையுமே இந்த நாசகார சக்தியில் மூழ்க விட்டு விடுகின்றனர் எனவே இந்த உணவு சீர்திருத்தம், சத்தான உணவுக்கான வாழ்வு மடைமாற்றம் பற்றி சொல்வோர், எண்ணுவோர் எல்லாம் இவர்கள் மத்தியில் மனநலம் குன்றியவர்களாக கருதப்படுகிறார்கள்.

அதற்கு தக்க அரசுகள், கட்சிகள், அரசியல் நாடு என இந்தியாவின் வழித்தடம் சென்று கொண்டே இருக்கிறது. இந்த நாட்டில் நிறைய கொடித்தட வழிகள் இருக்கும்போது மனிதர்க்கு ஆரோக்யம் ஆயுள் நெடு நாள் நீடித்தது. நிறைய கரை அணிந்த வேட்டிகளும், சேலைகளும், கட்சிக்கொடிகளும் கொடித்தட வழிகளை சாலைகளாக்குகிறோம் என்று வந்த நிலையில் நல்லவைக்கு குட்பையும் குப்பைத் தொட்டியும் தீயவைக்கு வரவேற்பும், மகுடமும் என மாறிவிட்டன. எல்லாவற்றுக்குமே ஒரு எதிர்மறையான கருத்துக்கள் உடனே மின்னலாக வெளித் தெரிவிக்கப்படுகின்றன அது நல்லதாக இருந்தபோதும். ஆனால் தீயவற்றின் பின்னால் செம்மறி ஆட்டுக்கூட்டம் தலையை கவிழ்ந்தபடியே சென்று கொண்டே இருக்கின்றன(ர்).

நாடாளும் மன்னரும் வீழ்வர் படு குழியில் ஒரு நாள் என்பதற்கேற்ப மாபெரும் அரசை கட்டி ஆள்வது போல ஆண்ட மனிதர்கள் யாவரும் இந்த உடல்நலம் குன்றிடும் வழிகளில் உணவை சரியாக கையாளாதாதல் படுகுழிக்கு(ள்) வெகு விரைவில் சென்றுசேர்கின்றனர் அல்லது பிடி சாம்பலாகி விடுகின்றனர்.

தொழில் முறைகள் எல்லாமே வேதியியல், கட்டுமானவியல், வியாபாரம், அறிவியல், மருத்துவம், மின்னியல், மின்பொருளியல் எனவும் கணினிவியல் எனவும் பல்கிப் பெருகியபடியே இருக்கின்றன ஆணிவேரான விவசாயத்தை அனைவரும் சென்று தொழவேண்டிய உழவுத்தொழிலை நிந்தனை செய்து அதை பின்னுக்குத் தள்ளிய நிலையால் மண்ணில் கை வைக்கவே மனிதர்கள் யாவரும் தயார் இல்லை என்ற நிலையால் முகங்கள் யாவும் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கின்றன நிலையாமையால் அது இயற்கை என்றபோதும் கூட எந்த வித பூமிப் பயன்பாடும் துளியும் இல்லாமலே.

மழை வருவதை பற்றி ஒரு குடியானவரே அது மரஙக்ளால் அல்ல, இயற்கை சீற்றங்களால் மட்டுமே என்றும், மழைதரும் மரங்கள் என்ற கொள்கையை கூட தமது சுய நலப் பார்வைக்காக மாற்றிப் பேசுகிறார். அனுதினமும் எக்கச்சக்கமான மரங்கள் வெட்டுப்பட தாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு துளி குற்ற உணர்வுமற்றவராய் அதைப்பற்றி உண்மையிலேயே அந்த மனிதர்க்கு தெரியவில்லையா? அல்லது தமது சுய நல எண்ணம் ஈடேற வேறு வழியில்லை என தெரிந்தும் தெரியாதார் போல இருக்கிறாரா என்பது அந்த சிவனுக்கே வெளிச்சம். கேட்டால் பூமிக்குத் தேவையில்லாத பாரமான நஞ்சை விளைவிக்கும் விவசாய வேலி முள் மரங்களையே வேட்டி கொண்டுவரச் சொல்கிறோம் எனக் கேட்பவர் தம்மை நம்புவாரே இவர் என்றெல்லாம் சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி சொல்கிறார். இவரெல்லாம் சாதனையாளாராக ஆசைப்படுகிறார். சாதிக்கப்பார்க்கிறார். சரித்திரத்தில் இடம்பெறப் பார்க்கிறார்.

இவருக்கு உறக்கம் ,உணவு பற்றிய அக்கறை, தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உலகின் ஜீவ ராசிகளுக்கு எல்லாம் நிம்மதி நிலவ சாந்தி நிலவ மழை தேவை, அதற்கு மரங்கள் தேவை என்பதெல்லாம் எம்போன்ற சமூக ஆர்வலர்களுக்கு அவசியமாகப் படுகிறது. அவரை வேறு கோணத்தில் பார்த்து திசை திருப்ப வைப்பவர் பற்றி எல்லாம் சிந்தித்து பார்க்கவும் எம் போன்றோர்க்கு நேரமில்லை.

அரை பங்கு உணவு , கால்பங்கு வெற்றிடம் அல்லது காற்று அல்லது செரிமான வாயுக்கு, கால்பங்கு நீர் என எல்லா வயிறுகளுக்கும் தங்கு தடையற வழங்க இந்த பூமி அருள் செய்ய அதற்கு மழை பொழிய மரங்கள் துணை செய்ய அனைவர்க்கும் நீண்ட ஆயுளும் நல் ஆரோக்யமும் பெருக எல்லாம் வல்ல பராசக்தியை அந்த பாரதி வேண்டுவது போல யாமும் வேண்டுகிறோம்.

முடிந்தவரை அனைவரும் இயற்கை உண்வுக்கு அல்லது செயற்கை உரம் கலப்பில்லாத இயற்கை உரம் இட்டு உற்பத்தி செய்யபப்டும் உணவுப் பொருட்களுக்கு மாறவேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

அதெல்லாம் சாத்தியம் இல்லை என்ற குரல்கள் பலவாறு ஒலிக்கத்தான் செய்கின்ற்ன அந்த நீரோட்டம்தான் இந்த உலகுடையது ஆனாலும் எம் போன்றோர் அது போன்ற சிறு சிறு முயற்சி எடுத்து வருகிறோம். இயற்கையாக விளையும் அதாவது இயற்கையான முறையில் உரம் அளித்து தயார் செய்யப்படும் உணவுப் பொருட்களை முடிந்த வரை வாங்குவது என்றும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவதில்லை என்றும்,மேலும் முடிந்தவரை (கண் கெட்ட பின்னே சூரிய உதயம் என்று சொன்னாலும் பரவாயில்லை) உணவுக் கட்டுப்பாடுகளை அனுசரிப்பது என்றும் வாழ்ந்து வருகிறோம்.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


உனக்கு நீயே முதல் மருத்துவர்:

மார்ச் 26, 2014

 

7645498

 

உனக்கு நீயே முதல் மருத்துவர்:2 வேளை 2 சிறு சப்போட்டா பிஞ்சுகள் அரைத்து சிறிய டம்ளரில் அரைப் பாகம் மோரில், அசவோடிட்டா,க்ரோட்டன் டிக்,கால்க் பாஸ் ஹோமியோபதி மாத்திரைகள் சில முறைகள்,எலக்ட்ரால் பவுடர் கரைசல் 3லி,உயர் இரத்த அழுத்த சித்த வைத்திய மாத்திரையின் அரை பாகம் 3 முறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு.மதியம் சுண்டைக்காய் வறுத்து சுடு அரிசிச் சோற்றுடன் உள்தள்ளினேன்.

ஒருவாறு திரிந்து போன உடல்நலத்தை திருப்பி மீட்டு உங்களோடு உரையாடும் நிலைக்கு கொண்டு வர மேற்சொன்ன சில கைவைத்தியங்கள் பயன்பட்டன. காந்திக்கு நீர் சிகிச்சை, மண் சிகிச்சை பயன்பட்டாற் போல எனக்கு இந்த கடந்த3 நாட்கள் சோதனையை முடித்து சாதாரண நாளாக இந்த மருந்துகள் பயன்பட்டன. இன்று காலைதான் 4 இட்டிலி கொஞ்சம் வெங்காய சாம்பாரில் கொஞ்சம்தொட்டு சாப்பிடும் தெம்பே வந்தது.பகத் சிங்க் நினைவு நாளும் எனது பிறந்த நாளின் அடையாள நாளும் ஒருசேர வருவது வேறு வேடிக்கை.

உடல் என்ற எந்திரம் எப்படி எல்லாம் பழுதடைகிறது என நமக்கே காட்டிக் கொடுக்க ஆரம்பிக்கிறது அதை அலட்சியம் செய்து நாம் அப்படியேதான் இருப்போம் என அந்த அடையாளங்களை மதிக்காமல் மேலும் மேலும் கவனிக்காமல் சென்று கொண்டே இருக்கும்போது புலன்களும் உறுப்புகளும் தமது எதிர்ப்பை , ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வதுடன் நமது உடலுக்கு பலவாறான ஊறுகளை, உபத்திரங்களை, தொந்தரவுகளை தர ஆரம்பித்து எம்மை கவனித்துசரி செய்து கொள்க என கூப்பாடு போட ஆரம்பிக்கின்றன. உடனே நாம் பயந்து கொண்டு ஆங்கில மருந்துகளையும் மருத்துவரையும் நாடி மேலும் அதை நெடுங்கால அடிப்படையில் உட்படுத்த வேண்டுமா? தற்கால விடுவிப்பு செய்ய வேண்டுமா என்ற கேள்வி கூட இன்றி பறக்கிறோம் பதட்டப்படுகிறோம். அது தேவையில்லை. முக்கியமாக இதற்கேற்ற மருத்துவர்கள் உரியவர் உடனே நமது அருகே கிடைக்கவில்லை என்னும்போது இன்னும் நிலை கேடடைகிறது.

இந்தக் கோடை, பாலைவன வெப்ப தட்ப நிலைகளை விரித்து வருகிறது.அளவுக்கடங்கா வெப்ப சலனங்கள். ஆரம்பத்தில் எனது உடல் முகத்தில் புருவத்துக்கு மேலும் , மூக்குக்கு கண் கண்ணாடி பதியும் இடட்த்கிலும் சிறு சிறு கொப்புளமாக ஏற்பட்டது. அதை எச்சில் ஒத்தடம் கொடுத்து சரி செய்து விட்டேன். ஆனால் வழக்கம்போல எனது இரவு நேரப் பணிகளை அல்ல இரவு நேர வலையகத் தொடர்புகளை நள்ளிரவு வரை தொடர்ந்தேன்.

22.03.14 அன்று இரவு சரியாக உறக்கம் வரவேயில்லை. தொப்பூள் சுற்றி ஏக உஷ்ணம். சிறு நீர்கழிப்பது கடினமாகி இருந்தது. உடனே தொப்பூளுக்கு தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை தடவியபடியும், நீர்க்குறைவை சரி செய்ய நிறைய நீரை குடித்தபடியும் சரி செய்ததாக நினைத்தேன். மறு நாள் மறு ஆண்டில் எனது வயது காலடி வைப்பதாலும், ஒரு கோயில் ஒருங்கிணைப்புக் கூட்டம் , மற்றும் ஒரு பாகப் பிரிவினை சந்திப்பு பக்கத்து வீட்டில் இருந்ததாலும் அதற்கேற்றபடி எமது தியான நேரத்தை விடாமல் ஈடு செய்து கொள்ள வேண்டுமென்றும் அன்று ஞாயிறு என்ற படியால் முகமழிப்பு, போன்றவற்றை முடித்த சிறிது நேரத்தில் ஒரு இளம் நண்பர் ,சார் வாருஙகள் பதநீர் (சுண்ணாம்பு தெளிவு) சாப்பிட்டு வரலாம் என அழைக்க இல்லை, இன்று வயிறு ஏதோ உப்புசமாக செரிமானமில்லாமல் இருக்கிறது இருந்தாலும் நீங்கள் குடியுங்கள், உங்களுக்காக வேண்டுமானால் வருகிறேன் என அவருடன் சென்றுவிட்டேன் ஆனால் தெலுவு குடிக்கவில்லை. ஏற்கெனவே குடித்த ஊட்டச்சத்து மாவுக் கூழும் செரிமானமாகமல் இருப்பதை உணர முடிந்தது.இரவு நெக்கு விடாமல் உடலில் வலி இருந்ததை பகிர்ந்து கொண்டேன். அவரவர் வலி அவரவர்க்கு யாரால் உண்மையில் பகிர்ந்து கொள்ள முடியும்?

டப்பர்வேர் பாட்டிலில் வாங்கி வந்த ஒரு சொம்பு தெளிவை/தெலுவை அது 7 ரூபாய்.இதை பனை வெல்லமாக்கவே பெரும்பாலும் யானறிந்த மணிக் குடும்பம் மரமேறிக் குடும்பம் பயன்படுத்தி வருகிறது. அதை குளிர் பதனப் பெட்டியில் வைத்து விரயமாகினோம். அடுத்து கோயில் கூட்டம் செல்வதற்குள் சிறிது வெங்காயம் போட்டு 2 தோசை சாப்பிட்டு கூட்டம் சென்று முடித்தேன். ஆனால் உடல் எல்லாம் ஒரே வலி . மூட்டுக்கு மூட்டு, கை எல்லாம் விரல் எல்லாம் வலி நீண்டு இறங்க.

உடல் நலம் கெட்டுவிட்டதை அறிய முடிந்தது. வயிறு உப்புசத்தை குறைக்க அசவோடிட்டா சிறு ஹோமியோபதி மாத்திரைகளை சில முறை சப்பி விழுங்கினேன். அல்சர்/குடல் புண் இருப்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாதே என்பதற்காக கொஞ்சம் மதியம் தயிர் கலந்து கரைத்து குடித்தேன். இரவு சுமாராக இருப்பதாக ஒரு நிலை. நன்றாக இருப்பது போல ஒரு போலி உணர்வு. நீருக்கு பதிலால எலக்ட்ரால் பவுடர் கரைத்துகுடிக்க ஆரம்பித்திருந்தேன். ஒரு அரை மாத்திரை ஏற்கெனவே உயர் இரத்த அழுத்த சித்த வைத்திய மாத்திரையை அரை பாகம் விழுங்கி இருந்தேன். இரவு வந்த வலி போல் இல்லை. ஆனால் காலை ஏழுட்டு முறை வயிற்றுப் போக்கு அல்லது பேதியாக ஆரம்பித்துவிட்டது குடித்த நீர் எல்லாம் தடம் மாறி குதத்தின் வழி கழிந்தது.

மாத்திரையை மாற்றினேன். தேடியது கிடைக்கவில்லை எனினும் குரோட்டன் டிக், கால்க் பாஸ் கிடைத்தது அதை வைத்து ஈடுசெய்து கொண்டு காலை உணவு ஏதும் உட்கொள்ளாமல் சிறு சப்போட்டா பிஞ்சு 2 பறித்து மோரில்கலந்து குடித்தேன். சாதரணமாக இருந்தால் உடனே கேட்கும். ஆனால் இது தொடர்ந்தது மதியம் தான் சிறிது தயிர் கலந்த கரைசல் அல்சர் வயிற்றுக்கு வழங்கி ஆகிவிட்டதே . சமாளித்தே விட்டேன் என எண்ணியிருந்தேன். இரவு நன்றாக ஓய்வெடுத்து உறங்கினேன். மறு நாளில் நல்ல கவனத்துடன் பத்திய உணவுக்கட்டுப்பாடு தயிர் கலந்து இட்லி,2 அல்லதுசிறு கவளம்சோறு அவ்வளவே. சரியாகி விடும் என நினைத்தால் மாலையில் மறுபடியும் கழிசல். உடனே மறுபடியும் 2 சப்போட்டா பிஞ்சு எடுத்து மாலையில் மோர் கலந்துகுடித்தேன். மறுபடியும் எலக்ட்ரால் கலந்த குடிநீர். இரவு உணவும் கட்டுப்பாட்டுடன் தயிரில் 2 இட்லி.

சாதாரணமாக மனைவியின் கைவண்ணச் சமையலை கேலி செய்வோம். ஆனால் அதை எல்லாம் உண்டு விட வேண்டும் துடிக்கும் நாக்கு.இந்த 2 ஆம் நாளுக்கு அப்புறம் வழக்கம் போல உறக்கம் வரவே மறுத்தது. பிறந்த நாள்வாழ்த்து சொல்லியிருந்த அனைத்து இணைய நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி தெரிவிக்கும் முயற்சி பலித்தது.

ஆக இன்று காலை இட்லி சிறுது வெங்காய சாம்பார் தொட்டுக் கொண்டு ஆம் தொட்டுக் கொண்டுதான் சாப்பிட்டு ஆஹா தேறிவிட்டோம் . என நம்பிக்கை வந்து விட்டது .காலை வழக்கம் போல் கூழ் குடித்தாகிவிட்டது குடிக்கும் நீரை குறைத்தாகிவிட்டது எனினும் பச்சை உருளைக்கிழங்கு நீர் வெறும் வயிற்றில் குடித்து வாயுத்தொல்லைகளுக்கு ஈடு கட்டியாகி விட்டது .வெறும் வயிற்றில் வழக்கம் போல் சிறிது சோற்றுக்கற்றாழையும் உண்டாகிவிட்டது. சாதாரண வாழ்வுதிரும்பி விட்டதாகவே எண்ணுகிறேன்.

காலை மலம் வழக்கம் போல திடப்பட்டுவிட்டது. இதை ஆங்கில மருத்துவரிடம் ஏன் காண்பிக்கவில்லை என தோழி ஒருவர் செல்பேசியில் விசாரித்தார் . எனக்கு அல்சர்,-குடற்புண் உண்டு. இடையில் சளிக்கு என ஒருமுறை யூகலிப்டஸ் ஆயில் விட்டு நீராவிச் சுவாசப் பயிற்சி வேறு. அதிலேயே வயிற்றுக் காந்தள் ஆரம்பித்து விட்டது. அதிகாலை எழும்போதே பசி. அதை ஈடுகட்ட 2 பிஸ்கட்கள்.

எனக்கு மூலம் உண்டு, உப்பின் அளவு அச்சுறுத்த, அதைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடு தேவை, உயர் இரத்த அழுத்தம் உண்டு, அதற்கு தியானம், மற்றும் நல்லெண்ணெய் கொப்பளிப்பும் உண்டு, மேலும் இரப்பையில் இருந்து செல்லும் குடல் வால்வு விரிந்து கிடக்கிறது எனவே செரிமான வாயுக்களின் எதிர் திரும்பல்கள் உண்டு, மேலும் செரிமானம் உறுப்புகள் யாவும் பிரச்சனையே. நிறமி அணுக்குறைபாடும் உண்டு. மேலும் ஒரு முறை குடல் துளை விழுமளவு டைபாய்டும், ஒருமுறை மலேரியாவும், ஏன் பாலமலையில் வசிக்கும்போது வெண் தழும்பு ஏற்படலும் நிகழ்ந்து அதற்கு பெருமருந்துக் கொடி+ ஆட்டுப்பால் உள்ளும்புறமும் சிகிச்சை செய்து தடுத்ததும் உண்டு.

இப்படிப்பட்ட உடலைக் கொண்டு ஆங்கில மருத்துவத்திற்கு சென்று ஒரு பிரச்சனையை சரி செய்யச் சென்றால் மறு விளைவு வருவது இயல்பாகிவிடுகிறது என்ற பயமும் உண்டு. மேலும் இப்படி எல்லாம் ஆக யாது காரணம் என்றால்:

உடல் தேறிவிட்டது என்ற போலி நம்பிக்கை. உடனே வீட்டில் மற்றவர்க்கு செய்த கொத்துக்கடலை+ கத்தரிக்காய் குழம்பை நன்றாக இருக்கிறதே என சாப்பிட்டது, வெயில் காலத்தில் பப்பாளி சாப்பிட்டது, கெட்டுப்போன பப்பாளிப்பழத்துண்டை சாப்பிட்டது, விசமாயிருந்தாலும் ஒரு துளி சாப்பிட்ட்டு விடுகிறேன் என ருசி பார்ப்பது,தவிர்க்கமுடியா- , உறவினர் விஷேஷங்களுக்கு செல்வது, நீர் குடிப்பதில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு எங்கோ தவறி வேறு நீர் சேர்த்தது. இனிப்புகள் இனிய சம்பவங்கள் பேர் சொல்லி சேர்த்தது, இப்படி நிறைய காரணங்களுடன் நேரம் கழித்து உணவை எடுத்துக்கொள்வது அல்லது வேளாவேளைக்கு காலம் தவறாமல் உணவை உண்ணாமல் பின் தள்ளிப் போடுவது, உறங்காமல் அதிக நேரம் கண் இரவில் கண் விழிப்பது இப்படி பல காரணங்கள் .எண்ணெய்க் குளியல் முடித்ததும் உஷ்ணம் இறங்க தியானம் செய்த பிறகு சாந்தி ஆசனத்தில் அதிக நேரம் உடற் அயற்சியால் படுத்துக்கிடந்தது, நீர் பிடித்தது, துவைத்தது, 2 நாய்க்கும் குளிப்பாட்டியது, அன்று தண்ணீர் தினத்தில் உஷ்ணம் தாங்காமல் பச்சை நீரை மூன்று நான்கு முறை ஊற்றிக் குளித்தது இப்படி இன்ன பிற எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.என்ன காரணம் உண்மையில் என்ன தெரியவில்லை.

அது மட்டுமல்ல ஆண்டுக்கு ஆண்டு பிறந்த நாள் வரும்போது, புத்தாண்டு வரும்போது, ஆடி மாதம் வரும்போது இப்படி ஆண்டுக்கு 3 முறையாவது உடல் நலம் குன்றி தேறுவது ஆனால் இப்படி நடந்த பிறகு அந்த ஆண்டில் ஏதாவது புகழ் அடையும் வண்ணம் நடப்பது, தம்பி மணியத்தின் 10 ஆம் தேர்வை அவர் சந்திப்பதற்குள் எமக்கு இந்த உடலின் சேதிகள் இத்தனை .உங்கள் உடலும் சேதி சொல்லும் அவற்றை ஆரம்பத்திலேயே கவனித்து விடுங்கள் நண்பர்களே. அப்புறம் அது கோபித்துக் கொள்கிறது உடனே சரி ஆக மாட்டேன் என சிறு குழந்தை போல அடம் பிடித்துக் கொள்கிறது. நல்லவேளை கொல்லாமல் இருந்தால் சரி.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்:பகத் சிங்கின் இறுதி நாள்

மார்ச் 24, 2014

Statues_of_Bhagat_Singh,_Rajguru_and_Sukhdev

 

லாகூர் மத்திய சிறைச்சாலையில் மற்ற நாட்களை போல சாதாரணமாகவே விடிந்தது 23, மார்ச், 1931. வழக்கம்போல காலை வேளையில் அரசியல் கைதிகள் தங்களது சிறைக்கூடங்களிலிருந்து வெளியே அனுப்பப்பட்டார்கள். சாதாரணமாக, அவர்கள் பகற்பொழுதுகளில் வெளியே இருப்பார்கள். சூரியன் மறைந்த பிறகு மீண்டும் சிறையறைகளில் அடைக்கப்படுவார்கள். அதனால் அன்று மாலை நான்கு மணிக்கே வார்டன் சரத் சிங் அவர்களிடம் வந்து சிறையறைகளுக்குத் திரும்பச் செல்லும்படி சொன்னபோது, ஆச்சரியப்பட்டார்கள்.

பிறகுதான், சிறைச்சாலையின் சவரத் தொழிலாளி பர்கத் சிறையின் ஒவ்வொரு அறையாகச் சென்று, அன்றிரவு பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு தூக்கிலிடப்படப்போவதை அடிக்குரலில் சொன்னார்.

கைதிகள் நிலைகுலைந்துபோனார்கள். பகத் சிங்கும் அவரது தோழர்களும் இறந்துவிடுவார்கள் என்று தெரிந்தாலும் அந்த நேரம் நெருங்கும்போது அதிர்ந்துபோனார்கள். சீப்பு, பேனா, கைக்கடிகாரம் போன்ற பகத் சிங்கின் பொருட்கள் எதையாவது கடத்திவர முடியுமா என்று பர்கத்திடம் கேட்டார்கள். ஒரு தேசத்தையே உத்வேகப்படுத்திய இளம் புரட்சியாளரின் நினைவின் பொருட்டு அவர்களுக்கு ஏதாவது தேவைப்பட்டது. அவர்களுக்கு அது வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாக்கப்படக்கூடிய பொருளாக இருக்கும். பர்கத், பகத் சிங்கின் சிறையறைக்குச் சென்று ஒரு சீப்புடனும் பேனாவுடனும் திரும்பினார். அதற்கு எல்லோரும் உரிமை கொண்டாடினார்கள். பிறகு, குலுக்கல் நடந்தது. எல்லோரும் மீண்டும் அமைதியானார்கள். தங்கள் அறைகளுக்கு வெளியே இருந்த பாதையிலிருந்து இப்போது அவர்களின் பார்வை விலகவில்லை. பகத் சிங் தூக்கு மேடைக்கு அந்த வழியாகப் போவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஒருமுறை அப்படி அந்த வழியாக பகத் சிங் மற்றும் தோழர்கள் தங்கள் சிறையறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, லாகூர் சதி வழக்கில் பகத் சிங்கும் அவரது தோழர்களும் நீதிமன்றத்தில் தங்களை ஏன் தற்காத்துக்கொள்ளவில்லை என்று பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் பீம்சென் சச்சார் கேள்வி எழுப்பினார்.

“புரட்சியாளர்கள் இறக்க வேண்டும்” என்று பதிலளித்தார் பகத் சிங். “அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகள் தியாகத்தின் மூலமாகத்தான் வலுவடையும், நீதிமன்றத்தின் மேல் முறையீடுகள் மூலம் அல்ல.”

ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?

பகத் சிங்கின் கடைசி விருப்பத்தைக் கேட்டறிய வேண்டும் என்கிற சாக்கில் தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை அவரது வழக்கறிஞர் பிராணநாத் மேத்தா சந்தித்தார். சிறையறைக்குள், கூண்டில் அடைபட்ட சிங்கம்போல குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த பகத் சிங், வழக்கறிஞரை ஒரு பெரிய புன்னகையுடன் வரவேற்று, தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தைக் கொண்டுவந்தாரா என்று அவரிடம் கேட்டார்.

அந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே புத்தகம் கேட்டு வழக்கறிஞருக்குத் தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்துபோய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், தனக்கு நேரம் அதிகமில்லை என்பதை உணர்ந்தவர்போல. நாட்டுக்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சாதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”

நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்று மேத்தா கேட்டபோது, பகத் சிங் பதில் சொன்னார்: “மகிழ்ச்சியாக இருக்கிறேன், எப்போதும் போல.” ஏதாவது ஆசை இருக்கிறதா என்று மேத்தா கேட்டார். “ஆமாம், மீண்டும் இந்த தேசத்திலேயே பிறக்க வேண்டும். இந்த தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும்,” என்றிருக்கிறார். பிறகு, மேத்தாவிடம் தனது வழக்கில் நிறைய அக்கறை காட்டிய நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸுக்கும் நன்றி சொல்லும்படி பகத் சிங் சொல்லியிருக்கிறார்.

பகத் சிங்கை சந்தித்ததைத் தொடர்ந்து ராஜகுருவையும் மேத்தா சந்திக்கிறார். ராஜகுரு அவரிடம் சொல்லும் கடைசி வார்த்தைகள்: “நாம் விரைவில் மீண்டும் சந்திப்போம்.”

சுகதேவ் ஒன்றும் சொல்லாமல் தனக்கு சில மாதங்களுக்கு முன்பு மேத்தா தந்த கேரம் போர்டை ஜெயிலரிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு மேத்தாவுக்கு நினைவுபடுத்துகிறார்.

மேத்தா சென்ற பிறகு அவர்களிடம் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பே அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்.

பகத் சிங் அந்த புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார்.

“ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?” என்று கேட்டார்.

தூக்குமேடை நோக்கி…

மூன்று புரட்சியாளர்களையும் தூக்குமேடைக்குத் தயார் செய்வதற்காக சிறை அறைகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள். பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு மூவரும் கைகளைக் கோத்துக்கொண்டு காவலாளிகள் பின்னால் நடந்தவாறு தங்களுக்கு மிகவும் பிடித்த சுதந்திரப் பாடலை பாடினார்கள்.

“நாங்கள் சுதந்திரமாக இருக்கும் ஒரு நாள் வரும்
இது எங்கள் மண்ணாக இருக்கும்
இது எங்கள் வானமாக இருக்கும்
தியாகிகளின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலங்களில்
மக்கள் கூடுவார்கள்
மண்ணுக்காக உயிர்நீத்த அவர்களுக்கு
மரியாதை செலுத்துவார்கள்.”

மூன்று பேருடைய எடையும் தனித்தனியாகப் பார்க்கப்பட்டது. மூவருமே எடை கூடியிருந்தார்கள். அவர்களைக் குளிக்குமாறு சொன்னார்கள். பிறகு, அவர்களுக்குக் கறுப்பு உடைகள் அணிவிக்கப்பட்டன. அவர்கள் முகங்கள் மறைக்கப்படவில்லை. வாகே குருவிடம் வேண்டிக்கொள்ளுமாறு பகத் சிங்கின் காதுகளில் கிசுகிசுத்தார் சரத் சிங்.

“எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், ஏழைகளின் துயரங்களுக்குக் காரணமாக இருக்கிறார் என்று கடவுளைப் பல முறை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால், தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் இந்தக் கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.

தூக்குமேடை பழையது. ஆனால், பருமனாக இருந்த தூக்கிலிடுபவர் புதியவர். மூன்று பேரும் தனித் தனி மரப் பலகைகள் மீது ஏறி நின்றார்கள். அவர்களுக்குக் கீழ் ஒரு ஆழமான பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. பகத் சிங் நடுவில் நின்றிருந்தார்.

அவர்களது கழுத்துகளில் சுற்றப்பட்டிருந்த தூக்குக் கயிறுகள் இறுக்கப்பட்டன. அவர்களது கைகளும் கால்களும் கட்டப்பட்டன. தூக்குக் கயிறுகளை அவர்கள் முத்தமிட்டார்கள். யாரை முதலில் தூக்கிலிட வேண்டும் என்று தூக்கிலிடுபவர் கேட்டார். சுகதேவ், தான் போக விரும்புவதாகச் சொன்னார். ஒவ்வொரு கயிறாக இழுத்து, பின்னர் அவர்களின் கால்களுக்குக் கீழிருந்த மரப் பலகைகளை உதைத்து விலக்கினார்.

சடலங்கள் தூக்குமேடையில் நெடுநேரத்துக்குத் தொங்கியபடியே இருந்தன. பிறகு, கீழிறக்கப்பட்டு ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டன. பகத் சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

புரட்சியால் மட்டுமே முடியும்!

பகத் சிங்கைப் பொறுத்தவரை சுதந்திர இந்தியாவுக்கான போராட்டம் என்பது அடிப்படையில் பொருளாதார முன்னேற்றத்துக்கான போராட்டமே. சுதந்திரம், முன்னேற்றத்துக்கான ஒரு வாய்ப்பை வழங்கும். வறுமையை ஒழிக்க முடியாத சுதந்திர இந்தியா வெறும் பெயரளவிலேயே சுதந்திரமாக இருக்கும். ஏற்கெனவே இருக்கும் ஒரு சூழலுக்குப் பதில் அதேபோல வேறொரு சூழலை உருவாக்குவதில் பகத் சிங்குக்கு விருப்பமில்லை. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்திலிருந்து வந்த பகத் சிங்குக்கு சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்கிற தாகம் இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால், அவர் ஜமீன்தார் பரம்பரையிலும் வந்தவர். சமூக வேறுபாடுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு மனிதர்களாலேயே நிரந்தரமாக்கப்பட்டிருப்பதை அவர் வாசிப்பின் மூலம் அறிந்தார். காரல் மார்க்ஸ் அவருடைய குரு. பொருளாதார அதிகாரத்தில் ஏற்படும் மாற்றமே மனித வரலாற்றின் ஏனைய மாற்றங்களுக்கான அடிப்படை என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் இல்லாத அரசியல் சுதந்திரத்தில் என்ன அர்த்தம்தான் இருக்க முடியும்? ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள் என்றால் சுதந்திரத்துக்குதான் என்ன அர்த்தம்? பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான வித்தியாசங்கள் எப்படி முடிவுக்கு வரும்? சோஷலிசத் தத்துவங்களைத் தெரிந்துகொள்வது அவருக்குப் புதிதாக இருந்தது. பொருளாதாரப் பிரச்சினைகளின் கருவறையிலிருந்துதானே அரசியல் வரலாறு, எண்ணங்களின் வரலாறு, மதங்களின் வரலாறு உள்பட எல்லாமே பிறக்கிறது? அரசியல் பாடம் என்பது அரசியல் உண்மைகளுக்கு முன்னால் இல்லாமல் பின்னால்தான் இருக்கிறது என்கிற இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் கருத்தை முதல்முறையாகத் தீவிரமாக உணர்ந்தார் பகத் சிங். அரசியல் நடவடிக்கைகள் என்பன ஒரே ஒரு காரணத்துக்கானவை அல்ல; அவை, பொருளாதார சக்திகளால் உற்பத்திசெய்யப்படுபவை என்று மார்க்ஸ் அவரை உணர வைத்தார்.

ஒரு முறை பகத் சிங், அவரது தாய் வித்யாவதி கௌருக்கு ஒரு கடிதம் எழுதினார்:

“அம்மா, எனது நாடு ஒரு நாள் சுதந்திரமடைந்துவிடும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், வெள்ளைக்காரத் துரைமார்கள் விட்டுச்சென்ற நாற்காலிகளில் மாநிறத் தோல் துரைமார்கள் வந்து உட்கார்ந்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது.”

பிரிட்டிஷ் அரசின் முடிவு என்பது அதிகாரத் தலைமையின் மாற்றம் மட்டும்தான் என்றாகிவிட்டால் மக்களின் கஷ்டங்கள் அப்படியேதான் இருக்கும் என்று நம்பினார் பகத் சிங்.

இந்தியாவின் பழமை வாய்ந்த அமைப்பை முற்றிலுமாகத் தகர்க்கும் வரை எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லை. இந்த அமைப்புதான் முன்னேற்றத்துக்கான தடையாக இருக்கிறது. தத்துவஞானிகள் உலகைப் பல விதங்களில் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆனால், அதை மாற்றுவதுதான் முக்கியம். அதைச் செய்வதற்குப் புரட்சியால் மட்டுமே முடியும்.

குல்தீப் நய்யார் எழுதிய ‘வித்தவுட் ஃபியர்: த லைஃப் அண்ட் ட்ரையல் ஆஃப் பகத் சிங்’ என்ற நூல் கவிதா முரளிதரனின் மொழிபெயர்ப்பில் ‘மதுரை பிரஸ்’ வெளியீடாக வரவிருக்கிறது. அந்த நூலிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

நன்றி : தமிழ் இந்து நாளிதழ்

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை


ஜாதிக் கயிறுகளின் இறுக்கம்,அரசியல் கட்சிகளின் நெருக்கம்,தேர்தல் கால கிறக்கம்

மார்ச் 21, 2014

untouchables-caste-india

 

 

ஜாதிக் கயிறுகளின் இறுக்கம்,அரசியல் கட்சிகளின் நெருக்கம்,தேர்தல் கால கிறக்கம்:சாதி ஒழியுமா? ஒழியாதா? என்ற பட்டி மண்டபத்திற்கு நடுவராக இருந்து சாதி ஒழியும் என தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் கழித்து இன்றைய காலக் கட்டத்தில் சாதி ஒழிய வில்லை என்றாலும் சாதி வெறி இல்லாதிருந்தால் போதுமே என்ற நிலைக்கு சாதியக் கொடுமைகளும் சாதிய தாக்கங்களும் கண்டறிந்த எமைப் போன்றோர் உணர்கிறோம். பின் வாங்கியிருக்கிறோம் இளமை விடைபெறும் இந்த நடுப் பிராயத்தில். இதுதான் உண்மையான யதார்த்தம். தத்துவம் சரியாக இருக்கிறது. இலக்கு நேராயிருக்கிறது எனினும் வெற்றி முனை கண்ணுக்கு எட்டாத இந்நிலை இந்தியாவில் நிலவுகிறது.

முறையில்லாத மின்வெட்டுகள் எமது நாளை சீர்குலைக்கும்போதும், கணபதி ராம சுப்ரமணியத்தின் பள்ளி இறுதித் தேர்வு காலத்தையும் மீறி இந்த பதிவை இட வேண்டிய நிர்பந்தம் யாதெனின், அடியேன் படித்த ஒரு பதிவும் இந்நாளில் தமிழகத்தின் சாதி மதக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடும், அது மட்டுமல்லாது தேர்தல் காலமான இதில் ஏனைய கட்சிகளும் எங்கெங்கே எந்த சாதியப்பிரிவு அதிகம் இருக்கிறதோ அங்கே அந்த சாதிப் பிரிவைச் சார்ந்த வேட்பாளரை தமது கட்சி சார்பாக நிறுத்தி இருப்பதும். இது இந்தியாவின் தேர்தல் கால வரலாற்றில் கட்சிகளின் வழக்கமான நடைமுறையாகி விட்டதுதானே என்றாலும் இந்த16 வது பாராளுமன்றத் தேர்தலைப் போல முன் எப்போதும் இந்தளவு சீர்கெடவில்லை. இதற்கு எதற்கு வெவ்வேறு கட்சி என்ற பேர்,வேறு கொள்கை என்ற வேர் கட்சிக்கு கட்சி மாறுபடுகிறது என்ற விளக்கம். எல்லாம் விரயம்.

அ.இ.அ.தி.மு.க கட்சியின் வன்னிய இனம் சார்ந்த வேட்பாளர்களை ஏழெட்டு பேரை திரும்ப பெற ஜெயலலிதாவுக்கு பத்திரிக்கை கோரிக்கை வைத்த பா.ம.க நிறுவனர் தெலுங்கு கட்சி என்று ஆரம்பித்திருப்பதும், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அணியில் எங்கெங்கே மக்கள் தொகை அதிகமாக வன்னிய இனம் உள்ளதோ அங்கெல்லாம் தொகுதிப் பங்கீடு செய்திருப்பதும். தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அன்பு மணி இராமதாஸை நிறுத்துவதன் மூலம் தமது குடும்பத்தில் இருந்து எவருமே பதவிக்கு வரமாட்டார்கள், வந்தால் தம்மை செருப்பால் அடிக்கலாம் என வெளிப்படையாக சொல்லி கட்சி ஆரம்பித்த தலைவர் இன்று என்ன செய்திருக்கிறார் என்பது செய்திகளாகின. மேலும் கொங்கு பேரவை அமைப்புக்கும், ஐக்கிய கட்சி என்ற அமைப்புக்கும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இவை எல்லாம் சாதிய அரசியலை அப்பட்டமாக கொடி கட்டி பறக்கச் செய்து வருகின்றன. பிரபலமான கட்சிகளில் எல்லாம் கூட இந்த சாதிய மேலோங்கல்களும், மேலாண்மையும்,அடக்குமுறைகளும் அப்படியே இருந்தாலும் வெளியே அவை வேறு பெயர்களில் காட்சி அளிக்கின்றன. கட்சி,கொள்கை, தலைமை என்ற பேர்களில் எல்லாம்.

இதை விடக் கொடுமை என்ன என்றால் இந்த சாதிய அரக்கனின் ஊடுருவல்கள் எல்லாம் கல்லூரிகளில் மாணவப் பட்டாளங்களிடையே ஓங்கி வளர்ந்திருந்து யாவும் தற்போது பள்ளி மாணவர்களிடையே செழித்து வருவதாக சில நாட்களுக்கு முன் ஒரு பதிவை வாசிக்க வேண்டி நேர்ந்தது. சாதிக்கு என்று ஒவ்வொரு வண்ணத்தில் வலது கையில் ஒரு கயிற்றை கட்டிக் கொள்கிறார்களாம். இதன் அடிமுடி தெரியாமல் ஆசிரியரும் கண்டிக்க முடியாமல் பள்ளிகளும்,மாணவர்களும் இந்த ஊடுருவல்களால் தற்போது திணறி வருவதாக அந்தசெய்திகள்தெரிவிக்கின்றன. இதுஇப்படியே தொடர்ந்தால் எதிர்கால சந்ததிகளும், மாணவ சமுதாயமும், மனித குலமும் இந்தியாவில் இந்த நாகரீகத் தொட்டில் எனக் கருதப்படும் தமிழகத்தின் நிலையும் என்ன வாகுமோ என்ற அச்சமே பீதியே நிலவுகிறது.

கமல், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்றவர்கள் தமது குழந்தைகளுக்கு பள்ளியின் சான்றிதழ் பதிவுகளில் சாதி பற்றி குறிப்பிடவில்லை என்பது பற்றி நாமெல்லாம் அகமகிழ்ந்து முன்மொழிந்தொம் வழிமொழிந்தோம். நன்றாகவே இருந்தது. ஆனால் அரசாங்கம், மத்தியிலும், மாநிலத்திலும் சாதி வாரியான கணக்கெடுப்புகள் நிகழ்த்தியுள்ளன. அதற்கு பெரும்பாலும் எங்குமே எதிர்ப்புகளும் மறுப்புகளும் எழுந்ததாக காணமுடியவில்லை. அட எங்க வீட்டு குடுமபத்தலமை பெண் பெயர் என்றாலே ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் கணக்கெடுக்க வரும் ஆசிரியர்களே. இந்த நாட்டை இந்திரா, சோனியா, ஜெயலலிதா, மமதா, மாயாவதி போன்றோர் ஆண்ட வரலாறுகள் இருந்தபோதும்

மேலும் அந்த பள்ளி மாணவர்கள் கைகளில் இரத்தக் கோடுகளாக கீறல்களை நிகழ்த்திக் கொண்டு வடு எடுத்து தழும்பை அடையாளமாக வைத்துக் கொள்கிறார்களாம். பிஞ்சு நெஞ்சுகளில் நஞ்சை கலந்துவிட்டார்களே இறைவா இதை எல்லாம், இந்த பாவத்தை எல்லாம் எந்த நதியில் கழுவினால் போகும்? கங்கையும், காவிரியும் மாசடைந்து விட்டு அவைகளே பாவ நதிகளாக மாறிவிட்டபோது?

எனவே எம் போன்றோர் சாதியை எமது ஆயுளில் ஒழியும் என்ற நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். வீரமாக பேசினோம், ஒரு காலத்தின் மேடைகளில் இதை ஒழிப்போம் என. ஆனால் நாங்கள் எல்லாம் விதிவிலக்காகி விட்டோம் இந்த குடிகார சமுதாயத்தில். எமது குடுமபத்திலேயே கூட சில உறவுப் பிள்ளைகள் தமது சாதியப் பிரிவிகளில் இருந்து தாழ்த்தப்பட்ட பிரிவாக சொல்லப்படும் இனங்களில் மணம் புரிந்து கொண்டு நன்றாகவே வாழ்கின்றனர். வாழ்த்துக்களை சொல்லி, அவர்கள் வாழ்வை எமது குடும்ப நெருக்கமான உறவுகள் வெறி கொண்டு வாழ்விடாமல் தடுக்காமல், விருப்பப்படி வாழ்ந்து கொள்ளுங்கள் என கொல்லுங்கள், வெட்டுங்கள் என செல்லாமல் , கருத்து வேறுபாடு இருந்த போதும் கூட அமைதியாக விட்டு விட்டார்கள்.

எனவே சாதியை ஒழிக்க முடியாமல் போயினும் கூட சாதிய வேறுபாட்டை பெரிது படுத்தாமல் சாதிய வெறி இல்லாமல் வாழ வேண்டியது அவசியமாகப் படுகிறது. அதுவே மதத்திற்கும் பொருந்தும். எனவே இந்த சாதிய கயிறுகளின் இறுக்கமும், அரசியல் கட்சிகளின் இவை பற்றிய நெருக்கமும்,தேர்தல் கால கிறக்கமும் மக்களை பாதிக்கக் கூடாது என எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்தனை செய்கிறோம்.இந்த கட்சிகள் எல்லாம் பெரிது படுத்தி பிரிவு செய்து தமது கட்சிகளின், சுய நல வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை கண்டு மக்கள் மயங்கி விடக்கூடாது அப்படி மக்களும் அதை நோக்கி சென்றுவிட்டால் நாடே காடாகி விடும். மிருகங்களும் பறவைகளும் கூட மனிதர்களை கண்டு சிரிப்பாய் சிரிக்கும். சிறகால் அடிக்கும்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை

பி.கு: அப்படி ஒரு தேர்தல் சாதிய, மதவாதங்களை ஊக்குவிக்க நடப்பதாக இருந்தால் அந்த தேர்தல் முறைகளை மறு பரிசீலனைச் செய்வது அவசியம். அப்படி ஒரு தேர்தல் மனிதர்களைப் பிரித்தள்வதாயிருந்தால் அது எதற்கு வேண்டாமே!தேர்தல் ஆணையத்தின் பணியும், உச்ச நீதிமன்ற தலையிடல்களும் இந்த நோக்கத்தில் உடனே செயல்பட வேண்டிய அவசியங்கள் நேர்ந்துள்ளன..

 


பைபிளை எனக்கு(ம்) பிடிக்கும் பைபிளுக்கும் என்னைப் பிடிக்கும்:

மார்ச் 19, 2014

 

wild-animals-you-are-viewing-cape-of-good-hope-panorama-2507249

 

பைபிளை எனக்கு(ம்) பிடிக்கும் பைபிளுக்கும் என்னைப் பிடிக்கும்: என் பொருட்டு மக்கள் உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவை எல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

மத்தேயு:5 மலைப்பொழிவு:

உப்பும் ஒளியும் : மாற் 9:50; லூக் 14:34- 35

நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலை மேல் இருக்கும் நகர் மறைவாய் இருக்க முடியாது. எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை. மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவர்க்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையை போற்றிப் புகழ்வார்கள்.

திருச்சட்டம் நிறைவேறுதல்
திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல; நிறைவேற்றுவதற்கே வந்தேன். விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும் முன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். மாறை நூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்லுகிறேன்.

விபசாரம்: மத்19.9: மாற் 10:11,12;லூக் 16:18

விபசாரம் செய்யாதே என கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. உங்கள் வலக்கண் உங்க்ளைப் பாவத்தில் விழச் செய்தால் அதைப் பிடுங்கி எறிந்துவிடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உஙக்ள் உடல் முழுதும் நரகத்திற்கு செல்வதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும். எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். {விலக்கப்பட்டோரை மணப்போரும் விபசாரம் செய்கின்றனர்}.(?)

ஆணையிடுதல்:

பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர் என்று முற்காலத்தவர்க்கு கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம் விண்ணுலகின் மேலும் ஆணையிடவேண்டாம். ஏனென்றால் அது கடவுளின் அரியணை. மண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம் ஏனெனில் அது கடவுளின் கால்மணை. உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. ஆகவே நீங்கள் பேசும்போத் ஆம் என்றால் “ஆம்” எனவும் “இல்லை” என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள் இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிட்த்தில் இருந்து வருகிறது.

படித்ததில் பல பக்கங்கள் இப்படி பிடித்ததுதான்.இந்த குர் ஆனிலும் பைபிள் நூலிலும் இதை அச்சிடுவதற்கு பிழையின்றி வருவதற்கு என்ன பாடு பட்டார்களோ எவ்வளவு முயற்சி எடுத்துக் கொண்டார்களோ அதற்கு ஒரு மரியாதை செய்யும் முகமாகவே இந்த பதிவு இடப்படுகிறது. மற்றபடி இதில் எவ்வளவோ காலத்திற்கு பொருந்தாத பழமை இருக்கலாம் முரண் பாடு இருக்கலாம், கருத்து வேறுபாடு இருக்கலாம் அவை எல்லாம் வேறு.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.


பெண் என்னும் ஆயுதம்

மார்ச் 17, 2014

 

femalesoldiers_16

பெண் என்னும் ஆயுதம்:இந்திராவை மொரார்ஜிக்கு பதிலாக ஏற்றி வைத்த காமராசரை இந்திராவால் துச்சமாக எண்ணித் தூறு செய்ய முடிந்ததும், ஏகோபித்த தமிழக மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த எம்.ஜி.ஆரால் தற்போதைய முதல்வர் ஜெயலலிதாவை ஒன்றும் செய்ய முடியாமல் போனதும்,இங்கிலாந்தின் இரும்பு மங்கை என்னும் மார்கரெட் தாட்சர் கூட சந்திராசாமியிடம் பணிந்ததும் சந்திராசாமி காளி பக்தராகவே இருந்து இந்திரா போன்றோருக்கு தொடர்புடையோராக இருந்ததும் இப்படியாக தாய் வழிச் சமுதாயத்தில் பெண்ணைச் சுற்றியே ஆண்கள் உழன்று வந்ததும் மனிதகுலம் வளர்ந்ததும் இன்று மறுபடியும் வளைந்து இழிந்து பின் நோக்கியே சென்றுவருவதுமான காட்சிகளின் பதிவு இது.

கடந்த ஒரு சில நாட்களுக்கும் முன்னால் ஒரு தினசரியில் ஒரு பெண் தாம் திருடிய தங்க செயின்,தோடுகள், பணம் ஆகியவற்றை தமது பிறப்பு உறுப்புள் மறைத்து வைத்திருந்ததார் என்றும், அவர் வைத்திருந்த பொருள்கள் கால் வழி ஊடூருவி ஓடும் நரம்பு பகுதியை அழுத்தி தொந்த்ரவு தர அவரால் நடக்க முடியாமல் போனது கண்ட காவல்துறை அவரை மருத்துவமனையின் பரிசோதனைக்குட்படுத்திய போது அவரது பிறப்புறுப்பில் மறைந்திருந்த சுரங்கப் புதையலை வெளிக்கொண்டு வர பெண் மருத்துவர்களின் சேவையும், எxரே, ஸ்கேன் போன்ற கதிர் வீச்சு ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டு அவரைப்பற்றியும் அவரது திருட்டுத் தொழிலில் அவருக்கு உதவிய அவரது தங்கை, மற்றும் ஆண் நபர் பற்றிய துப்பு வெளிப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது எமக்கு அந்தகால கிரேக்க ரோமானியப் பேரரசுகளின் இராணிமார்கள் வேறு அன்னிய ஆடவருடன் புணர்ச்சி கொள்ளாதிருக்க அவர்தம் குறிக்கு பூட்டு இட்ட கதையை நினைவுபடுத்தியது.

 

 

woman-seductive

என்ன இந்த பெண் இந்தசெயலில் ஒரு பூட்டு போட்டுக் கொள்ளவில்லை அவ்வளவுதான். அதே போல பல பெண்களும் சர்வ சாதாரணமாக தமது கைப் பர்ஸ்கள், மணிப்பர்ஸ்கள், செல்பேசிகள் போன்றவற்றை மார்பக அறைக்குள் பத்திரப்படுத்தி எடுத்து புழங்குவதை நாடு கண்டி(ரு)க்கிறது. இதனால் மார்பகத்திற்கு ஊறு நேர்கிறது என்ற மருத்துவ அறிக்கைகளும் இருக்கின்றன.

மற்றொரு செய்தியில் கொள்ளைக்கார இராணி ஒருவர் காவல்துறை ஆண் நண்பர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு ஒரு தொகையை (இரண்டாயிரமோ ஐயாயிரமோ அடியேனுக்கு மறதி )செலுத்தி இருப்பதாகவும் அவருக்கும் இவருக்கும் என்ன உறவு என்று பார்க்க ஆரம்பித்தால் இவர் தமது குற்றப் பின்னணியில் இருந்து வெளி வர அந்த நபர் உதவியதற்கு கைம்மாறாக ஏற்கெனவே இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த தொகையை இந்தப் பெண் அந்த காவலரின் கணக்கிற்கு கட்டி இருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக மற்றொரு செய்தி தெரிவிக்கிறது.

இந்த நேரத்தில் அடியேனுக்கு ஒன்று நினைவிற்கு வருகிறது அது ஏற்கெனெவே சொல்லப் பட்டிருந்தாலும், இந்த திருடர்களிடம் கூட ஒரு நியாயம் இருந்திருக்கிறது இவர் வெளியே வந்து அந்த போலீஸ்காரருக்கு சொன்னபடி ஒரு தொகையை கணக்கிற்கு கட்டி உள்ளார். ஆனால் நமது தி.மு.க தலைவர் கண்ணதாசனின் நண்பர், ஒரு பெண்ணை புணர்ந்து விட்டு அதற்கு பணம் கேட்டதற்கு ஒடிவிடு, பணம் கேட்டால் போலீசாரிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என பயமுறுத்தி ஏமாற்றித் துரத்தியதாக வனவாசம், மனவாசம் என்ற தமது சுயசரிதையில் கண்ணதாசன் தமது கலைஞர் நண்பரைப்பற்றி அப்படியே எழுதியுள்ளதற்கு எந்த இடத்திலுமே கலைஞர் மறுப்பு தெரிவித்ததாக எழுதியதாகவோ படித்ததாகவோ எம் நினைவில் இல்லை.

பேருந்தில் சில கூட்டம் மிகுந்த வழிப்பாதைகளில் எல்லாம் சில பெண்கள் குழந்தைகளை கையில் ஏந்தியபடி மிக நெருக்கமான கூட்டமிகுந்த பேருந்துகளில் ஏறி ஏமாந்த நேரத்தில் பணம், நகை போன்றவற்றை கையாடி விடுகின்றனர் என்பதும் மறுக்க முடியா செய்திகள். இதில் ஆண் பெண் என்ற வேறு பாடு இல்லாமல் இந்த தொழில் நடைபெறுகிறது என்பதையும் மறுக்க முடியாமல் போனாலும் பெண்கள் இதற்கு ஒரு ஆயுதமாக மை வைத்து செய்வது போன்ற பணிகளில் செயல்படுகிறார்கள் என்பதையும் மறுத்து விடுவதற்கில்லை.

நாம் இந்த பதிவுடன் கலந்தளாவும் பெண்கள் எல்லாம் ஒரு சில பெண்கள் என்னும் பிரிவின் கீழ் அடங்குபவர்கள்தானே தவிர எல்லாப் பெண்களும் அப்படித்தான் என்ற சொல்லப்படுவதல்ல. ஏன் எனில் எமைப் பெற்றவரும் தாய்தான், எமக்கும் சகோதர சகோதரிகள் உற்ற நேரத்தில் உறுதுணையானவர் வாழ்வின் மகத்தான பகுதிகளில் உடன் வந்தவர்கள் மறக்க முடியாத நெகிழ்வுடன் என்றும் எண்ணிப் பார்க்க வருபவர் யாவரும் பெண்கள்தான். எமது 2 ஆம் வகுப்பு ஆசிரியை கூட இன்றும் 45 ஆண்டுகள் ஆனபிறகும் கூட பெருமை மிகு வட்டத்துள் இருக்கிறார் என்பதையும் அப்படிப்பட்ட ஆசிரியைகளின் சினேகமே எமது தங்கையை ஒரு “பதிவு பெற்ற”(அரசு)அலுவலராக இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக ஆக்க எம்மால் ஆன ஒரு ஊக்கமாக அமைந்தது என்றும் அதன்பின் அவர் பின் நிறைய ஆசிரியர்கள் அவர்போல எமது குடும்பத்திலும் யாமறிந்த வட்டத்துள்ளும் உருவாக நிறைய தூண்டு உணர்வுகள் உண்டாகி இருக்கின்றன என்பதையும் யாம் இந்த நேரத்தில் நினைவு இறுத்திக் கொண்டுதான் இந்த பதிவை இடுகிறோம். படிக்கும் உங்களுக்கும் முக்கியமாக பெண்களுக்கும் அந்த தாக்கம் இருக்க வேண்டும் என்றுதான் இதை இங்கு குறிப்பிடுகிறேன். ஒரேயடியாக பெண்களை குறைசொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இடக்கூடிய பதிவல்ல இது.

 

 

grandma.533span

பொதுவாகவே ஒரே வேலையை ஆண்கள் செய்தாலும் பெண்கள் செய்தாலும் ஒரே மாதிரி செய்தாலும் பெருமை பெருவது அதிகம் பெண்கள்தான். அதுதான் நமது பெண்பாடு பண்பாடு அதே நாட்டில்தான் அதிகம் பெண்கள் துன்புறுபவர்களாகவும் துன்பத்துக்கு ஆளாகிறார் எனப்தும் இரு வேறு கூறு.

எமக்கு இந்த பெண் தாம் திருடிய பணம் நகைகளை, தமது குடிகாரக் கணவன் அல்லது ஆண் நண்பன் திருடி சென்று குடித்து விடுவான் எனவே அங்கே வைத்தேன் எனச் சொன்ன விளக்கம் நெஞ்சை அறுப்பதாகவும், இந்த பதிவை இடக் காரணமாகவும் அமைகிறது. எப்போதோ யாம் சிறுவனாக இருக்கும்போது “பாப்பிலோன்” பட்டாம்பூச்சி என்னும் ஒரு தொடர் குமுதம் இதழில் வந்தது. அதில் வரும் முக்கிய கதா பாத்திரம் பொதுவாகவே எல்லா சிறைகளில் இருந்துமே அது எப்படிப்பட்டதாக கடல் கடந்து இருந்தபோதும் கூட தப்பித்து வரும் சிந்தனையுடன் பெருமுயற்சி செய்வதாகவும், நிறைய முறை மாட்டி சாவதைத் தவிர வேறு எல்லாவகையான துன்பங்களையும் அனுபவித்தி விடுவதாகவும் அது உண்மைச் சம்பவங்களால் நிறைந்த வாழ்வின் வரலாறு என்றும் இருக்கும். அந்த கதையின் நாயகன் சிறை அதிகாரிகள், வார்டன் ஆகியோரை ஏமாற்ற தமது ஆசன வாய்/குதத்திற்குள் பணம் ஆகிய முக்கிய பொருள்களை ஒரு டப்பா அல்லது குப்பி போன்றவற்றில் அடைத்து அதை செருகிக் கொண்டு இருப்பார். மலம் கழிக்கும்போது அதை வெளியே எடுப்பதும் இருந்து முடித்து பின் மறுபடியும் செருகி மறைத்தபடியாகவும் வைத்து காப்பாற்றிக் கொள்வார் என்றும் இருக்கும். அதையே இந்த பெண் தமது பிறப்பு உறுப்பை ஒரு புதையல் கூடமாக , ஒரு சுரங்கமாக ஆக்கி வைத்திருந்ததும் எமக்கு நினைவு படுத்துவதாக இருக்கிறது.

இதையேதான் இந்த நாட்டின் தேர்தல் போன்றவையும் செய்கிறதோ என்றும் கூட தோன்றுகிறது.எம்.ஜி.ஆர் தம்து கட்சியில் கொ.ப.செ என்ற ஒரு பதவியைக்கொடுத்து தலைவலிப்பட்டு அதன்பிறகு அவரை விலக்க முனையும் போதெல்லாம், அல்லது இவரை வேண்டாம் என்று மறுத்தபோதெல்லாம் அம்மையார் ஏதாவது ஒரு பிரபல இதழில் தம்து சுயசரிதையை வெளியிடுவேன் வாரம் ஒரு அத்தியாயமாக எழுத உள்ளேன் என விளம்பரம் வரும், அதன் பிறகு என்ன நடக்குமோ, எம்.ஜி.ஆர் என்ன செய்தாரோ என்ன செய்வாரோ அந்த சுய சரிதை அம்மையாரால் இது வரை கூட எழுதப்பட்டதேயில்லை வெளிவந்ததும் இல்லை. எழுதப்பட்டிருக்கிறதா என்றும் தெரியவில்லை.

ஆனால் இவர் அதற்கும் பிறகு பல வகையிலும் போராடி இன்று தமிழகத்தின் 3 முறை முதல்வராக ஆகி விட்டார். அந்த தனிப்பெரும் கட்சியின் இணையற்ற தலைவராகியும் இருக்கிறார். அடுத்த இலக்கு இவருடையது நாட்டை வழிநடத்தும் முக்கிய தலைவியாக மாறுவது, அது பிரதமாரகவோ, வேறு பேரிலோ.

பொதுவாகவே நீலிக்கண்ணீர் நெற்றியில் என்பார்கள் சில பெண்கள் அழுகையை கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துவார்கள், சில பெண்கள் அழகை ஆயுதமாக பயன்படுத்துவார்கள், சில பெண்கள் அன்பை ஆயுதமாக பயன்படுத்துவார்கள்,சில பெண்கள் தமது கற்ற வித்தையை ஆயுதமாக பயன்படுத்துவார்கள், சில பெண்கள் பிறரிடம் இருக்கும் குறைபாட்டை, பலவீனத்தை அறிந்து கொண்டு பிளாக் மெயில் செய்வது போல அல்லது கோரிக்கையாக அவர்களின் வேண்டுகோளை முன்னிருத்தி ஆயுதம் என்னும் அஸ்திரத்தை பயன்படுத்துவார்கள். தற்போதைய அரசுகள் மதுவை பயன்படுத்துவது போல, இலவசத்தை பயன்படுத்துவது போல இந்த நியாயவிலை கடைஎன்னும் பேரில் அதில் அமரும் அரசின் கூலிக்காரர்கள் மக்களின் இலவச பலவீனத்தை தமது முதலாக்கி 2 நாள் மட்டுமே இலவச அரிசி என அதிகாலை முதல் வரிசையை ஏற்படுத்தி சண்டை சச்சரவிட்டபடி இருக்க சுமார் 10 மணிக்கு ஆட அசர வந்து ஒரு இன்ச் அளவு டீயை/தேநீரை கால் மணி நேரம் குடித்து விட்டு, ஒரு சிகரெட்டை அடுத்த கால் மணி நேரம் குடித்து முடித்து விட்டு கடவுளாகி என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என திருட்டுத்தனமாக பொருள்களை கள்ள சந்தையில் விற்று நெளிந்து கொண்டிருக்கும் நசுக்கி எறியப்பட வேண்டிய புழுக்களை உற்பத்தி செய்வது போல.இருக்கும் கார்டுகள் எண்ணிக்கை அதன் அளவான அரிசி எங்கே சென்றுவிடும்? இந்த நியாயவிலைக்கடைகளில் இருக்கும் புழுக்களுக்கே நிறைய போலி நியாயவிலைக்கார்டுகள் இருப்பதாகவும் செய்திகள். இந்த பெண் அந்த ஆண் கிலோ 2 ரூபாய்க்கு என்ற அரிசியை இலவசம் என்று சொல்லி யாருக்கு நன்மை செய்திருக்கிறார் எனில் வியாபாரிகளுக்கும் திருட்டுத் தனமாக அந்த அரிசியை, நியாய விலைப்பொருட்களை அதிக விலையில் விற்பவர்க்கும்.

இந்திரா காந்தி என்னும் துடிப்பு மிக்க நேரு குடும்பத்து மங்கையை காமராசர் என்னும் கர்ம வீரர் தூக்கி வைத்தார். அதன் பின் அவரது ஆயுளில் எழுந்திருக்கவேயில்லை அவ்வளவு கனம். எம்.ஜி.ஆர் என்னும் நடிகர் இந்த அம்மாவை தூக்கி வைத்தார் அதன் பின் அவரால் அவருக்கும் இவருக்கும் என்ன உறவு ஏன் இவரை மட்டும் அவரால் கண்டிக்கவே முடியவில்லை என்பது இவருக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அவர் தம் ஆட்சியில் இராமவரம் தோட்டத்திற்கு தப்பு செய்த மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ., போன்றோரையே அடித்து புத்தி புகட்டியதாக எல்லாம் செய்தி உண்டு. ஆனால் இந்த அம்மணியிடம் பெட்டிப் பாம்பாகவே இருந்து பேசாமலே இருந்து தமது வாழ்வை சரித்திரப் புகழின் இரகசியம் காத்து முடித்துக் கொண்டார்.

மார்கரெட் தாட்சர் என்னும் இரும்பு மங்கை எப்படி சந்திராசாமி என்னும் மாயக்கார காளி பக்தரிடம் மண்டி இட்டாரோ அந்த இரகசியத்தை எல்லாம் யாருக்கும் சொல்லக்கூடாது என தமது இறுதி வரை இரகசியம் காத்து சென்று சேர்ந்தார். இந்திரா காந்தி கூட சந்திராசாமியின் நெருக்கமானவராக இருந்திருக்கிறார் என்று செய்திகள் உண்டு.

ஆக தாய்வழிச் சமுதாயம் என்னும் மனித குல மாண்புகள் ஒரு பெண்ணைச் சுற்றி எப்படி வளர்ந்து பல்வேறு பரிமாணங்களுடன் கற்பனைக்கெட்டாத முகங்களுடன் வளர்ந்து திரிந்து கிடக்கிறதோ அவற்றின் உருவங்களில் இந்த பெண் என்னும் ஆய்தம் பெரும் பங்கு வகிப்பதை வரலாறுகள் நமக்கு நன்கு உணர்த்துகின்றன.

 

thumb_672e7db554926059c8688e16b1295b42

பெண் ஜேம்ஸ்பாண்ட் படஙகள் ரிவால்வார் ரீட்டா, கன்பைட் காஞ்சனா என்றெல்லாம் அந்தக் காலத்தில் தமிழ் படங்களில் கர்ணன் என்ற இயக்குனர் எடுத்து சி.ஐ.டி.சகுந்தலா போன்ற பெண்களை ஆயதம் தாங்கியவர்களாக அறிமுகப்படுத்தினார்.ஆங்கிலப் படங்களிலும் தொடர்களிலும் ஆங்கிலப் பெண்கள் படு செமர்த்தியாக சண்டைக்காட்சிகளில் எல்லாம் ஆய்தம் ஏந்தி சண்டையிடுவார்கள். ஏன் தற்போது பாதுகாப்புப் படைகள் யாவற்றிலுமே பெண்கள் ஆயுதம் ஏந்த சில பிரிவுகள் தவிர அனைத்துப் பிரிவுகளிலுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரசவ வேதனையை விட பெரிய வேதனை இல்லை. வலி இல்லை என்கிறது மனித இயல். ஆனால் தற்போது வேண்டும்போது ஆய்தம் பயன்படுத்தி தமக்கு வேண்டும்போது குழந்தையை வெளி எடுத்து கொள்கிறார்கள்.பொதுவாகவே மருத்துவத்துறையில் தாதியர் பணிகளில், ஆசிரியர் பணிகளில் நர்ஸ் என்றாலும் டீச்சர் என்றாலும் நமது கண்கள் முன் பெண்களே வந்து நிற்கின்றனர் புனித பணி செய்வோராய். அன்னை தெரஸா போன்றோர் ஆய்தமாக மனித குல சேவையை, அன்பை, காருண்யத்தை விதைத்தார்கள்.

ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தாலும் அந்த பெற்றவர்க்கு பிறக்கும் குழந்தை யாருடையது அதன் தாய் யார் தந்தை யார் என்று அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் புணர்ந்து பிறக்கும் சந்ததிகளுக்கான வாரிசுகளுக்கான தந்தை யார் என்று சொல்ல முடியாததால் அந்த குழந்தைக்கு தாய்தான் அடையாளம் தந்தை அடையாளமில்லாமலே போய் விடுகிறது அது போன்ற மேலை நாட்டுக் கலாச்சாரம் இந்தியாவிலும் வந்து புகுவதை பெண்கள் எந்த ஆய்தம் ஏந்த வேண்டும் என்பதையும் எப்படி தடுப்பது என்பதிலும் தெளிவாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. விதவா விவாகம், மணமுறிவுகள் , இதில் அடங்காது. அவை சமுதாய மாறுதலுக்கு அவசியமானவைதான். ஆனால் ஒரு ஆண் பல பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வதும், ஒரு பெண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்வதும் கடைசியில் விசிறி எறியப்படும் குழந்தைக்கு யார் பெற்றோர் எனத் தெரியாமலே அனாதையாக வாரிசுகள் உருவாகி நாட்டின் கலாச்சார மாண்புகளையே கெடுத்து வருவதும் பெண் என்னும் ஆயுதம் சரியாக இல்லாததால்தானோ என்ற ஐயப்பாட்டை எழுப்புகிறது.

அதனால்தான் (முன்) ஆவதும் பெண்ணாலே,(பின்) அழிவதும் பின்னாலே.பெண்ணாலே என்ற முதுமொழிகள் யாவும் வழங்கியதையும் நம்மால் உணரமுடிகிறது. மமதா பானர்ஜியும்,மாயாவதியும், ஜெயலலிதாவும், சோனியா இராஜிவும்,மிஸஸ் லாலுவும் இப்படி இந்த தேர்தலில் பல பெண் என்னும் ஆயுதம் முகாமிடுகின்றன. இதன் விளவுகளை சந்திக்க 2 மாதங்களே. ஒரு நாட்டால் ஒரு பெண் மேல் போட்ட வழக்கை 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் முடிக்க முடிகிறதா பாருங்கள். அதற்குள் எத்தனை ஆட்சி மாற்றம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். கனிமொழி என்ற இன்றைய இராஜ்ய சபா உறுப்பினர் சிறையிருந்ததையும் அவருக்கு 2G அலைக்கற்றை தொடர்பிருந்ததையும், தயாளு அம்மாளுக்கும் இந்த அலைக்கற்றை கலைஞர் தொலைக்காட்சி விஷியங்கள் எந்த அளவு இருந்தது என்பதையும், நீதிமன்றமே அவரது வயது கருதி விசாரிக்க வீடு வந்ததையும் எல்லாம் மேலும் கிளியோபாட்ரா முதல் பெண் என்னும ஆயுதத்தை உண்மையாகவே ஏந்திய மூவலூர் இராமமிர்தம், இராணி இலட்சுமி பாய், போன்றோருடன் இந்த பெண் ஆய்தங்களையும் ஒப்பிடுக.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 

 


காற்றோடு வெயில்,நேற்றோடு பொய்யில்,நெய் வெண்ணெயில்

மார்ச் 12, 2014

 

1_Vijayakanth20mural

 

காற்றோடு வெயில்,நேற்றோடு பொய்யில்,நெய் வெண்ணெயில்:புவி யாவும் பாலைவனத் தட்ப வெப்ப நிலை நிலவுமளவு இயற்கை பிரிவுகளின் பேரழிவுகளும், இந்தியாவின் 67 ஆண்டுகள் நேற்று வரை ஆட்சிமுறை யாவுமே பொய்யில் கழியவும் வெண்ணெய் உருக நெய் ஆவது போல இன்னும் 2 மாதங்களில் மற்றொரு பொய் மேளா விழாக்களின் முடிவை 16ஆம் மக்களவை தேர்தல் மூலம் சந்திக்க விருக்கிறது.

விடிவதற்கு தாமதமாகும் வெயில் காலமாகவும் நள்ளிரவுக்குப் பின் குளிராக இருக்கும் வெயில் காலமாகவும் காலை 10 மணிக்கு மேல் தாங்க முடியாத வெயில் காலமாகவும் அறுதியிட்டு சொல்லமுடியா தட்ப வெப்ப சூழல் நிலவும் நிலை பூமிக்கு உருவாகி விட்டது. நீர் நிலை அருகாமையில் அடிக்கும் காற்று அதன் அருமையை சற்றுநேரம்சொல்லிப் பிரிந்து சென்றுவிடுகிறது. அது போலவே இந்தியாவின் மிக அதிகம் பேசப்படும் பொருள் 16 வது மக்களவைக்கான தேர்தலாக இருக்கிறது. இந்நிலை இன்னும் 2 மாதங்கள் நீடிக்கும். மே மாதம் 16 ஆம் தேதியில் வெண்ணெய் உருகி நெய்யாகி முழங்கை வரை காய்ச்சுபவர்க்கு வழிந்தோடும். மக்கள் வெறுங்கை காண்பிக்கப்படும் நக்கலாம். சிலரோ மானசீகமாக நெய் நன்றாக இருக்கும் என்றும் கனவை காணலாம். நன்றாக இருக்கிறது என்றும் பொய் புகலலாம்.புகழலாம். வெறும் புகழ்ச்சி என்ன தரும்? என்ன பயன் தரும்?
ஆனால் இந்த முறை வெறுங்கையால் முழம் போடவே முடியாது என “கை” திருப்பி திருப்பி 2 முறை காட்டப்பட்டு ஆட்டப்பட்டது இம்முறை அந்த “கைக்கு”3வது முறையாக மக்கள் டாட்டா காட்டுவது உறுதி எனத் தெரிகிறது. அம்மா ஸ்டாலினுக்கு எதிராக பேசும்போது “கை” சின்னமாக இருக்க வெட்டிக் கொள்ள முடியுமா? மாம்பழம் சின்னமாக இருக்க விற்காமல் இருக்க முடியுமா? ஏன் எமது “இரட்டை இலை” சின்னத்தை மட்டும் பேருந்துகளில், எம்.ஜி.ஆர். நினைவகத்தில், குடிநீர் பாட்டிலில் , போஸ்டர்களில் இருந்தெல்லாம் எடுக்கச் சொல்லி வழக்குதொடுக்கிறீர்? தேர்தல் ஆணையத்திடம் நெருக்கடி கொடுக்கிறீர் என கார சாரமாக சாடி தேர்தல் பரப்புரை செய்து வருகிறார் எப்படியும் இந்தப் பய மக்க எல்லாம் வாக்குகளை பிரித்தது போக 40க்கு 40மே வந்து விடலாம் என மகிழ்வுடன். ஆனால் அவரது பேச்சில் எங்கெல்லாம் இரட்டை இலை இருக்கும் தாவரம் எல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் சென்று தேர்தல் ஆணையம் கிள்ளி எடுக்கவா முடியும் என்று கேட்கவில்லை.மேலும் கம்யூனிஸ்ட் கால்வருடிகளுக்கு நல்ல பாடத்தையும் வழங்கி உள்ளார். இவர்களும், காங்கிரஸ் கட்சியும் யாராலும் சீந்தப்படாமல் தனியாக நிற்கிறோம் என பாட்டுப் பாடி வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு ராசி இந்த இந்திய ஜனநாயக தேர்தல் ராசி தவறான தலைவர்கள் பதவிக்கு வரவே வழிகாட்டுகின்றன. அம்மாவின் பெங்களூர் வழக்கு 15 ஆண்டுகள் நிறைவடையாமலே அம்மாவின் வழக்கறிஞர் லீவு எடுத்து வருகிறார். அனேகமாக தேர்தல் முடிந்த பிறகு இவருக்கு உடல்நிலை சீரடைந்து விடும் என எதிர்பார்க்கலாம்.

இந்த தேர்தல் ஆணையமும்,உரிய ஆவணம் இருந்தால் பெற்றுக் கொள்க என50,000க்கும் மேல் போக்குவரத்தில் இருக்கும் எல்லாப் பணத்தையும் பிடித்து வருகிறது. பார்க்கலாம் தமிழகத் தேர்தல் ஏப்ரல் 24 என்னும்போது அதற்குள்ளாக இப்படியே எந்த கட்சியுமே பணம் அளிக்காமல் தேர்தல் நடத்தி விடுகிறதா எனப் பார்ப்போமே..சேலத்து தேர்தல் ஆணையராய் இருக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் “ஏற்காடு” பார்முலா விதிமுறையை எல்லாம் முன்மாதிரியாகக் கொண்டு அமல்படுத்தவும் என தேர்தல்விதிமுறைக் கூட்டத்தில் நேரடியாகப் பேசியுள்ளார். இவர் ஆளும் கட்சிக்கு பேராதரவாளர் சொல்லப் போனால் அந்தகட்சியின் மாவட்ட செயலாளர் போல் நடந்து கொள்கிறார் என பிற கட்சிகள் அங்கலாய்த்து அவரை மாற்றச் சொல்லி கேட்டபிறகும் இந்த மாவட்ட ஆட்சித்தலைவரே தொடர்கிறார் என்னும்போது தேர்தல் ஆணையமும் எவ்வளவு அக்கறையுடன் தமது பணியை செவ்வனே செய்து வருகிறது என அறியலாம்.

மேலும் ஆளும் கட்சி வாகனமெல்லாமே தமதுகொடி பறக்க ஊர்வலமாக சென்றது புகைப்படம் எடுத்து ஊடகங்களில் எல்லாம் வெளியாகியுள்ளது. மந்திரி தமது காரில் எல்லாம் கூட தமது கட்சிக்கொடியுடன் சென்றிருப்பதாக ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கொடிக்கம்பம் முதற்கொண்டு கழட்டப்பட்டு கட்சித்தலைவர்கள் எங்குமே தலை தெரியாமல், பேர் தெரியாமல் எழுத்து தெரியாமல் தேர்தல் ஆணையம் செயல் பட்டுக்கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

மோடிக்கு அமெரிக்காவும் விசா கொடுக்க வளைந்து கொடுக்க நேரமும் இந்திய பிரதமர் பதவிக்கு வழி கொடுத்துவிடும் போல்தானிருக்கிறது நாடும் நாட்டு மக்களும் சென்று கொண்டிருக்கும் பாதையைப் பார்த்தால் . சத்தீஸ்கரில் இன்றும் கூட மாவோய்ஸ்ட்கள் சுட்டுக் கொண்டிருக்க ஜனநாயகமும் தேர்தலும் இந்தியாவில் வலுவாக உலகிலேயே பெரிய மக்கள் பங்கெடுப்புடன் இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது.

வடக்கிலும், தெற்கிலும் ஏகப்பட்ட கட்சிகள்,தனித்தனியாகவே நிற்க வேண்டிய சூழல் இருப்பதால் மோடி போன்றோர்க்கு, மமதா பேனர்ஜி, ஜெ, போன்றவர்க்கு நல்ல அறுவடை இருக்க வாய்ப்பிருக்கிறது.கம்யூனிஸ்ட் கட்சிகள் காலம் செல்லச் செல்ல இந்தியாவில் இருந்து உதிர்ந்து கொண்டே வருகிறார்கள் தமது தொகுதிகளை. ஒரு காலத்தில் ஜோதிபாசு போன்றோர் இருந்தபோது அந்த கட்சிகளுக்கு ஒரு வலுவான நிலை இருந்தது உண்மைதான். ஏன் மத்திய அரசிலேயேகூட அவர்கள் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை கூட உருவானதும் உண்மைதான். ஆனால் அந்த வாய்ப்பை நழுவ விட்டு இன்றைய காலக் கட்டத்தில் அந்த கட்சிகள் ஈனமடைந்து இழி நிலைக்கு சென்றுவிட்டன என்பதற்கு மே.வங்கமும், கேரளமும் நல்ல உதாரணங்கள்.

அர்விந்த் கெஜ்ரிவால் அலை கூட பரவுவது அவ்வளவு எதிர்பார்த்த அளவில் இல்லை. எனவே அடுத்து அமையவிருக்கும் ஆட்சி மோடிக்கு சார்பாக இல்லாமல் போனால் மீண்டும் உதிரிகள் எல்லாம் சேர்ந்து அமைந்தால் மறுபடியும் அழிந்து படும் காங்கிரஸ் துளிர் விட ஏதுவாகிவிடும். இந்த கட்சியை விட்டால் வேறு எந்த கட்சியுமே நாட்டிற்கு ஒரு நிலையான ஆட்சியை தரமுடியாது என்பதுபோன்ற தோற்றம் உருவாகிவிடும். அப்படி நிலைத்த ஆட்சியை மக்கள் தந்தபோது இவர்கள் என்னவோ நதிநீர் இணைப்பை எல்லாம் செய்து இந்தியாவையே உலக அரங்கில் நிமிரச் செய்து விட்டது போல…. மறுபடியும் இவர்கள் அடுத்த கட்சிகளின் தோள்மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவர்கள் கழுத்தை எல்லாம் கால் கொண்டு கத்தரி பிடி போட்டு இறுக்கியபடியே அமெரிக்கா சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது போல மறு சுழற்சிக்கு வந்து விடுவார்கள்.

எனவே எப்படிப் பார்த்தாலும் இந்த தேர்தல் முறைகள் மக்களுக்கு இந்த ஜனநாயக அமைப்பு மூலம் நல்ல தலைமையை நல்ல கட்சிகளை வரவழைக்க விடாது போலவே தோன்றுகிறது. அவை எல்லாம் இந்தியாவுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நீளுமோ?

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

 

 


அம்மன் விழாப் பலிகளும் தேர்தல் திருவிழா வெட்டும் தலைகளும்:

மார்ச் 10, 2014

1899913_802617493099964_430617070_n

 

 

அம்மன் விழாப் பலிகளும் தேர்தல் திருவிழா வெட்டும் தலைகளும்:ஆண்டுக்கொரு முறை கோடைக்காலத்தில் கொண்டாடப்படும் மாரியம்மன் விழாக்கள் உயிர்ப்பலி சேதங்களுடன் வெகுவாக நடந்தேறி முடிந்தவுடன் நாட்டின் மிகப் பெரும் தேர்தல் விழா நடைபெறவுள்ளது இதில் எண்ணிலடங்கா தலைகள் வெட்டப்பட்டு சில தலைகளுக்கு மகுடம் சூட்டப்படும்.

எங்கெங்கு பார்த்தாலும் ஊரெல்லாம் அம்மன் விழாக்களும் திரு வீதி உலாக்களுமாய் கோடையை பொருட்படுத்தாமல் கடும் சூட்டையும் தகிக்கும் வெப்பத்தையும் தணலான சூரியனையும் புறந்தள்ளி விட்டு நெருப்பு மூட்டி தீ குண்டம் மிதிப்பதும், அக்கினி கரகம் ஏந்துவதும், நாக்கிலும், உடலின் பல பகுதிகளிலும் அலகு குத்தி நேர்த்திக் கடன் தீர்ப்பதுமாய் ஊர்கள் யாவும் அமளி துமளிப்பட்ட வண்ணம் இருக்கின்றன.அத்துடன் வாணவேடிக்கை,பொங்கல் வைப்பது,ஆடு, கோழி காவு கொடுப்பது அதை எடுத்து உணவாக சமைத்துசாப்பிடுவது என மாரி, காளி போன்ற தெய்வ வழிபாடுகள் நடந்தேறிவருகின்றன. ஒரு ஒரு ஊர் கொங்கணாபுரம் என்ற ஊரில் மட்டும் 1.5 கோடிக்கு கோழி ஆடுகள் விற்பனை ஆனதாக செய்தி ஏடுகள் தெரிவித்துள்ளன.

அப்படியானால் இந்த தமிழ் நாடு முழுதும் எவ்வளவு பலியிடப்பட்டிருக்கும் எவ்வளவு செலவாகி இருக்கும் என கற்பனை செய்து கொள்ளுங்கள். எம்மால் அந்த அளவு கற்பனைக்கே போக முடியவில்லை. எல்லாம் காட்டு மிராண்டி செயலாகத் தோன்றினாலும் மதுவுக்கு தொடர்புடையதாய் இருந்தாலும் இதெல்லாம் மக்களுக்குத் தேவைப் படுகிறது காலம் காலமாக. இதில் பல்வேறுபட்ட சாதிய அமைப்புகளும் பயனடைகின்றன.. மேளம், தாரை, தப்பட்டை, கச்சேரி, போன்ற இசைக்கலைஞர்களும், ஆட்டம், பாட்டம், கூத்து கலைஞர்களும் மாலை மலர்கள் அலங்கார ஜோடனைக் கலைஞர்க்ளும், காகித, செயற்கை டிஸ்கோ வகையினரும், நாடகக் கூத்து கலைஞரும்,இப்படி எல்லா வகையான கிராமியக் கலைஞரும் பங்கு கொள்ள ஏதுவாக இந்த விழாக்கள் நடைபெறுகின்றன. இதில் பெரும் பணமும் புழங்குகின்றன. இதற்கு எல்லாம் அடிப்படையாக பார்த்தால் மழை வேண்டி மாரியை (மழை = மாரி) கோடைக்காலத்தில் கும்பிடுவது என்பது காலம் காலமாக இருந்தே வந்திருக்கிறது.

ஆனால் கடவுள்பேர் சொல்லி இத்தனை உயிர்ப்பலிகள் அவசியமா? வேண்டுமானால் தமக்கு தேவப்ப்பட்டால், ஆசைப்பட்டால் அவரவர் வீடுகளிலெயே வெட்டி உண்ணலாமே அதை விடுத்து ஆண்டுக்கு ஆண்டு ஏனிந்த விழாக்கள் கொண்டாடப்படவேண்டும். எல்லாம் ஒரு வெளிப்பாட்டு பண்பும், தான் என்ற குணத்தை வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற மனித ஆர்வமும்தான்.இந்த பக்தி இருப்பதிலேயே மிக நாகரீகத்தில் குறைவானதாகும், கடவுளை வேண்டல் செய்து பலி இடல் என்பது மிக குறைவான நாகரீகமும்,குறைந்த அறிவு சார்ந்தவர்களாலும் கொண்டாடப்படுவது என்று சான்றோர்கள் கருதினாலும் இவை வழி வழியாக வாழையடி வாழையாக சென்றுகொண்டே இருக்கும் கொடித்தடம், குடித்தரம்.இதில் ஜெயலலிதா போன்றோராலே மோதமுடியவில்லை ஒருமுறை ஆடு கோழி உயிர்ப்பலி கோயில்களில், அரசு நிர்வாகம் செய்யும் கோயில்களில் கொடுக்கக் கூடாது என்று சொல்லி ஆணையிட்டுவிட்டு இதே கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்க பின் வாங்கி அந்த அவசர சட்டத்தை திரும்ப பெற்றார் என்பதை நினைவு கொள்க.(அவசர சட்டத்தையா? இல்லை அவசர சட்டத்தின்முலமாகவா என்பது சிறு சந்தேகமாய் இருக்கிறது.

இதே போலத்தான் இந்த இந்தியாவின் 16 வது மக்களைவைக்கான தேர்தலும்.12,500 கோடி மதிப்பில் – 3 ஹெலிபேட்,விமான கட்டுப்பாட்டு அறை,வெளியிடத் தோட்டம்,விருந்தினர் வளாகம்/குடியிருப்புகள்,குடும்பத்திற்கான தனிப்பிரிவு,பராமரிப்புத் தளம்,நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம்,ஒப்பனைக்கூடம்,6 தளங்கள் வாகன நிறுத்தஙகளுக்கானது, 50 பேர் அமர்ந்து பார்ப்பதற்கான சினிமா தியேட்டர்,இப்படி வசதிகளுடன் வீடு உள்ள இந்தியாவிலேயே முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி 19.6 பில்லியன் (பில்லியன் என்றால் 100 கோடி?!)$ டாலர் உலகில் 19 வது பெரிய பணக்காரர்தான் இந்ததேர்தலில் நிற்கும் 2 பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு நிதி வழங்கும் எஜமான் என்று அர்விந்த் கெஜ்ரிவால் சங்கெடுத்து ஊதியும் அந்த சங்கு இந்திய மக்களின் காதுகளில் விழுந்ததா இல்லையா என்பது தெரியாமலே இந்த தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதனிடையே, ஜெயலலிதா, மமதா பானர்ஜி, முலாயம் சிங் யாதவ் போன்றோர் 3 ஆம் அணி என ஈடேறாத கனவில் உள்ளே ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட இச்சைகளை மனதில் இறுத்திக் கொண்டு கூட்டாஞ்சோறு ஆக்கவிரும்புகிறார்கள் தமிழகத்திலோ நிலை கலைஞர்க்கு கவலைக்கிடம், பி.ஜே.பி கால் ஊன்ற களம் அமைத்து ம.தி.மு.கவும் தேமுதிகவும், பாமகவும் தோள்கள் கொடுத்து கால்கள் நிறுத்துகின்றன. இந்த அணி வாக்குகளைப் பிரிப்பதால் அ.இ.அ.தி.மு.க எந்த வித சிரமமும் இல்லாமல் சிறிதான வாக்கு வித்தியாசமிருந்தாலும் வெற்றிக்கனியை அதிகமாக தொகுதி எண்ணிக்கையில் பெறும் என்று அரசியல் நோக்கர்களின்கணிப்பு. இந்த 3 ஆம் அணி தமிழகத்தில் கலைஞரிடம் சாய்ந்திருந்தால் ஒருவேளை அ.இ.அ.தி.மு.கவிற்கு கிடைக்கும் தொகுதிகள் குறைந்திருக்கலாம். எனவே தற்கால வாக்கு, ஜனநாயகம், தேர்தல் எல்லாம் இப்படித்தான் மிகக்குறைவாக வாக்குவித்தியாசம் கொண்டிருந்தாலும் அவர்களுக்கு வாழ்வளித்து மகுடம் சூட்டி, பிறர் அத்தனை பேரையும் தலைவெட்டு வெட்டி ஆட்டம் ஆடும் களமாகவே இருக்கின்றது.

சொல்லப்போனால் இந்த தேர்தல் முறைகள் நாட்டுக்கு உகந்ததாய் இல்லை. நாட்டை எந்த தலைவர்கள் தூய்மையாக ஆளவேண்டும் என தூயமையான சேவை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ளும் வேட்பாளர்களை நல்ல மக்கள் தேர்வு செய்யும் முறையில் இல்லை.எல்லா கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் குற்றமிழைப்பதாக மக்கள் நலத்தை புறக்கணிப்பதாகவே உள்ளன. இவற்றையே மக்களும் தேர்ந்தெடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். மக்களுக்கும் எண்ணப்போக்கு தூய்மையானதாக இல்லை. அதற்கான நல்ல தலைவர்களும் இல்லை. அந்த தலைமகளுக்கு ஆதரவும் இல்லை.

எனவே கதம்பக் கூட்டணியாய் அல்லது மோடி போன்ற அம்பானி மார்களின் ஆதரவு பெற்ற ஆட்களே இந்தியாவை ஆளமுடியும் அவர்களே தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என்ற நிலை நிலவுகிறது. அவர் அல்லாமல் ஏனைய மாநில அளவிலான கட்சிகள் அதன் தலைவர்கள் முட்டி மோதி தலைமைப்பதவிக்கு சென்றடைந்தாலும் எவ்வளவு நாட்கள் அதை தக்க வைத்துக் கொள்வார்கள்? என்ற கேள்விகள் எழாமல் இல்லை.

எனவே எப்படி மாரியம்மன் திருவிழாக்கள் குறிக்கோள் இல்லாமல் நடத்தபடுவது ஒரு வாடிக்கையாக வழக்கமாக ஆகிவிட்டதோ அப்படியே ஒரு ஆட்சி, ஒரு தலைமை வேண்டும் அந்த பதவி அந்த இடம் காலியாக இருக்கக்கூடாது என்ற நிலையில் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் தேர்தல் நடத்தப்பட்டு சாமி ஊர்வலங்களும் சாமிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்கள். ஒரு சில மாதங்களே இன்னும் இந்த வேடிக்கைக்கு இருக்கிறது. ஆனால் ராகுல் சாமிக்கு வாய்ப்பு இருப்பதாக எவருமே இந்தநாட்டில் நினைக்காதது அவரது அதிர்ஷ்டம். நீண்ட நாட்கள் கழித்து உங்களை எல்லாம் சந்திக்க இன்றுதான் வாய்த்திருக்கிறது .

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 


கவிஞர் தணிகை ஆத்திகரா நாத்திகரா?

மார்ச் 4, 2014

new-atheism

கவிஞர் தணிகை ஆத்திகரா நாத்திகரா? கடவுள் பேர் சொல்லி கயமைத் தனங்கள் செய்வோரைக் காணும்போது நாத்திக வாதம் தலைதூக்குவதும், சித்தர்கள், இராமலிங்க வள்ளல், நெஞ்சகமே கோயில் , தியான வழிமுறைகள், சிலை வழிபாட்டை மறுக்கும்போது ஆத்திகமாக இருப்பதுமான கவிஞர் தணிகை ரெண்டுங் கெட்டானா? இரண்டும் கொண்டானா? ஒரு நல் சுய ஆய்வு.இதில் நாட்டின் நடப்பும் உள்ளடங்க.

யாமறிந்த ஒரு பழுத்த பக்தர் கதர் அணிபவர் எப்போதும் நெற்றியில் பட்டை போட்டு திரிபவர். ஒரு கட்சியில் ஆயுள் கால உறுப்பினர், ஊரின் மிக முக்கியப் புள்ளி, உலகமெலாம் செழிக்கட்டும் ஒத்த மழை பெய்யட்டும் என எழுதிய வேதாத்திரி மகரிஷி மனவளக்கலை மன்றத்தில் எப்போதும் நிகழ்ச்சிப் பேச்சாளர்- ஆனால் இவரைப் பற்றி யாம் இளமைப் பருவத்தில் இருந்தே கேள்விப்பட்டது யாவும் இந்த மனிதர் காசு பணம் பொருளாதார விஷியங்களில் தூய்மை இல்லாமல் நடந்துகொள்கிறார் என்பதாகும். குடும்பத்துக்கு வாங்கும் மளிகைக் கடைகளுக்கும் கூட சரியாக உரிய பணத்தை தராமல் பாதிக்கு பாதி தருவதும் பின் இழுத்தடிப்பதுமாக இருப்பாராம். ஒருவர் மற்றொருவரிடம் சேர்த்தச் சொல்லி ஒரு புனித காரியத்துக்காக தந்த பணத்தைக்கூட தராமல் தனிப்பட்ட கணக்கில் வரவுக்கு பயன்படுத்தி விடுவதுடன் அவரை மிகப்பெரிய மனிதராக கருதும் ஒரு கனவும் இலட்சியமும் கொண்ட ஒரு மனிதரிடம் இவரை அவர் ஒரு நல்ல காரியத்துக்காக பயன்படுத்த அழைக்க அதை காரணம் காட்டி அவரிடம் அவ்வபோது ஆயிரம், ஆயிரத்து ஐநூறு என கேட்டு வாங்கிக் கொள்வாராம். பொது சேவைக்கு ஒரு கட்டணம். நல்ல வியாபாரம். முதல் இல்லாத வியாபாரம். இவரைப் போன்றவர்கள் தான் நாடுமுழுதும். பொதுவாழ்விலும் அரசியல் என்ற பேரிலும். பிறகு இந்தியாவின் நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அட நம்ம ஆதி பராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லை இல்லை அம்மாவின் பிறந்த நாள் பற்றி நாட்காட்டியில் போட்டிருந்தார்கள். அவருடையை பல் மருத்துவக் கல்லூரி பல கோடி இலஞ்ச ஊழல், முன் ஜாமின், அவரது மகன் அம்மா, விவகாரம் பற்றி எல்லாம் ஒன்றுமே தண்டனையோ, விசாரணையோ நடந்ததாக செய்திகள் வரவேயில்லை. இவர்பற்றி இந்த ராஜ் தொலைக்காட்சியும், அரசுத் தொலைக்காட்சியான பொதிகை தூர்தர்ஷனும் எதற்கு இவ்வளவு ஆர்வத்துடன் லைவ் டெலிகாஸ்ட் செய்கிறார்கள் என அவர்களைக் கேட்டால்தான் தெரியும்.

1384165_560032547400295_513661166_n

யாமறிந்த மற்றொரு சுயநலவாதியான வேதாத்திரி பக்தர், இவர் பிறரின் திருமண பத்திரிகைகளில் எல்லாம் வாழ்க வையகம், வாழ்க வளமுடன் இருப்பதை விரும்புபவர். தினமும் காலை எழுந்து கடவுளை எண்ணி பாடல் எல்லாம் பாடுவார். இவர் குடியிருந்த வீட்டை காலி செய்யச் சொன்னவுடன் பில்லி சூனியம், மருந்து, மாந்திரிகம், செய்வினை செயப்பாட்டுவினை என்றெல்லாம் மனைவி சகிதம் தமது குடும்ப சகிதம் சென்று சூனியக்காரர்களை சந்தித்து வாழ்ந்து வருகிறார். அவரை அந்தவீட்டில் இருந்து காலி செய்த குடும்பம் பூண்டோடு அழியவேண்டுமாம், அந்த குடும்பத்தின் ஆதாரமாக சுய தொழில் செய்து பொருள் ஈட்ட முனையும் அந்த பெண் நிறைய நோயால் வீழ்ந்து பட வேண்டுமாம் – கொஞ்ச காலம் அப்படியும்தான் நடந்தது, அவர்களது ஒரே மகன் படிக்காமல் படிப்பதற்கு பொருள் வசதி இல்லாமல் யாரிடமாவதுசென்று கெஞ்ச வேண்டுமாம் யாராவது எங்க மகனை படிக்க வையுங்கள் என பிச்சை எடுக்க வேண்டுமாம், அவர்கள் செல்வ வளமெல்லாம் அழிந்து படவேண்டுமாம், அட இப்படி எல்லாமா அந்த வேதாத்திரி மனவளக்கலை மன்றம் செய்யச் சொல்லிக் கொடுக்கிறது?அடியேன் கூட ஒருமுறை அங்கு சென்று காயகல்ப பயிற்சி ஒரு நாள் நிகழ்வில் கலந்து கொண்டு எமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு சான்றிதழ் பெற்றதாக நினைவு.

அவர்களைக் கேட்டால் உலகமெலாம் செழிக்கட்டும் ஒத்த மழை பெய்யட்டும், யாரைப்பர்ர்த்தாலும் வாழ்க வளமுடன், வாழ்க வையகம் என அந்த தமிழ் சிறப்பான ழகர எழுத்துக்கு புத்தொலியை அழுத்தி ஒலித்து வழங்குகிறார்கள். ஆனால் இந்த பிக்காரிநாய்கள் அந்த வேதாத்திரி படத்தை வீட்டில் மாட்டிக் கொண்டு என்ன ஒரு எண்ணம் பாருங்கள். இவர்கள் நல்லா இருக்க வேண்டுமாம், இவர்கள் செழித்து வாழ வேண்டுமாம் அடுத்தவர்கள் அழிந்து படவேண்டுமாம். அதற்கு எலுமிச்சம்பழம் மந்திரிப்பார்களாம், திருநீறு , மை, செய்வினை, செயப்பாட்டுவினை எல்லாம் செய்து அடுத்தவர்கள் நாசமாக எதை வேண்டுமானாலும் செய்வார்களாம். இவர்கள் இதே போல வாழ்வில் பல முறை மன்னிக்கப்பட்டவர்கள்தான் ஆனால் இதை எல்லாம் தெரிந்து கொண்டு எப்படி இவர்களை எல்லாம் எத்தனைமுறை மன்னிப்பது?

fc6042c3423951d2bbd68a13cd0bd356sunlight

பொது நலம் இல்லாமல் பொதுநலத்துக்கான செல்வத்தை சுரண்டி ,ஊழல் செய்து தமக்காக அனுபவிக்க எடுத்துக் கொள்வாரும், தாம் மட்டுமே நல்லா இருக்கவேண்டும். அடுத்தவர் அழிந்து பட வேண்டும் என நினைப்பதுவா பக்தி? காக்கை, குருவி,பறவை, விலங்கினம் எல்லாம் இவர்கள் செயலைப் பார்த்து சிரிக்காதா?

இதை எல்லாம் பார்த்துக் கொண்டு எப்படி வெகுண்டு எழாமல் இருக்கமுடியும்? பாரதி சொன்னபடி “நெஞ்சு பொறுக்குதிலையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்” கோபம், தீயாக , வெந்தழலாக பொங்கி எழுகிறது. ஒரு முதிய வயது பெண் மூதாட்டியை நிர்மூலமாக்கிவிடும் என்ற நிபந்தனை இருப்பதால் அவர்கள் எல்லாம் செய்தும் கூட அருகருகே வாழ்ந்தபடி இருக்கிறார்கள். பொதுக்குடிநீர்க் குழாயை நீர் விரயமாகாமல் இருப்பதற்காக மூடி வைத்தால் அதற்கு அந்த குடிநீர்க்குழாயை பலமுறை கழுவி பயன்படுத்துவது என சமூகத்தில் எப்படி நடந்துகொள்வது என்ற நாகரீகம் சிறிது கூட இன்றி தாம், தமது சுயநலம்,தமது குடும்பம், அந்த குடும்பத்தின் ஒரே முன்னேற்றம் என்ற சுயநலப் போக்கில் வாழும் அந்த மிருகங்களுக்கு அவர்கள் வாழ்வே ஒரு பாடம் கற்றுத்தரும் என தியானமும், ஆன்மீகமும் பொதுநல ஆக்கமும் இருக்கும்போது பார்த்தால் கவிஞர் தணிகை ஆத்திகவாதியாகவே தெரிகிறார்.

கவிஞர் தணிகைக்கு நாத்திகம் பேசும் அன்பர்கள், சமூக சிந்தனையாளர்கள், பெரியார் வழி நடப்பவர்கள் யாவரும் நட்பு பாராட்டும் முகங்கள் உண்டு. அவர்களிடம் எல்லாம் இது போன்ற சில்லுண்டித்தனம் இருப்பதாக தெரியவில்லை. அதே சமயம் கடவுளை வழிபாடு செய்வதாக சொல்லிக்கொண்டு கோயில், பார்ப்பனீயம் பின்னால் சென்றுகொண்டு எலுமிச்சை பழம் சுற்றிப் போட்டுக் கொண்டு இருக்கும் அற்பர்களிடம் தான் இது போன்ற குணாம்சங்கள் இருப்பதை பார்ப்பது கண்கூடு. மேலும் நல்ல பக்தர்களும் பொது நல நோக்கோடு பல இலட்சங்கள், ஏன் கோடி ரூபாய்கூட தமது சொந்த உழைப்பில் இருந்து பொது நலத்துக்காக கோயில் கட்டுவதும், தம்மைச் சுற்று இருப்பவர்கள் யாவரும் நலமாக இருக்க வேண்டும் என பசி மறந்து ஊன் உறக்கம் மறந்து சிவமயமாய் இருக்கும் சிவத்தொண்டர்களும் நட்பு பாராட்டி வருகிறார்கள்.நாடும் நல்லவர்கள் பின் செல்லாமல் உச்ச நீதிமன்றம் கூட சிதம்பரத்தை பார்ப்பனர்களுக்கு தாரை வார்த்து விட இந்த அறிவிலிகள் எல்லாம் இந்த பார்ப்பனர்கள் பின் செல்லும் வாழ்வில்தான் ஏதோ ரஸம் ஊறுவதாகவும் அதை உறிஞ்சினால்தான் ஆயிரம் ஆண்டுகள் வாழமுடியும் என்றும் நம்புகிறார்கள் பதர்கள். இந்த நிலையில்தான் கவிஞர் தணிகை தமது மணத்தைக் கூட 1997ல் ஒரு பெரியவர் முன்னிலையில் எந்த பார்ப்பன இடையூறும் இல்லாமல் நடத்திக் கொண்டது குறிப்பிடப்பட வேண்டியுள்ளது.

இது போன்ற சூழலில்தான் கவிஞர் தணிகை என்ற மனிதர் ஒரு பக்கம் நாத்திக வாதத்தின் உச்சியிலும், மறுபக்கம் ஆத்திக வாதத்தின் உச்சியிலும் இரு கால் பதித்து செல்வதாக வாழ்வதாக உணரமுடிகிறது. பெரியாரின்: மூடத்தனமின்றி காசு செலவின்றி யாரும் எந்தக் கடவுளையும் வணங்கலாம்” என்ற மந்திரமும், விவேகானந்தரின்:”ரூபக் கடவுளும் பூசாரிகளும் இருக்கும்வரை சமூகத்தில் உயர்ந்ததொரு ஒழுக்கமுறை நிலவாது” என்ற விவேகமான சமுதாயப் பார்வையும் இரண்டும் குறிப்பது ஒன்றையே என்று உணர்தல் நிகழ்ந்திருக்கிறது. நன்றாக ஊன்றி கவனித்தால் இரண்டும் ஒரே குறியீடான வார்த்தைகள்தான் கருத்துக்கள்தான் என்று யாவரும் அறிய முடியும்.

இயற்கை, புறம் கட உள்பார்க்க, நேர்மை, நன்னெறி,ஒழுக்கம் யாவற்றையும் சொல்லிக் கொடுக்காமல் என்ன கடவுள்பக்தி இருந்துதான் என்ன அதனால் பயன்? எப்படி சமுக நலன்? அதை எப்படி எல்லா அயோக்கியத்தனஙக்ளுடன், ஊழல்களுடன், மத சாதி மாச்சரியங்களுடன், அநியாயங்களுடன் கடவுள் பக்தியை இணைத்திருக்கிறார்கள். நன்கு முத்திய பக்தியாளர் அனைவருமே மனிதர்க்கு செய்யும் சேவையே கடவுள் பக்தி எனச் சொல்லி “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற இந்து மதமும், அன்னை தெரஸா போன்றோர் வாழ்ந்த கிறிஸ்தவமும்,ஒழுக்க நெறிகளில் தவறாமல் ஒழுகி வாழச் சொல்லும் முகமதியமும், வாழ்வின் ஒழுக்கம் பற்றி பேசிடும் பௌத்தமும், உயிர்களுக்குத் தீங்கு செய்யக்கூடாது என்ற நெறியை பிரதானாமாகக் கருதும் ஜைனமும், இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம் என்னும் மதம் யாவும் மனிதர்க்கு வழிகாட்டியாகவே இருக்க வேண்டும் என்று சொல்லும்போது இந்த கயவர்கள் எப்படி சில பாடல்களை மட்டும் கற்றுக் கொள்ளாமலே அதிலும் வெறும் மனப்பாடம் செய்தபடி அதன் பொருள்கூடப் புரியாமல் இந்தமனித குலத்தையே ஆட்டி வருகிறார்கள், ஆண்டு வருகிறார்கள்.

இது போன்ற சுய நலக் கிருமிகளை, சமுதாய விரோதிகளை காக்கும் சமூக அமைப்புகள், கட்சிகள், அரசியல், நாட்ட்டின் ஆட்சிமுறைகள் இவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றன. இவர்கள் வாழ்வுதான் சிறந்தது என்ற மக்கள் நினைக்கும் போக்கும் நிலவுகிறதே அப்போது நாத்திகவாதியாகி விடுகிறார் கவிஞர் தணிகை.

இராமலிங்க வள்ளலாரும், சித்தர்களும், பராபரக் கண்ணியில் தாயுமானவர் சொன்னபடி, “நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீர், பூசை கொள்ள வாராய் பராபரமே என்னும் போதும்.;

4642938000_tree_xlarge

கல் ஏன் மலர் ஏன் கனிந்த நல் அன்பே பூசை என்ற
நல்லோர் பொல்லா எனையும் நாடுவரோ?- பைங்கிளியே!
சினம் அடக்கக் கற்றாலும் சித்தியெலாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே?
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!

என்னும்போது ஆத்திகவாதியாகவுமே தென்பட முடிகிறது. ஒரு உயரத்துக்கு மேல் போய் பார்த்தால் ஆத்திகம், நாத்திகம், அறிவியல் யாவுமே ஒன்றாகிவிடுகிறது. அது இந்த மண்ணின் உயிர்களுக்கு ஊறு செய்ய நினைக்காதபோது இந்த மண்ணின் உயிர்களுக்கு சேவை செய்ய நினைக்கிறபோது அவற்றின் துன்பம் துடைக்க எண்ணுகிறபோது எனவே கவிஞர் தணிகை நாத்திகரா? ஆம் ஒரு வரையறைவரை, கவிஞர் தணிகை ஆத்திகரா? ஆம் ஒரு வரையறைவரை….இரண்டும் கெட்டானாக இல்லை இரண்டின் உயரிய விஷியங்களை எடுத்துக் கொண்டு யாவர்க்கும் சொல்வதால், செய்வதால். இரண்டும் சேர்ந்து சேர்த்து ஏதாவது சொல்லலாம் என்றால் இவர்: கடவுள் (மறுப்பு) சிந்தனையாளர் என்பது பொருந்தும் என எண்ணுகிறேன்.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர்தணிகை.


மூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா?

மார்ச் 2, 2014

large_india_leased_nuclear_sub

ஆண்டுக்கு ஓரிரு முறை அரிதாகப் பத்திரிகைகளில் வரும் படங்களோடு முடிந்துவிடும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீதான கவனம், இப்போது தொடர்கதைபோல ஆகியிருக்கிறது. காரணம், கடந்த ஏழு மாதங்களில் மட்டும் இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் மூன்று விபத்துகள். அத்துடன் உயிரிழப்புகள். கடற்படைக் கப்பல்களின் விபத்துகளுக்குத் தார்மிகப் பொறுப்பேற்று, இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாகப் பதவி விலகியிருக்கிறார் கடற்படைத் தளபதி. நீர்மூழ்கிக் கப்பல் வீரர்களின் மரணம் பெரும் செய்தி ஆகியிருக்கிறது. இத்தகைய சூழலிலும்கூட இந்திய ஊடகங்கள் விவாதிக்காத ஒரு விஷயம் உண்டு. அது நீர்மூழ்கி வீரர்களின் வாழ்க்கை.

தண்ணீர் குடிக்கக் கட்டுப்பாடு

“நீர்மூழ்கிக் கப்பலுக்குள் சென்றுவிட்டால், பெரும்பாலும் அரை வெளிச்ச உலகம்தான். குறைந்தது தொடர்ந்து 15 நாட்கள் முதல் 45 நாட்கள்வரை கடலுக்கு அடியில் இருக்க வேண்டும். கப்பலில் பணியாற்றும் கேப்டன் உள்ளிட்ட பெரும்பாலான வீரர்கள் கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஏனெனில், ஒருநாளில் சில மணி நேரம் மட்டுமே நாங்கள் நிமிர்ந்து நிற்கவோ, நிமிர்ந்து உட்காரவோ முடியும். தினசரி சராசரியாக 12 மணி நேரம் குனிந்து, ஊர்ந்து, முழங்காலிட்டுதான் பணி செய்ய வேண்டியிருக்கும்.

பேட்டரி அறை, இன்ஜின் அறை, கழிப்பறை இவை எதிலும் நிமிர்ந்து நிற்க முடியாது. அங்கெல்லாம் சராசரி உயரம் கொண்ட ஒரு மனிதன் பாதியாகக் குனிந்துதான் வேலை பார்க்க முடியும். தவிர, நீர்மூழ்கிக் கப்பலின் பெரும்பாலான இடங்களுக்கு இடம்பெயர தவழ்ந்தும் சில இடங்களில் சுரங்கப்பாதை வடிவலான பாதைகளில் ஊர்ந்தும்தான் செல்ல வேண்டும். இன்ஜின் அறையில் சுமார் 120 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை இருக்கும். அங்கு போய் அரை மணி நேரம் பணிபுரிவது, மைக்ரோவேவ் ஓவனுக்குள் அரை மணி நேரம் இருப்பதற்குச் சமம்.

மேற்கண்டவை எல்லாம் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகள். ஆனால், எங்களுக்கான அடிப்படை வசதிகளும் மோசம். உள்ளே குறிப்பிட்ட அளவுதான் நல்ல தண்ணீர் இருப்பு வைக்க முடியும். தண்ணீர் இருப்பைப் பொறுத்து நான்கு நாட்கள் அல்லது வாரத்துக்கு ஒருமுறைதான் குளிக்க முடியும். இதற்கான அதிகாரபூர்வ உத்தரவே உண்டு. ஒரு நாளைக்குக் குறிப்பிட்ட குவளைகள் மட்டுமே தண்ணீர் குடிக்க அனுமதி. வாரத்துக்கு ஒரு சீருடை மட்டுமே அனுமதி. அதைத் துவைக்கத் தண்ணீர் இல்லாததால் அதை அழித்துவிட வேண்டும்.”

பதுங்குகுழி வாழ்க்கை

“கேப்டனே ஆனாலும் கழிப்பறையைப் பயன்படுத்திய பின்பு அவர்தான் சுத்தப்படுத்த வேண்டும். அதற்குத் தனி பணியாட்கள் கிடையாது. கழிப்பறையில் உட்கார மட்டுமே முடியும். எழுந்து நிற்க முடியாது. கேப்டனின் ஓய்வு அறையில் நன்றாக நிமிர்ந்து நிற்கலாம். அதற்காகவே ஏதேனும் சாக்கிட்டு அடிக்கடி அங்கு செல்ல ஆசைப்படுவோம். இதர வீரர்களின் ஓய்வு அறைகள் கிட்டத்தட்ட பதுங்குகுழி வடிவில் இருக்கும்.

பெரும்பாலும் பிரெட், பிஸ்கட், பீட்ஸா, எப்போதாவது சப்பாத்தி போன்ற ரெடிமேட் பாக்கெட் உணவுகள் மட்டுமே. பொழுதுபோக்கு கேரம், சதுரங்கம் மட்டுமே. அவைதானே உட்கார்ந்து விளையாடும் விளையாட்டுகள். ஒவ்வொருவரும் குறிப்பிட்ட எடைக்கு மேல் பொருட்களை வைத்துக்கொள்ள முடியாது என்பதால், புத்தகங்களுக்கும் கட்டுப்பாடு.

சுமார் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்ய நீர்மூழ்கிக் கப்பல் மேலெழும்பும். அப்போது கிடைக்கும் சில மணி நேரம் மட்டுமே வெளிக்காற்றைச் சுவாசிப்போம்; நண்பர்கள் வாங்கிவரும் விதவிதமான உணவுகளைச் சுவைப்போம்…”

- சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் நீர்மூழ்கிக் கப்பலில் பணியாற்றும் நண்பர் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். பணிச் சூழல்பற்றிப் பேச ஆரம்பித்தபோது அவர் சொன்ன தகவல்கள் இவை.

வசதி குறைவானவை

இந்தியாவிடம் தற்போது ரஷ்யத் தயாரிப்புகளான ‘சிந்துகோஷ்’, ஜெர்மனி தயாரிப்புகளான ‘சுசிமோர்’, ரஷ்யாவிடம் வாடகைக்கு வாங்கப்பட்ட ‘அகுலா’ வகை அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல் என மூன்று வகை நீர் மூழ்கிக் கப்பல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில் ‘சிந்துகோஷ்’ வகையைச் சேர்ந்த 10 கப்பல்களும் 238 அடி நீளம், 32 அடி அகலம், 22 அடி உயரம் கொண்டவை. ‘சுசிமோர்’ வகையைச் சேர்ந்த நான்கு கப்பல்கள் 211 அடி நீளம், 21 அடி அகலம், 20 அடி உயரம் கொண்டவை. ‘அகுலா’ வகை கப்பல்கள் மட்டுமே 366 அடி நீளம், 44 அடி அகலம், 31 அடி உயரம் கொண்டது. இவற்றில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட ‘சிந்துகோஷ்’ கப்பல்களில் அனைத்துமே மிகவும் வசதி குறைவானவையே.

ரஷ்ய நீர்மூழ்கிகளும்… இந்திய நீர்மூழ்கிகளும்…

ஆனால், ரஷ்யா தனது உபயோகத்துக்காக வைத்திருக்கும் ‘கே-433′, ‘கே-51′, ‘கே-271′, ‘கே-18′ உள்ளிட்ட மொத்த நீர்மூழ்கிக் கப்பல்களும் சராசரியாக 500 – 600 அடி நீளம், 35 – 45 அடி அகலம், 25 – 30 அடி உயரம் கொண்டவை. அதே

போல் அமெரிக்காவிடம் பணியின் தன்மையைப் பொறுத்து நிறைய சிறிய வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இருந்தாலும், அவற்றில் பணியாற்றும் வீரர்கள் வெகு குறைவு. ஆனால், 70 முதல் 220 பேர் வரை பணியாற்றும் பெரிய வகை ‘அலாஸ்கா’, ‘அலெக்ஸாண்டிரியா’, ‘லூசியானா’ உள்ளிட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் 360 – 600 அடி நீளம், 35 – 45 அடி அகலம், 25 – 35 அடி உயரம் கொண்டவை. ஜெர்மனி மற்றும் சீனாவின் கப்பல்களும் இதே அளவைக் கொண்டவை. மேற்கண்ட கப்பல்களில் உள்ளே ஒரு உயரமான நபர், கப்பலுக்குள் நிமிர்ந்து நின்று கையை மேலே நீட்டினாலும் மேற்பரப்பைத் தொட முடியாது. தவிர, பேட்டரி அறைகள் விசாலமானவை. இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களின் பேட்டரி அறையில் படுத்துக்கொண்டுதான் பழுது பார்க்க முடியும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் வீரர்களின் முகம் பேட்டரியில் உரச அதிக வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம் தெரியாது

அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில்தான் அவசர காலங்களில் ஓட முடியும், தாவிக் குதிக்க முடியும். ஆனால், இந்தியாவிடம் இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களில் ஆபத்துக் காலங்களில் முழங்காலிட்டோ அல்லது ஊர்ந்தோதான் செல்ல முடியும். மேலும், ரஷ்யக் கப்பல்களின் தொழில்நுட்ப விவரங்கள் நமது வீரர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விபத்துக்குள்ளான ‘சிந்துரக்‌ஷா’வில் 18 பேர் பலியானதும், தற்போது ‘சிந்து ரத்னா’வில் இருவர் பலியானதும் இதன் காரணமாகத்தான். தவிர, எந்நேரமும் போர் புரியத் தயாராக இருக்க வேண்டிய வீரர்களுக்கு மன அழுத்தம் இருக்கக் கூடாது. ஆனால், இந்திய நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியாற்றும் வீரர்களுக்கு மன அழுத்தம் தவிர்க்க முடியாதாகிவிட்டது.

இதெற்கெல்லாம் தீர்வு காண்பதே கடற்படையின் அதிமுக்கியப் பணி.

டி.எல். சஞ்சீவிகுமார்- தொடர்புக்கு sanjeevikumar.tl@kslmedia.in

Keywords: இந்திய கடற்படை, நீர்மூழ்கி
Topics: இந்தியா| அரசியல்|
நன்றி :இந்து தமிழ் நாளிதழ்

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை;


பெரியார் பல்கலை-பாலமுருகன் கலைக்கல்லூரி-தேசிய சேவைத் திட்ட முகாமில்:

பிப்ரவரி 27, 2014

 

dbc2

 

பெரியார் பல்கலை-பாலமுருகன் கலைக்கல்லூரி-தேசிய சேவைத் திட்ட முகாமில்: சுமார் 90 நிமிடம் உரையாற்றினேன் பேசியதை விட இன்னும் பேச நிறைய உள்ளது.இந்திய நாட்டின் அவலங்கள் தீர்க்க “ஏதாவது செய்வோம்” என்ற தலைப்பில்.மாணவர்கள் கோயில் திருவிழா ஒலிபெருக்கியை மீறி நன்றாக உள்வாங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வு அமரகுந்தி என்னும் கிராமத்தில் முன்பே நடைபெறுவதாக இருந்தது பின் சந்தை தானம்பட்டி என்னும் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு நடைபெறுகிறது.ஒரு வாரம் நடைபெறும் இந்த நிகழ்வில் துவக்க நாள் நிறைவு நாள் போக 26ல் முதல் நாள் நிகழ்வாக கோயில் வளாகம், பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது காலை வேலையில். மதியம் 1 மணி வாக்கில்தான் அனைத்து மாணவ மாணவியரும் உணவருந்தவே சென்றனர் என்றனர் இதன் ஒருங்கிணைப்பாளர்களான உயர்திரு.ரமேஷ்குமார் மற்றும் சரவணன் என்ற கல்லூரி ஆசிரியர்கள்.

சுமார் 80 மாணவர்கள் எல்லாப் பிரிவுகளில் இருந்தும் 3ஆண்டுகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டனர். மாணவியர் 65 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி மாலையிலேயே கல்லூரி பேருந்து மூலம் தங்களது இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவே 80 மாணவர்களுக்கு மட்டுமே அங்கிருந்த ஊரட்சி மன்ற பள்ளி வளாகத்துள் எமது உரை வீச்சு இருந்தது.பெரும்பாலும் மாணவர்கள் சேலம் தர்மபுரி மாவட்டம் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். முதலில் அவர்களை எல்லாம் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அந்த பாலமுருகன் கல்லூரியின் மேலாளரும், அங்கு சரவணன் அவர்களிடம் படித்து அவருடன் தற்போது கல்லூரி ஆசிரியராக பணிபுரிபவரும் இந்த முகாமுக்கு தமது பங்களிப்பாக பணிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாம் திட்டமிட்டபடி தயாராய் இருந்தோம். சற்று முன்னதாக இருக்கும் தோற்றத்தில் அவர்கள் 6 மணி சுமாருக்கு எம்மை அழைத்துச் சென்றார்கள். அந்த ஊரில் அன்று அம்மா கட்சினரால் மிக்ஸி, கிரைண்டர், எல்லாம் இலவசமாக வழங்கப் பட்டதும் மேலும் அந்த ஊரின் மாரியம்மன் திருவிழா நடைபெற்றதும் காரணமாக இருந்தன. மேலும் கோயில் பள்ளியின் எதிரில் இருந்து வருவதும் அதன் ஒலிபெருக்கி அமைப்புகள் எப்படி பள்ளிக்கு சாதமாக இருக்க முடியும்?

எமது உரைபற்றி அப்படியே தரவிழைவது நோக்கமில்லை எனினும், இன்றைய மாணவர்கள் ஏன் ஒழுக்க நெறியுடன் நடந்து கொள்வது அவசியம் என்ற மையப்புள்ளியுடன் உலக நாட்டு மாநில நடப்புகள் அலசப்பட்டன. உலக அளவில் கட்டுப்பாடு உள்ள சீனா,ஜப்பான் எப்படி சில விஷியங்களில் இந்தியாவுக்கு முன்னோடியாய் விளங்குகின்றன என்றும், மது, புகை, மரம் நடுதல், சுற்றுச் சூழல காத்தல், திறந்த வெளிக் கழிப்பிடக் கொடுமைகள், குடிநீர்க் கொள்ளை, தனியார் மயம், தாராள மயம், உலகமயமாதல், அதில் தியாகத்தின் தேவை ஊழல் எப்படி வேரூன்றி இந்தியாவில் வெட்ட முடியா விருட்சமாக பரவி விட்டது என்பது,தேர்தல் முறைகள், நதி நீர் இணைப்பு பற்றிய அவசியம், உண்மையான சேவை மட்டுமே இனி இந்த மக்களுக்கு தேவையானது, பொது வாழ்வில் நேர்மையை கடைப் பிடிப்பவர் மட்டுமே இனி மக்களிடம் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்ற நிலை நோக்கு உணர்த்தப்பட்டது.சமீபத்தில் ஆசிரியப் பெருமக்களை எல்லாம் அடித்து வேதனைக்குள்ளான யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்னும் ஒரு தறிகெட்ட இளைஞர் 3 பேருடன் சென்று இந்த ஊர்க்காரர் காங்கேயம் என்ற ஊர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியான நிகழ்வுக்காக வருந்தப்பட்டது. அது போல இளையோர் தமது வீரியத்தை இழந்துவிடக்கூடாது வேகத்தை மட்டுமே மனதில் நிறுத்தி என்று வலியுறுத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள்,ஏன் இந்த அரசுகளால் ஒழிக்கப்படவே முடியவில்லை, இடைவிடாத முயற்சிகள் எவ்வள்வு சிறிதானாலும் காலப்போக்கில் எவ்வளவு பெருமை சேர்க்கும் என்பது, என்போன்றோர் ஏன் இன்று உங்கள் போன்ற மாணவர்கள் முன் உரையாற்ற் அழைக்கப்படுகிறார்கள் என்ற அறிமுகம், இந்த பேச்சால் கவரப்பட்டதால் அவர்களில் சிலர் எம்மிடம் புத்தகம் வாங்கி கையொப்பம் பெற்றுக் கொண்டது.

 

ஐரோம் சர்மிளா, அருணிமா சின் ஹா, நந்தினி சட்டக்கல்லூரி,சசி பெருமாள் சேவை ஆகியவை நினைவு கூரப்பட்டது. தில்லையாடி வள்ளியம்மை நினவு நாள் பற்றிதெரியுமா? ஏ.டி.எம். மெஷின், இ.மெயில் எல்லாம் கண்டுபிடித்தது நமது தமிழரும் இந்தியரும்தான் என்று உணர்த்தப்பட்டது.

புகைக்காதவராக இருக்க வேண்டிய அவசியம், குடிக்காதவராக இருக்க வேண்டிய அவசியம், திறந்த வெளிக்கழிப்பிட வாசியாக இல்லாதிருக்க வேண்டிய அவசியம் ,ஊழல் செய்யாதவராக இருக்க வேண்டிய அவசியம், குடிநீர்க் கொள்ளையில் ஈடுபடாதவராக இருக்க வேண்டிய அவசியம் எல்லாம் உணர்த்தப்பட்டது மேலும் அப்படி இருந்தால் மட்டும் போதாது அந்த தீங்கை தமக்கும் சமுதாயத்துக்கும் செய்யும் அந்த நபர்களை திருத்தும் முயற்சியை நினைவாலோ, சொல்லாலோ, செயலாலோ, சேர்ந்து நிற்பதாலோ, போராடுவதாலோ எதிர்த்து இந்த சமுதாயம் நன்கு மலர நாம் “ஏதாவது செய்ய வேண்டும்” அதிலும் இந்த நாட்டின் ஆணிவேராய், முதுகெலும்பாய் இருக்கும் 50- 60 சதம் மக்கள் தொகையில் இருக்கும் மாணவ இளைய சமுதாயம் இதை நோக்கி செயல்பட வேண்டிய முக்கியத்துவம் அறிவுறுத்தப்பட்டது.

மேதகு அப்துல் கலாமின் தன்முனைப்பான வாக்கிய நயங்கள் நோ, என்ட்,பெயில், போன்றாவை எப்படி: நெக்ஸ் ஆப்பர்சூனிட்டி,எffஒர்ட் நெவர் டைஸ், பர்ஸ்ட் அட்டம்ப்ட் இன் லேர்னிங் போன்ற வாசகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்கொலை நினைவை மாணவர்கள் நினைவிலும் எந்த காரணத்தாலும் கருதவே கூடாது அதே நேரத்தில் ஒழுக்கத்துடன் சுதந்திரம், கட்டுப்பாட்டுடனான விடுதலை,தியாகத்துடனான சாதனைகள் தான் ஒரு நாட்டை உருவாக்கும் என்ற டாக்டர் .இராதாகிருஷ்ணனின் தத்துவம் உதிர்க்கப்பட்டது அனைவரது மனங்களிலும் ஊன்றப்பட்டது.

ஏதாவது செய்வதன் உச்சகட்டமாக “நதி நீர் இணைப்பு”இந்த நாட்டுக்கு எவ்வளவு அவசியம் என்பது சுட்டிக்காட்டப் பட்டது. ஆக நாம் என்ன இலக்குடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அத்தனை விதைகளையும் ஒரு சேர அந்த இளைய நிலங்களில் விதைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன அந்த 90 நிமிடங்களில்.

அந்த தேசிய சேவை அமைப்புக்கும், கல்லூரி அமைப்புக்கும், ஒருங்கிணைப்பாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இந்த சந்திப்புக்கு பாலமிட்ட அத்தனி உள்ளங்களுக்கும் நன்றி சொல்ல மறுபடியும் பூக்கும் தளம் கடமைப்பட்டிருகிறது.

ஏனைய நாட்களில் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவ முகாம், மரம் நடுதல், எச் ஐ வி எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம், கண்பாதுகாப்பு, சுற்றுப்புறம் தூய்மை செய்தல் போன்ற எல்லாப்பணிகளிலும் இந்த மாணவர்கள் தன்னார்வத்தொண்டர்களாக இந்த தேசிய சேவைத் திட்டத்தின் வழியாக ஈடுபடுத்தப்படுவது சமுதாயத்திற்கு நல்லது இந்த ஒரு வாரப் பயிற்சி இவர்களுக்கு வாழ்வில் பெரும் ஊக்கமாயிருப்பது இந்த முகாமின் சிறப்பு.

இது போல் எம் வாழ்வில் நூற்றுக்கணக்கான முகாம்கள் கடந்து சென்றபோதும் எமக்கு இந்த இளைஞர்கள் மத்தியில் எமது அனுபவங்களைப் பகிர்ந்து செல்ல செல்வது புதிதாகவே இருக்கிறது. உங்களை எல்லாம் சந்திப்பது எமக்கே பெரும் வாய்ப்பு என்று சொல்லி முடித்தேன்.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 


ஊடகம், எழுத்தாளர்களுக்கு மட்டும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் விதிவிலக்கல்ல

பிப்ரவரி 26, 2014

 

1966_620

 

ஊடகம் ,எழுத்தாளர்களுக்கு மட்டும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் விதிவிலக்கல்ல:மனுஷ்ய புத்திரன் மதுவிற்கு எதிராக பேசி எழுதிவிட்டு அனைவருக்கும் அளவாக ஊற்றிக் கொடுத்தேன் என்று வெளிப்படுத்திய பதிவை ஒரு நண்பர் வெளியிட்டிருந்தது இந்த பதிவுக்கு காரணம் அது மட்டுமல்ல கம்யூனிஸ்ட்களுக்கு தொகுதி உடன்பாடு உண்டு என்று முதல்வர் சொல்லிய பிறகும் ஊடக நண்பர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் அவர் வேட்பாளரை நிறுத்தி விட்டார் என கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நக்கலாக பதிவு வெளியிடுவதெல்லாம் எந்த கட்டுப்பாட்டில் ஒழுக்கத்தில் என்று தெரியவில்லை.

இந்த நாட்டில் காவல்துறை, அரசியல் கட்சிகள், நீதித்துறை இவற்றுக்கு மட்டுமல்ல எல்லா பொறுப்பு வாய்ந்த துறைகள்க்குமே ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம் தேவைப்படுகிறது. சட்டம், நீதி, நிர்வாகம் தாங்கும் எல்லாத் தூண்களுக்கும் மற்றும் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அது நிறைய தேவைப்படுகிறது. இவை யாவற்றையும் தட்டிக் கேட்கும் ஊடகம் அதில் ஈடுபட்டோர் அனைவர்க்கும் அது இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.

நாளாக நாளாக செய்திகளை சரியாக உள் வாங்கிக் கொள்ளாமலே அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அவரவர் பதிவுகளை இட்டு எழுதி வருகின்றனர். தமிழக முதல்வர் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்திய சிறிது நேரத்திலேயே கம்யூனிஸ்ட்களுக்கு ஏமாற்றமே இது என்பது போன்ற பதிவுகளை முகப்புத்தகத்தில் அன்பர்கள் வெளியிட்டு விட்டனர். இத்தனைக்கும் அவர்கள் தொகுதி உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த தொகுதிகளின் வேட்பாளர்களை விலக்கிக் கொண்டு தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களை நிறுத்தி ஆதரிப்போம் என்று தெளிவாக சொல்லியிருந்த போதிலும். அதற்காக யாம் அந்த கட்சி, தலைமை, வேட்பாளர்கள் ஆதரவாக எழுதுகிறோம் என்று பொருளல்ல.. ஒரு செய்தியை உள் வாங்காமலே அதைப்பற்றி திரித்து மாற்றி எழுதவேண்டிய அவசரம் என்ன வந்தது என்பதுதான் புரியவில்லை. அதற்கான காரணம் என்ன வென்றுதான் விளங்கவில்லை.

தம்மைப்பற்றிய செய்திகள் உலவிக்கொண்டே இருக்கவேண்டும் என்ற அவா ஒன்றைத்தவிர வேறொன்றும் இந்த எழுத்துக்களில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் இது குறித்து நாளிதழ்கள் எல்லாம் கூட செய்திகளை சரியாக வெளியிட்டிருக்கின்றன. தோழமை கட்சிகளின் தொகுதி உடன்பாடு முடிவான பிறகு அந்த தொகுதிகள் அவர்களுக்கு விட்டுத்தரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளதாக. அ.இ.அ.தி.மு.க ஏற்கனெவே வந்த தேர்தலில் கூட இது போன்று செய்ததாகவே நினைவு.

அடுத்து மனுஷ்ய புத்திரனைப் பற்றிய ஒரு பதிவை அதே முகப்புத்தகத்தில் பார்த்தேன். அவர் மதுவுக்கு எதிர்ப்பான குரல் கொடுத்து விட்டு மாறாக ஒரு கலந்தாளாவல் முடிந்தவுடன் அனைவர்க்கும் அதில் கலந்து கொண்ட பெண்கள் குழுவினர்க்கு கலந்து கொடுத்ததாகவும் அதுதான் அவர்களுக்கு பெரும்பாலும் முதன்முறையாக அருந்தியதாக இருக்கக் கூடும் என்று அவர் பதிவு வெளியிட்டதாகவும் ஒரு முக நூல் அன்பர் அவரின் எழுத்துக்களின் தொகுதி தாங்கிய ஒரு 2 பக்கங்களை பொருத்திக் காண்பித்து முரண்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது மனுஷ்யபுத்திரனாக இருந்தாலும், தேவபுத்திரனாக இருந்தாலும் அது தவறுதான்.

பொதுவாழ்வில் வந்து இது போன்ற இயக்க நெறிகளில் ஈடுபடுவோர் தாம் தம்மை முதலில் அதற்கு ஏற்றவாறு தூய்மையாக இருத்தல் அவசியம். அதல்லாமல் பேருக்கு ஊருக்கு அது எமக்கல்ல அந்த அறிவுரை என்போரை காலம் காட்டும் முகமூடி கிழிக்கப்பட்டு உண்மை முகம் சிரித்துக் காட்டும்.

அப்படி இல்லாதிருந்தால் நமக்கும் மகிழ்வே. ஆனால் இது போன்ற அரைக்கால் சட்டை போட்ட மதுப் பழக்கத்தில் ஊறிய இன்று தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் நிறைய எழுத்தாளர் கும்பலை யாம் ஏற்கெனவே ஒரு எழுத்துப் பட்டறை என்ற பேரில் இவர்கள் எல்லாம்-ஹொகேனக்கல்- என்ற காவிரி நீர்வீழ்ச்சி பகுதியில் சந்தித்து 2 நாள் நிகழ்வில் 1 நாள் மட்டும் பார்த்துவிட்டு இவர்கள் பற்றி தெரிந்து கொண்டு மறு நாள் நிகழ்வை புறக்கணித்தவன். இவர்கள் எல்லாம்தான் இந்த தமிழ் கூறும் நல்லுலகத்தின் பிரபலமான எழுத்தாளர்கள். அடிப்படையில் பார்த்தால் இவர்களுக்கு தாம் எழுதும் எழுத்துக்களில் நம்பிக்கை ஏதும் இல்லை. அதற்கு உரியவர்களாய் அவர்கள் இல்லை. எல்லாம் வியாபாரம் . வெறும் பிழைப்பு.நாடு எப்படி இன்று இருக்கிறதோ அதன் பிரதிபலிப்புகளாகவே இவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் இதற்கும் மேல் எவரும் எதிர் பார்த்திருக்கவும் முடியாது. இந்த மனிதர்கள் எழுதினாலும் எழுதாமல் இருந்தாலும் தமிழ் தாய் எந்த வகையிலுமே வருத்தமும், மகிழ்வும் அடையவே போவதில்லை.

எனவே எப்படி பொதுவாழ்வில் சட்டம் நீதி நிர்வாகம், கட்சி தலைவர்கள், தொண்டர்கள் யாவருக்கும் ஒரு உண்மை நெறி வேண்டும் அது இல்லாதிருப்பதால்தான் யாவும் பாழ்பட்டு கிடக்கிறது என ஊடகம் கூச்சல் இடுகிறதோ அதே உண்மை நெறி இந்த ஊடகவியலாளர் அனைவர்க்கும் அவசியம் (பத்திரிக்கை, வானொளி, வானொலி,வலைதளம், இணைய தளம், புத்தகம், மாத, வார பத்திரிகைகள் யாவற்றுக்கும் சேர்த்துத்தான் அந்த படைப்பாளிகள், ஆக்கபூர்வமான சக்திகள் அனைத்துக்கும் சேர்த்துத் தான் சொல்கிறோம்.)

யாம் இதை சொல்வதற்கு தகுதி படைத்திருப்பதாகவே நம்புகிறோம். இந்த நாட்டு மக்களின் மேன்மைக்கு எமது காலத்தை, நேரத்தை, உடல் நலத்தை வித்திட்டு காசுக்காக விற்றுவிடாமல் விதைத்திருக்கிறோம் என்ற அடக்கத்துடனேதான் இதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

 

brunstock02

உண்மையை எழுதுங்கள், சொல்லுங்கள், திரித்து நமது எழுத்துக்களை அனைவரும் படிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் சூடாக இருக்கவேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதாதீர்கள். இந்த ஈனஸ்வரம் உங்கள் காதில் ஏறுமோ என்னவோ? எமது சங்கை ஊதி விட்டோம்.அவர்கள் சரி இல்லை, இவர்கள் சரி இல்லை, எவர்களுமே சரி இல்லை எனச் சொல்லும் நாம் சரியாக இருக்க வேண்டுமே…அப்படி இல்லை எனில் அனைவருமே அனைத்து தர்ப்புமே இப்படி சரி இல்லை எனில் இந்த நாட்டை எந்த ஆண்டவன், எந்த கடவுள்தான் காப்பாற்ற முடியும்…?

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.

 


புதுமைப்பித்தனை வேண்டாம் என்றால் தமிழ் இலக்கிய உலகமே விளங்காது:

பிப்ரவரி 25, 2014

 

puthumai pithanpudhumai-pithan-tamil-3-2-s-307x512

 

புதுமைப்பித்தனை வேண்டாம் என்றால் தமிழ் இலக்கிய உலகமே விளங்காது: கவிதைக்கு பாரதி சிறுகதைக்கு புதுமைப் பித்தன் என்ற பேர் அனைவரும் அறிந்ததே. இவரது சிறுகதைகள் இரண்டை கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருந்ததை நீக்கிவிட்டு சென்னை பல்கலைக்கழகம் இவரின் மற்றொரு கதையை வைத்துக் கொள்வதாகவும் சமீபத்தில் வெளியான செய்திகள். அடியேனும் புதுமைப்பித்தன் என்னும் விருத்தாச்சலம் சுமார் 42 ஆண்டுகளே வாழ்ந்த அற்புத எழுத்தாளர் பற்றி அறிவேன்.

இவர் எழுதிய எல்லாச் சிறுகதைகளையும் இணைத்து ஒரே தொகுதியாக “புதுமைப்பித்தன் சிறுகதைகள்” என்ற ஒரே பெரிய புத்தகத்தை படித்துள்ளேன். நீங்கலாக அவ்வப்போது ஆங்காங்கே நிறைய இவரின் எழுத்துக்கள் கிடைத்தன படிப்பதற்கு. இவரின் பெருமை சொன்னால் விளங்காது. அவரது எழுத்தை படித்தால் தான் அந்த சுகம் விளங்கும். இலக்கியத் தரமென்றால் இவரது கதைகளை சொல்ல முடியும். பாரதி போன்றே இவரும் தமது சிறு வயதிலேயே சிறு கதை எழுத்துக்களில் சிகரம் தொட்டவர்.
கதைகளுக்குள் கொண்டு சாதிய சாயம் பூசி அது வேண்டாம் இதுவேண்டாம் என இயக்கம் நடத்திக் கொண்டிருப்பவர்கள் , ஆங்கிலேய கல்வி முறையான மெக்காலே கல்வி முறை வேண்டாம், தனியார் கல்வி மயம் வேண்டாம் என்று போராடி நீதிமன்றம் சென்று கல்விச் சேவை செய்தால் நன்றாக இருக்கும். அதைவிட்டு என்றோ எப்போதோ எழுதிய ஒரு கதையைவேண்டாம் எனச் சொல்லிப் பெரு வெற்றி பெற்றதாக நினைப்பது எல்லாம் பேதமைத்தனம்.

இன்னும் இந்த நாட்டில் ஆங்கில வழி கல்வியும் ஆட்சியுமே நிலவி வருகிறது. இவர்கள் எல்லாம் இந்த அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் நிற்கவே கூடாது. வென்று பாராளும்ன்றம், சட்ட சபைகளுக்கு எல்லாம் போகக்கூடாது. ஏன் எனில் இந்த அமைப்பின் கீழ் சாதியம், மதம்,பொருளாதாரக் குற்றப்பிண்ணனிகள் எல்லாம் இருக்கிறது

அவ்வளவு ஏன் கோடைக்காலத்தில் விட்ட விடுமுறையை இன்னும் மாற்ற இவர்களுக்கு துப்பு இருக்கிறதா? அப்போதுதான் பள்ளி மாணவர்கள் அதிகம் வெளியில் சுற்றி வெயிலில் காய்ந்து உடல் நலம்கெடுத்துக் கொள்கிறார்கள். அப்போது பள்ளிகள்,கல்வி நிலையங்கள் இருந்தால் ஒரு கட்டடத்திற்குள் அடங்கி கல்வி கற்பார்கள், மாறாக மழைக்காலத்தில் விடுமுறை விட்டால் வீடு அடங்கி இருப்பார்கள், போக்குவரத்து, அபாயம் எல்லாம் தவிர்த்து இருப்பார்கள் பாதுகாப்பாக.

இவை பற்றி யாம் சொல்லவில்லை. வினோபா பவே போன்ற கல்வி சிந்தனையாளர்களே சொன்னார்கள். எவரும் இதுவரை அதைசெயல்படுத்த முனையவில்லை. தனியார்மயம், அறக்கட்டளை என்றெல்லாம் பிள்ளைகளின் கல்வி முதலீட்டில் கோடிக்கணக்காக நூறு கோடிகளாக ஆயிரம் கோடிகளாக வருவாய் ஈட்டியபடி எல்லாம் இருக்கிறார்கள் தனியார் மயமாக அதெல்லாம் பெரிய தவறாக இவர்களுக்குத் தெரியவில்லை.

இந்த சிறுகதை இவ்வளவு நாட்களாக இருந்து எந்த வித சமூகத் தீங்கும் நிகழ்த்தாமல் இப்போதுதான் புதிதாக ஏதோ நிகழ்த்திவிடும்போலும் நீதிமன்றம் வரை அணுகி நீக்கி இருக்கிறார்கள். பணி நிறைவு நீதியரசர் சந்துரு போன்றோர் கூட இது பற்றி கடிந்து தமது கருத்துக்களை பதித்துள்ளார்.

துன்பக்கேணி, பொன்னகரம் கதைகளை நீக்கிவிட்டு மாறாக அவரின் மற்றொரு கதையை வைத்துள்ளனர் என்ற செய்திகள் ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன. தேவையில்லாத வெட்டி வேலை. எந்த வித நோக்கமின்றி யாரையும் இலக்கு இல்லாமல் தாக்க முனையாமல் இருக்கும் புதுமைப்பித்தன் போன்றோருக்கே இவ்வளவு நாள் கழித்து ஒரு இழுக்கு இழைக்கப் படுகிறது எனில் இலக்கிய உலகும் அரசியல் உலகாய் மாறவேண்டும் என்ற விருப்பமே தலைப்படுகிறது. இது வன்மையாக விலக்கி விடத்தக்கது.அவரது கதையே அதற்கு மாற்றாக வைக்கப்பட்டிருப்பது சற்று ஆறுதலானதுதான்.

எமது கருத்தை பதிவு செய்யவே இந்த கருத்துக்களை வெளியிடுகிறோம். மறுபடியும் அவரது முழு இலக்கியத்தையும் ஒரு முறை எடுத்து இனி படிக்கத் தூண்டுகிறது இதன் மேல் ஏற்பட்ட இந்த தாக்கம். இதோ அவரின் தெளிவான கருத்துக்கள்:இலக்கியத்தில் இன்னதுதான் சொல்ல வேண்டும், இன்னது சொல்லக்கூடாது என ஒரு தத்துவம் இருப்பதாகவும், அதை ஆதரித்துப் பேசுவதாகவும் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கலாம். உண்மை அதுவல்ல; சுமார் இருநூறு வருஷங்களாக ஒருவிதமான சீலைப்பேன் வாழ்வு நடத்திவிட்டோம். சில விஷயங்களை நேர் நோக்கிக் பாக்கவும் கூசுகிறோம். அதனால் தான் இப்படிச் சக்கரவட்டமாகச் சுற்றி வளைத்துச் சப்பைக்கட்டு கட்டுகிறோம்.குரூரமே அவதாரமான ராவணனையும், ரத்தக்களறியையும், மனக் குரூபங்களையும், விகற்பங்களையும் உண்டாக்க இடம் இருக்குமேயானால், ஏழை விபசாரியின் ஜீவனோபாயத்தை வர்ணிப்பதாலா சமூகத்தின் தெம்பு இற்றுப்போய் விடப்போகிறது? இற்றுப்போனது எப்படிப் பாதுகாத்தாலும் நிற்கப்போகிறதா? மேலும் இலக்கியம் என்பது மன அவசத்தின் எழுச்சிதானே? நாலு திசையிலும் ஸ்டோர் குமாஸ்தா ராமன், ஸினிமா நடிகை சீத்தம்மாள், பேரம் பேசும் பிரமநாயகம் – இத்யாதி நபர்களை நாள் தவறாமல் பார்த்துக்கொண்டிருந்து விட்டு, இவர்களது வாழ்வுக்கு இடமளிக்காமல், காதல் கத்தரிக்காய் பண்ணிக்கொண்டிருப்பது போன்ற அனுபவத்துக்கு நேர் முரணான விவகாரம் வேறு ஒன்றும் இல்லை. நடைமுறை விவகாரங்களைப் பற்றி எழுதுவதில் கௌரவக் குறைச்சல் எதுவும் இல்லை”..Essays of Pudumaipithan, Meenakshi Publishers (1954)

வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்துவிட்டவைகளும். அவை உங்கள் அளவுகோல்களுக் குள் அடைபடாதிருந்தால் நானும் பொறுப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாடவிட்ட ஜீவராசிகளும் பொறுப்பாளிகளல்ல; உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன்.-  புதுமைப் பித்தன்.

 

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.


அர்விந்த் கெஜ்ரிவாலும் அம்மாவும்

பிப்ரவரி 24, 2014

 

flow16_2010_66x69

 

அர்விந்த் கெஜ்ரிவாலும் அம்மாவும்:எல்லா ஊர்களிலும் அம்மாவின் 66வது பிறந்த நாள் விழா – எங்கள் ஊரில் ஒரு மதுக் குடி இளைஞர் மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்று இன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார் அம்மாவின் பிறந்த நாளுக்காக-அர்விந்த் கெஜ்ரிவால் தமது குடும்பத்தில் யாருக்குமே பிறந்த நாள் கொண்டாடுவதில்லை என்கிறார். அம்மா அனைவரையும்-அனைத்து கட்சியினரையுமே கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி தமிழகத்தின் 40 தொகுதிகளையும் வென்றெடுக்கலாம் என உறுதியாக எண்ணுகிறார்.

உங்களை எல்லாம் சந்தித்து பேசி நாட்கள் பல ஆகிவிட்டன. உடலும் ஒத்துழைக்காமல் அத்துடன் அன்றாடம் தினம் ஒரு மாறுதலாக நிகழ்ந்து நமது சந்திப்புகளை தள்ளிப் போட்டு வருகின்றன. முன்பு போல வாரம் 5 நாட்கள் இணையத்தில் வலைதளத்தில் எமது விழிப்பூவில் அமர்ந்து செய்தி பரிமாற்றம் நிகழ்த்தவிடாமல் நிறைய மரணங்கள் அதன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் வண்ணம். குளிர் காலத்தில் இருந்து வெயில் காலம் வந்து விட்டது. எமது நடைப்பயிற்சி நேரம் கூட பின் தள்ளிப் போடப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் 8 மணி வரை ஆகிவிட்டது

இதனிடையே நாட்டில் நிறைய மாற்றங்கள். அரவிந்த் கெஜ்ரிவால் என்னும் மனிதர் ராகுலுக்கும் மோடிக்கும் அவரது விமானப் போக்குவரத்துக்கும், தேர்தல் பணிகளுக்கும் முகேஷ் அம்பானி-ரிலையன்ஸ்- நாட்டின் முதல் இடத்துப் பணக்காரர்தான் நிதி உதவி செய்கிறார். அவருக்காக நீங்கள் வென்றதும் என்ன கைம்மாறு செய்ய விருக்கிறீர்? எண்ணெய் பீப்பாய் விலையை 8 டாலரிலிருந்து 16 ஆக உயர்த்தப் போவது உண்மைதானே? இதுவரை ஆம் ஆத்மி கட்சி அந்த நாட்டின் முதல் பணக்கார கும்பலிடமிருந்து ஒரு பைசாவைக்கூட தேர்தல் பணிக்காக வாங்கியதில்லை, வாங்க மாட்டோம் என சூளுரைத்துள்ளார். அவருக்கு இலங்கை விவகாரத்தில் பட்டறிவு குறைவாக இருக்கும் ஒரே காரணத்தைக் காட்டி அவரை ஒரேயடியாக தமிழக ஆர்வலர்கள் அந்த சேவை செய்யும் மனபான்மையுடன் போராடிக்கொண்டிருக்கும் நல் உள்ளங்களை விலக்கி வைப்பது நெருடலானதுதான்.

இவ்வளவு துணிச்சலாக அம்பானி குழுவினரை நேருக்கு நேர் பேர் சொல்லி வழக்கு தொடர எந்த அரசியல் கட்சியுமே நாட்டில் முன்வராதபோது இந்த அர்விந்த் கெஜ்ரிவால் செய்தது அருமையான செயல் ஆனால் இது இந்திய அரசியல் நீரோட்டத்தில் பெரிதான அலை ஏதும் பரப்பவில்லை இந்திய வாக்களார்கள் இது பற்றி எல்லாம் கவலையுறுவதாக காணோம். எந்த வித அடையாளமோ அறிகுறியோ இல்லை தேர்தல் இன்னும் ஓரிரு வாரஙக்ளில் அறிவிக்கப்படக் கூடும் என்ற நிலையில்.

விரிவாக விளங்கவைத்தால் அவர்கள் அதை விளங்கிக்கொள்வார்கள் என்றே நம்புகிறோம்.மேலும் தமிழக அரசியலில் அம்மா தமது 66 வது பிறந்த நாள் விழாவில் சற்று முன்னதாக 40 வேட்பாளர் பெயரையும் அறிவித்து, இருக்கும் கூட்டணியே போதும் என கம்யூனிஸ்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு போதும் என்று சொல்லிவிட்டார். எப்படியோ எவர் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும், அ.இ.அ.தி.மு.க கட்சிக்கு தமிழக 40 தொகுதிகளில் அதிகம் கிடைக்கவிருக்கிறது என்பதில் உறுதியாக உள்ளார். ஏனைய கட்சிகள் எல்லாம் பிரிந்துகிடப்பது இவரது கட்சிக்கு அரிய வாய்ப்பு சுலபமாகவே வென்று காட்டிவிடலாம் எனத் தெளிவாக இருக்கிறார்.

பிறந்த நாளுக்கு எல்லா ஊர்களிலும் இரசிகர்கள் இருக்கிறார்கள். ஆமாம் எம்.ஜி.ஆர் இவரை கட்சி விட்டு நீக்க நினைத்த போதும், கொ.ப.செ ஆவாக ஏனடா நியமித்தோம் என்று நொந்து கொண்டபோதும் இவரது வாய்ப்புகளும், சந்தர்ப்பங்களும் இவரை எம்.ஜி.ஆர் அவர்களின் வாரிசாக இவரது கட்சிக்காரர்களை ஏற்கவைத்து 3 முறை முதல்வராகவும் வந்து விட்டார். தமிழக அரசியல் தற்போதைக்கு பெரிதாக ஒன்றும் மாறுவதாக காணோம்.இன்னும் இவரது பிறந்த நாளில் எம்.ஜி.ஆர் சினிமா பாடல்கள் ஒலிப்பது எமது காதுகளில் கேட்டுக் கொண்டுதானிருக்கிறது.

சைதை துரைசாமி, சென்னை மேயர் பள்ளிகளுக்கு சென்று எம்.ஜி.ஆர் பாடல்பாடும் ஆசிரியைகளுக்கு நன்றாக பாடினால் பரிசு 500 ரூபாய் கொடுத்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. அனேகமாக அம்மா காலத்துக்குப் பின்னால் அம்மாவின் பிறந்த நாளும், அண்ணாபிறந்த நாள், எம்.ஜி.ஆர்.பிறந்த நாள், பெரியார் பிறந்த நாள் என்பது போல் மாறி விடுமளவும் நாள் காட்டிகளில் எல்லாம் பதிக்கப்பட்டு போடப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா தியேட்டர், அம்மா டாஸ்மார்க், அம்மா மளிகை, அம்மா அரிசி, அம்மா கழிப்பிடம், அம்மா அம்மா என அனைவர்க்கும் மாநிலம் எங்கும் எல்லாம் கிடைத்தால் பரவாயில்லைதான். கடந்த முதல்வரால் கட்டப்பட்ட சட்டசபை வளாகம் செத்த சபை வளாகமாக தற்போது சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக மாற்றப்பட்டு தினம் 50 உயிர்க்கு போராடும் நோயாளிகள் உட்புற நோயாளிகளாக அனுமதிக்கப்படுகின்றனர் என்பது செய்தி. ஒரு வகையில் பார்த்தால் இந்த சட்டம்ன்ற பிரதிநிதிகளுக்கு அவர்தம் வெட்டி செலவுகளுக்கு மாற்றாக பல உயிர்கள் காப்பாற்றப்படுவது நன்றாகவே இருக்கிறது. ஆனால் இவர் பிரதமரானால்? எப்படி இருக்கும்? என ஒரு கற்பனை செய்தாலும் நாட்டில் உள்ள ஏற்கெனவே மற்ற பிரதமர்களால் செய்த அனைத்து திட்டங்களும், பணிகளும் நிர்மூலப்படுத்தப்பட்டு நாடெல்லாம் இவர் செய்த அம்மா பணிகள் என்றாகிடுமோ?

அம்மா, எமக்கு ஒரு புகைப்போர் இல்லாத தேசம், புவி வேண்டும்,
அம்மா எமக்கு மதுக் குடி இல்லாத தேசம் , புவி வேண்டும்
அம்மா எமக்கு அனைவர்க்கும் விலையில்லா குடிநீர் வேண்டும்
அம்மா எமக்கு அனைவர்க்கும் சமமான கல்வி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்
அம்மா எமக்கு அனைவர்க்கும் சமமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும்
அம்மா எமக்கு இந்த நாடு முழுதும் திறந்த வெளிக் கழிப்பிடமே இல்லா நிலை வேண்டும்.
அம்மா எமக்கு அனைவர்க்கும் நல் உணவு, நல் உடைல் நல் வீடு, நல்ல சுகாதாரமான வாழ்க்கை வேண்டும், அனைவர்க்கும் சமமான உரிமைகள் வேண்டும். உறுதொழில் வேண்டும், நமது பிள்ளைகள் வெளிநாடு தேடிசென்று வேலைக்கு பிச்சை எடுக்கா நிலை வேண்டும், எமது இராணுவ விமான, கப்பற் படை சார்ந்தோர் கூட மதுவிற்கு அடிமைப்படாத நிலை வேண்டும்.

அம்மா எமக்கு ஊழலற்ற ஒரு நல்லாட்சி வேண்டும்.பெண்கள் சமமாக நடத்தப்பட்டு காந்தி சொன்ன மாதிரி நல்லிரவில்கூட சுதந்திரமாக, சுயமாக செயல்படும் நிலைவேண்டும். பயணங்களில் வழிப்பறி, பலர் சேர்ந்து வன்முறை எல்லாம் செய்யும் நிலை இல்லா நிலை வேண்டும். நகை எல்லாம் அணிந்திருந்து செல்ல வேண்டும் என்பது இல்லை.

முக்கியமாக நீதிமன்ற வழக்குகள் யாவுமே ஓர் ஆண்டுக்குள்ளாவது முடித்து விட வேண்டும். அது உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும். பதினேழு ஆண்டுகள் எல்லாம் ஒரு சாதாரண மனிதர் தாங்க முடியுமா? தெய்வமே நாமிட்ட கையெழுத்தை நாமிட்டதுதான் என உரத்து உண்மை சொல்லும் நிலை வேண்டும்…

அம்மா எமக்கு எல்லா சாதி, மதம், மொழி, இன பேதமற்ற ஒரு சமத்துவ சமுதாயம் வேண்டும் அதை எல்லாம் நீங்கள் அம்மாவாக இருந்து தரவேண்டும் அம்மா தாயே! அப்படி எல்லாம் இருந்தால்தான் அம்மா ,இல்லையேல் சும்மாதான். சுருக்கமாக சொன்னால் அந்த பாடல் சீர்காழி குரலில் இன்றும் ஒலிக்குமே: “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாமை நிலை வேண்டும்”. தரமுடியுமா தாயே வெள்ளித் திரையின் தாரகையே? என்றும் சிறந்த நாயகியே!.

மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை

 


விடைபெற முடியா பிரிவுகள்:கவிஞர் தணிகை.

பிப்ரவரி 20, 2014

 

silkshoes1

 

 

விடைபெற முடியா பிரிவுகள்: உயிருக்கு உயிராய், உயிரை விட நெருக்கமாய் இருக்கும் உறவுகளிடம் கூட சொல்லிக் கொள்ளாமலே வாழ்வானது பெரும்பாலும் முடிந்து விடுகிறது. இப்படி சொல்லாமலே போகும் பிரிவுகள் மரணம், நட்பு, குடும்ப உறவுகள்,காதல் இப்படி எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் வாழ்வுள் நிகழ்ந்தேறிவிடுகிறது.

இயல்பாக நினைப்பிற்கேற்பவே நேற்றைய நாளும் இருக்கும் என்றே விழித்த காலை…. காலை முதல் வழக்கம்போலவே ஆரம்பித்திருந்தது. தியானத்தின் நேரம் 9 மணிக்கு மேல் இருக்கும் துணைவி வந்து “லதா மாமா(மாமனார்) இறந்து விட்டாராம் காலை 7.30 மணி இருக்குமாம் என்றார். அதன் பின் தியானத்தை தொடர முயற்சித்தும் எண்ணங்கள் ஒருங்கிணையவில்லை.

83 வயதுள்ள பெரியவர், எந்த கெட்ட வழக்கமும் இல்லாதவர், நிறைய சம்பாதித்து மிகக் குறைவாகவே செலவு செய்தவர் – அதாவது காலை தேநீர் மட்டுமே இவரது தனிப்பட்ட செலவாம். கூட இருப்பவர்களுக்கும் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டாம் மகன் சொல்லியது.அதி காலை வழக்கம் போல நடைப்பயிற்சி செய்ய சென்றாராம். வேடப்ப ஏரி என்ற மணல் பாங்கான இடத்தில் வீட்டிலிருந்து 3 கி.மீ தொலைவில் விழுந்து இறந்தார். நபர் மிகவும் பிரபலமானவர் என்பதால் நிறைய தகவல்களும் உடல் சூடு குறையும் முன்னம் (உயிரோடு போன உடல்-உடலாக) வீடுவந்து சேர்ந்தது. ஆமாம் அந்த உடலோடு இருந்த உயிர் எங்கேதான் சென்றது? அது மட்டுமே இன்னும் அறிவியலுக்கு கட்டியம் கூறி சொல்ல முடியா நிலை. அதிகாலை என்பதால் இவர்களின் வீட்டு ஆசிரியப் பணி புரியும் மகனும்,மகளும் பள்ளிக்கே செல்லுமுன்பே இந்த காரியம் நடந்தேறி விட அதன் பின் மட மட வென பணிகள் நடந்தேறின.

ஒரு பேத்தி மருத்துவராக கல்வி முடித்து பயிற்சியில்(ஹவுஸ் சர்ஜனாக) தூத்துக்குடியில் இருந்து இரவு 7.30 மணிக்கு வரவும், ஒரு மகனது குடும்பமும், மகளது குடும்பமும் சென்னை வாசிகளாய் இருந்து மற்றொரு பேத்தி எம்.ஐ.டியில் பொறியியல் படிப்பவராகவும் இருக்க அவர்கள் எல்லாம் சேர்ந்து வர மாலை 5.30 ஆகிவிட அந்த ஊர் பக்கத்து ஊர் உறவுகள் , நட்பு, அண்டை, அசல் எல்லாம் சேர இரவு 8 மணிக்கு மேல் இறுதி மரியாதையும் செய்யப்பட்டு அடக்கத்திற்காகவும் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. இறந்தது எமது மூத்த சகோதரி மகளின் மாமனார். இந்த மூத்த சகோதரியின் மகள் எமதுவீட்டில் உள்ள அரைக்கும் ஆரியக்கல் அருகேதான் பிறந்தவள். இன்று ஆசிரியை.

அவளுக்காக, அந்த பெண்ணின் கணவருக்காக , அந்த நல்ல குடும்பத்திற்காக மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 10 மணி நேரம் செலவு செய்திருக்கிறேன். அதில் வாழ்வை நல்ல முறையில் செலுத்தி வரும் ஒரு கல்விமான் நாட்டை எப்படி முன் எடுத்து செல்ல முடியும், டாக்டர் இராதா கிருஷ்ணன் போன்றோரே இந்த ஜனநாயக முறைகள் சரியாக இல்லை என சொல்லிச் சென்று இரண்டு தலைமுறைகள் ஆன பின்னும் நாட்டின் நடப்பும், ஆட்சிமுறைகளும், கட்சிகளும், வாக்களிப்பு போலிமுறைகளும் பற்றி நிறைய ஆர்வத்துடன் கேட்டார். அனேகமாக 2 அல்லது 3 மணி நேரம் அவருக்காக அவருடன் பேசினேன். மறுமுறையும் தொண்டை காய்ந்துவிட மறுபடியும் ஒரு டம்ளர் மோர் கேட்டு வாங்கி குடிக்குமளவும். அது ஒரு நல்ல சந்திப்பு. குறிப்பிடத்தக்க சந்திப்பு. மனிதர் ஒரு உதவிக் கல்வி அலுவலராக, தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றதோடு மட்டுமல்லாமல் தமது முதிய வயதில் திருமண நிகழ்வுகளுக்கு தம்மால் ஆன முயற்சி செய்யும் ஒரு அலுவலகத்தில் தமது நேரத்தை சேவையாக வழங்கி பணி புரிந்து வருகிறார். இலவசமாக. ஊதியமின்றி.

சரி இதைப்பற்றி எல்லாம் சொல்ல அல்ல இந்த பதிவு. விடைபெற முடியா பிரிவுகள். உங்களுக்கே தெரிந்து இருக்கும் நாம் அனைவருமே வாழ்வைப்பற்றிய பயத்தில் இறந்து விடுவோம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். எங்காவது போகும்போது கூட அதனால்தான் சென்று வருகிறோம் எனச் சொல்லி பிரிகிறோம். போகிறேன் எனச் சொல்லி விட்டால் அப்படியெல்லாம் சொல்ல வேண்டாம், போய் வருகிறேன் எனச் சொல்லிச் செல்க என அறிவுறுத்துகிறோம்.

நிலை இப்படி இருக்க இந்த மனிதர் பேரன் பேத்தி எல்லாம் திருமணம் ஆகியும் ஆகாமலிருக்கும் பருவத்தில் குடும்பத்தில் எங்கும் நிலை பெயராமல் அனைவரும் ஒட்டி பின்னிப் பிணைந்து வாழ்ந்தவர் -அனேகமாக ஒரு மூத்த பெண்தான் திருமணம் கூட வேண்டாம் என தமது குடும்பத்திற்காக தமது வாழ்வை தியாகம் செய்து மனோரஞ்சிதமாக மணந்து வருகிறார் காய்ந்து போனாலும் அந்த பூ வாசம் வீசுமே அதுபோல தமது உடல் என்ற கூடு ஒடுங்கி அடங்கிய பிறகும் கூட தமது எண்ணப்படி வாழ்ந்து முடித்த இறுமாப்போடு காலத்தை ஒரு கர்வத்தோடு சந்தித்து வருகிறார். அவர் தவிர ஏனைய அனைவர்க்கும் இந்த பெரியவர் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்து விட்டார் என்னும் போதிலும் இத்தனை பேர் இந்த குடும்பத்தில் இருந்தபோதிலும் தன்னந்தனையாக அனாதையாக ஒரு வழிப்போக்கில் இவரது மரணம் எவரிடமும் ஏதும் சொல்லிக் கொள்ளாமலே முடிந்து விட்டது.

இதே போல்தான் மற்றொரு நல்லமனிதரின் மரணம் கூட இதே ஊரில் காலைக்கடனை கழிக்க சென்றவர் திரும்பி வராமலே நிகழ்ந்துவிட்டது. அந்த பகுதிகளில் ஆடு மாடு மேய்த்த பெண்களால் கண்டறியப்பட்டு வந்து சொல்வதற்குள் உடல் சூடு மிக வெயில் ஏற்றத்தில் உடல் தசைகள் எல்லாமே விரிந்து இரத்தம் கசிந்து வெளி வர ஆரம்பித்திருந்ததாக பார்த்த இளைஞர்கள் கூறினார்கள்.(இவர்கள் வீட்டில் 2 கழிப்பறைகள் இருக்கும் புது வீடு கட்டியும்(4 அடுக்குகளுடைய வீடு) இந்த மனிதர் தமது புராதான வழக்கப்படி வெளியில் தான் செல்வது வழக்கமாம்)பெற்ற நான்கு பெண்களும் சொல்லி அழுத கதை மாளாது. இவரது சொல்லாமல் சென்ற கதைக்கும் பிறகு கடைசி பெண்ணின் கழுத்தில் பேசி முடித்த படி தாலி ஏறியது.

உயிருக்கு உயிராக காதலிப்பார்கள்,உலகில் ஒருவருக்கொருவரே மற்ற எல்லா உறவுகளையும் விட மானசீகமாக பிரிக்கமுடியாமல் எண்ணத்துடனே பின்னிப் பிணைந்து கிடப்பார்கள் கடைசியில் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளாமலே பிரிந்து போய் விடுகிறார்கள். கடைசியில் காலம் முழுதுமே கூட ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதேயில்லை.

நட்புதான் எல்லா உறவுகளையும் விட பெரிது, சிறந்தது என பரிமாறிக்கொள்வார்கள் பின் ஏதோ காரணம் பற்றி, சிறு சிறு விவகாரங்கள் இடையுற பிரிந்தே போவார்கள் ஒருவர்க்கொருவர் மறுபடியும் காணாமலே, கண்டாலும் கண்டு கொள்ளாமலே, சொல்லாமலே பிரிந்து செல்வார்கள்,

ஒரு குடுமப்த்தில் ஒரே தாய் வயிற்றில் பிறந்திருப்பார்கள் பிறகு அவரவரின் சுய நல எண்ணங்களாலும் தமரது குடும்பம், மணம், பிள்ளைகள் என்ற வாழ்வின் போக்காலும் மறுபடியும் சேர்க்கமுடியாமலே, சேராமலே சொல்லாமலே பிரிந்து வாழ்வார்கள். இந்த அடியேனும் கூட எமது வாழ்வில் சந்தித்த நட்பு, காதல்,நிலாப்பெண்கள், உறவுகள், குடும்பம் இப்படி எத்தனயோ பற்றி அசைபோடுகிறேன். மிக அருகே இருக்கும் வாழ்வின் பிடிப்பும், பிடிகளும் எவ்வளவோ தொலைவுக்கு மீண்டு வர முடியா அளவுக்கு மீட்சி பெற முடியா அளவுக்கு எப்படித்தான் விலகி சென்றுவிடுகின்றன. வாழ்வு என்பதே எல்லா கதைகளையும் மீறிய ஒரு சொல் கட்டுக்குள் அடங்காத புதிராய் இருப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு ஒரு சொல் குறியீடாக என்னதான் சொல்வது? விருப்பமாயிருப்பது வெறுப்பாவதும்,வெறுப்பாய் இருப்பது விருப்பமாய் ஆவதும் …விசித்திரம்.

puzzle_cook_big

 

இப்படி இன்னும் எத்தனையோ வகையான விடைகொடுக்கமுடியா பிரிவுகளில் மனிதமும் வாழ்வும் சுழன்றாடி போய் முடிகிறது காலச் சுழியில். குரு சீடர் என்பார்கள் அது கூட அப்படித்தான் சொல்லாமலே நிறைய முடிந்துபோகிறது. அகத்தியர் தொல்காப்பியன் உறவு கூட அப்படித்தான் இருப்பதாக , இருந்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன.

இன்னும் இறந்தவர் இறுதிச் சடங்குக்கு சென்ற வீட்டிலிருந்து திரும்பி வருகையில் எவருமே சொல்லி விட்டுப் பிரிந்து வருவதில்லை. காரணம் இது போன்ற மற்ற நிகழ்வுக்கு யாம் உங்கள் வீட்டுக்கு வர ஆர்வமுறவில்லை இனி இது போன்ற துக்க நிகழ்வுகள் உங்கள் வீட்டில் நடைபெறுவதில் எமக்கு உடன்பாடில்லை என்பது போன்றதாகும். ஆனால் பிறப்பும் இறப்பும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே இருக்கிறது. இயற்கை பூமித்தாய் உள்வாங்குவதற்காகவே பெற்று பாலூட்டி தாலாட்டுவதாகத் தெரிகிறது.

செத்த பிணங்களைக் கண்டு சாகவிருக்கும் பிணங்கள் அழும் என்பார்களே சித்தர் அதுபோல, புத்தர் சாகாதிருப்போர் வீடு எது என கண்டறிந்து வருக என சொல்லியது போல சாவு இயற்கையாக நமக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிருக்குமே விதிக்கப்பட்டிருக்கிறது அது முன் பின் என வருகிறது அவ்வளவே…எனவே தான் நமது முடிவுகளில் பெரும்பாலான முடிவுகள் சொல்லாமலே செல்வதாகவே அமைகிறது. எப்போதும் நாம் வாழப்போவதாக ஏதாவது செய்தாக வேண்டும். ஏனெனில் நமது வாழ்வுதான் நிலையானதாக இல்லையே என்பதால்.

நீங்களும் சில சமயங்களில் அனுபவத்திருப்பீர்: எப்போதாவது நாம் விரைந்து வீடு நோக்கி செல்ல வேண்டும் என்னும்போதுதான் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நகராது, ரயில் வண்டிகள் வந்து செல்ல கேட் போடப்பட்டு சாலையின் வாகனங்கள் நிறுத்தப்படும். ஏன் சில நேரம் நாம் செல்ல வேண்டிய பேருந்துகள் கூட வராது. இவை எல்லாமே நமது விருப்பத்துக்கு மாறாக நடப்பது போல் தோன்றும். ஆனால் இவை எல்லாம் நமக்காக மட்டுமே நடைபெறுவதல்ல. பல்வேறு பட்ட புறக்காரணங்கள். அத்துடன் நமது உடல் திறன், பசி, அல்லது ஆரோக்யம் கெட்டிருக்கலாம். அப்போது சகிப்புத்தன்மை தேவைப்படும். இந்த சகிப்புத்தன்மை சிதறும்போது நிறைய முரண்பாடான சம்பவங்கள் நேரும். மரணம் கூட அப்படி நேருவதுதான் என்று கொள்ளலாம்.மரணம் நமக்கு மட்டுமே அல்ல. இது புதிது ஒன்றும அல்ல.ஆனாலும் பிறருக்கு நடக்கும்போது நாம் இருப்பதாக நினைப்பதும் நமக்கு நடக்காது என்ற பொய் நினைப்பில் இருப்பதும் கூட எவ்வளவு போலித்தனமானது.

சடலத்தை இறுதிச் சடங்கிற்காக இடு காட்டில் இட்டு விட்டு இனியும் தாமதித்தால் வீடு வந்து சேர தாமதமாகிவிடும் என்றால்: அந்த பேருந்து நிறுத்தம் வரை எமை அழைத்து செல்வதாக சொன்ன ஓட்டுனர் இதோ வருகிறேன் என சிறிது நேரம், அதன் பின் ஒரு பேருந்து: 8.24க்கு புறப்படும் என்றார்கள்…ஜலகண்டாபுரம் வழி நங்கவள்ளி என்ற போர்டு. வேறு வழி இல்லை ஏறிவிட்டோம். அது 9.15க்கு நங்கவள்ளி கொண்டு வந்து சேர்த்தது. பார்த்தால் சாணரப்பட்டி, சப்பாணிப்பட்டி, பக்கநாடு என ஒரு வழியாக எல்லா சிறு நிறுத்தங்களிலும் நின்று வனவாசி வழியாக நங்கவள்ளி வந்து சேர்ந்தது. அட இப்படியும் ஒரு வழி இருக்கிறது என சுட்டிக் காட்டினார்கள் அந்த பேருந்தில். அடுத்து நங்க வள்ளி பேருந்துநிறுத்தம். குறைந்தது 30 நிமிடத்திற்கு மேல் இருக்கலாம். அந்த வழித்தடத்தில் அடிக்கடி வந்து போகும் ஒரு பீடி குடித்த நபர் இந்த நேரத்தில் மட்டும் இப்படித்தான் சார் ஒரு மணி நேரத்திற்கு இப்படித்தான் இருக்கும் அதன் பின் 3 பேருந்துகள் வந்து ஒரே நேரத்தில் செல்லும் என சலித்துக் கொண்டார் மற்றொரு பெரியவரும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

ஒரு வாட்ட சாட்டமான விடலை நங்கவள்ளி பேருந்து நிறுத்தத்தில் “நான் பெரிய ரௌடி” என்னை யாரும் பிடுங்க முடியாது, என்று சத்தமாக கத்தி இருந்த இரவை கொச்சைப்படுத்திக் கொண்டே யாராவது பேசினால் அவரிடம் அண்ணா நீங்கதான் எப்பவுமே ரௌடி சும்மா நீங்க இல்லாத இடைவெளியில் நானும் சும்மா இருந்து ஒரு கலக்கு கலக்கிக்கிறேனே, என 2 பூ மாலை கட்ட பூக்களோடு சென்ற 2 தாடிவைத்த குடிகார இளைஞர்களிடம் மெதுவாகப் பேசி வழிவதும்,பிறகு திடீரென கத்துவதும், பெரிய தலைவரு என மோட்டார்பைக்கில் சென்றவரை சென்ற பின் சாடுவதும், ஒரு வியாபாரி போல் இருந்த நடுவயது பெண்ணை பிடிக்க ஓடுவதும், அவர் இவரிடம் சிக்காமல் ஓடுவதுமாய்… அந்த நங்க வள்ளி பேருந்து நிறுத்தம் 9.30 மணிக்கும் மேல் அசிங்கமான இடமாக இருந்தது. கடைகள் ஏதும் இல்லை. அபாயகரமான நேரம் .

இது போன்ற பேருந்து நிறுத்தங்களில் எல்லாம் குறைந்த பட்சம் ஒரு காவலராவது நிறுத்தப்படல் அவசியம். அம்மா ஆட்சி இதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதா? இது போன்ற நேரத்தில் பெண்கள் சிக்கிக் கொண்டால் அவர்களது நிலை என்னவாக இருக்கும் என்று யூகித்தறிய முடிகிறது .சொல்லத்தரமில்லாதிருக்கிறது. ஒரு புறம் கோபம் பொங்கினாலும் இதை எல்லாம் தாக்குபிடித்துக் கொண்டு வீடு திரும்புவதிலேயே நமது குறிக்கோள்…பூமிக்கு பாராமக கழிவுகளாக இந்த இளைஞர்களை மாற்றி 15 வயது இருக்கும் இளைஞருக்கெல்லாம் வாக்குரிமை அளித்தபடி அவர்களுக்கு புகைத்தல், மது போதை ஆகிய பழக்கங்களை புகுத்தி வரும் இந்த அரசை நொந்து கொள்வதா? இதற்கு இரையாகிப் போன இந்தசமூகத்தை நொந்து கொள்வதா? தியாகம் செய்து களப்பலி ஆவதா? எனப் போரட்ட மனதுடன் கிடைத்த பேருந்தில் வந்தால் ஒரு ரயில்வே கேட் தடை. ஆக வீடு வந்து சேர்வதற்குள் என் போன்றோர் எப்படி வெளியில் சென்று நடமாடுவது என அடிக்கடி குழப்பம் வந்து நேர்கிறது. இது நாடா இல்லை காடா? சொல்லு தோழா?சில நேரங்களில் வாழ்வை விட சாவது நன்றாக இருக்கலாம். ஏன் எனில் இந்த பூமிக்கு பாரமான எச்சங்களோடு போராட முடியா விரக்தி நிலை வரும்போது….

மிக முக்கியமான செய்தி: பேருந்தில் பாடல் ஒலிபரப்பப்படுகிறது பார்த்தவரையில் வயது பெண்கள் பெரும்பாலும் அந்த பாடல்களை அதனோடு சேர்ந்து முணுமுணுத்து ஏன் பிறர் கவனிக்கும்படியாகவே பாடிக் கொண்டே பயணம் செய்கிறார்கள். விட்டால் அந்த இடத்திலியே நடித்து விடுவார்கள் போலிருக்கிறது. சினிமாவின் தாக்கம் சொல்லி மாளமுடியாமல். முடியாது இருந்தாலும் அடியேனை இந்த நாட்டின் மிக உயர்ந்த சக்தி மிகுந்த பதவியில் அமர்த்தினால் குறைந்த பட்சம் சில ஆண்டுகளுக்காவது இந்த சினிமாத் துறையை தடைசெய்து வைப்பேன். மேலும் இந்த வாகனங்களில் ஒலி, ஒளிக்(காட்சிகள்) எல்லாம் இடம் பெறாமல் தடுப்பேன் அது மக்களுக்கு நல்லது.அது மாயை அது போலி நம்து வாழ்வு யதார்த்தம், நிதர்சனம் என்றெல்லாம் உணரக்கூடிய நிலை எல்லாம் தாண்டி மிதமிஞ்சி தமிழகம் சென்று கொண்டிருக்கிறது.

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.