ஜனவரி 6.2012. இன்று சர்வ தேச விண்வெளிநிலையம் தமிழகத்தில் நன்கு தெரியும் என சிறுவர்களுக்கான அறிவியல் மாத இதழ் துளிர் தெரிவித்துள்ளது.இது வடமேற்குத் திசையில் மாலை சுமார் 7.18க்குத் தெரியத் துவங்கி தென்கிழக்காக சரியாக 7.24.06க்கு பூமியின் நிழலில் மறையும்வரை செல்லக் காணலாம் என்றும் தமிழ்நாட்டில் அடிவானிலிருந்து அதன் அதிகபட்ச உயரமாக 60 முதல் 90டிகிரி வரை இதைக் காணலாம் என்றும் நாகர்கோயிலில் வான் உச்சியில் வியாழன் கோளின் நடுவே கடந்து செல்வதைக் காணலாம் என்றும் தெரிவிக்கிறது. பார்க்க விரும்பும் விண்வெளியில் ஆர்வமுள்ளவர்கள் இதை வெறுங் கண்ணிலேயே காணலாம் நமக்கு அந்த நேரம் கிடைத்து மேகமூட்டம் இல்லாதிருந்தால்; வானிலை சீராக இருந்தால். இதெற்கெல்லாம் யாரும் ஒன்றும் செய்யமுடியாது அதுதான் இயற்கை எதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் அல்லவா? நான் சில முறை பார்த்துள்ளேன் இம்முறை நீங்களும்தான் பாருங்களேன்.
சாதாரண மனிதரின் கற்பனைக்கெட்டாத
காலச் சக்கரத்தில் மனிதப் பயணம் சிகரத்தில்
அபார முயற்சி இந்த அமர வளர்ச்சி
நான் இதில் என்று செல்வது?
பயணங்கள் முடிவதில்லை
இந்த வண்டிக்கு முன்னும் பின்னும்
எந்த வண்டியும் இல்லை;
இடித்துவிடுமோ என்ற பயமும் இல்லை;
இதற்கில்லை ட்ராபிக் தொல்லை.
சென்னையின் புழுதியும் போக்குவரத்துநெரிசலும் ஒருநாள்
விண்ணிலும் வருமோ?
நாளொன்றுக்கு 16 முறை பூமியை வலம் வருகிறதாம்.
90 நிமிடத்துக்கு ஒரு முறை
எல்லாம் எதுவரை?
வேறு கிரகத்தில் மனிதம் குடிபுகும் வரை;
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.






நல்ல செய்தி.
நன்றி ஐயா.
always thanks sir. vanakkam. But ISS crossed in our place before that we mentioned on that day. we xpected after 7.15 as per Thulir’s news; But it went on 6.45 pm itself.