சங்கரின் நண்பன்: படம் வெளிவந்த 2 ஆம் நாளே படத்தைப் பார்த்துவிட்டேன். எனினும் இன்றுதான் இதைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடிகிறது. எனது வலைதளத்தைப் படித்து வருபவர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சங்கரின் எந்திரத் திணறல் என்ற எனது விமர்சனத்தை. அது எனக்கு கடந்த வருடத்தின் நிறைய வருகையாளர்களைப் பெற்றுத் தந்தது. ஆனால் இந்த நண்பன் படத்தைப் பற்றி குறை சொல்ல வேண்டுமானால் மொட்டைமாடியில் பொறியியல் மாணவ நண்பர்கள் தண்ணி அடித்துவிட்டு பேசிக் கொள்வதையும்;(இந்தக் காலத்தில் தண்ணி அடிப்பது சாதாரணமாகிவிட்டது எனவே பொறியியல் மாணவர்களும் தண்ணி அடித்துவிட்டு இப்படி பேசுவதை மாணவர்களின் இன்றைய குணாம்ச பிரதிபலிப்பாக கொள்ளலாம்) பேண்டைக் கழற்றிவிட்டு மரியாதை செலுத்துவதையும் மட்டுமே குறிப்பிடமுடியும். மேலும் பாடல்கள் அவசியமாகப் படவில்லை. அவை மனதில் பதியும் அளவும் ஜெயராஜால் எதையும் தர இயலவில்லை என்றே சொல்லலாம். மற்றபடி:
விஜய்;ஷிரீக்காந்த்;ஜீவா; சத்யராஜ்; இலியானா; சத்யன் என்ற எல்லா நடிகர்களும் நடிப்பதாக இல்லாமல் தமது பாத்திரத்தை செவ்வனே செய்திருப்பது இதன் கூடுதல் மதிப்பெண் பெற்றுத் தருகிறது. அவரவர்களுக்குரிய இடைவெளிகள் -ஸ்பேஸ் கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது இயக்குனரும் கதையுமே எல்லா இடங்களிலும் பரிணமித்திருக்கிறது. விஜய்; ஷிரீக்காந்த்;ஜீவா போன்ற நட்சத்திர நடிகர்களின் அந்தஸ்து; இமேஜ் போன்றவற்றை விலக்கி வைத்துவிட்டுப் படத்தைப் பார்த்தோம் என்றால் படம் சூபர்ப். அது இயக்குனர் சங்கருக்கு கிடைத்த வெற்றி.
ஜென்டில்மேன்; இந்தியன்; முதல்வன் படங்களின் வரிசையில் இதையும் சேர்க்கலாம். மற்றபடி இந்த படம் கிராமத்து மக்களிடம் அவ்வளவுதூரம் ஊடுருவாது என்றே நம்புகிறோம். கல்லூரி மாணவர்களிடையேயும் ஓரளவாவது படித்தவரிடையேயும் சக்கை போடு போடும். நான் 3 இடியட்ஸ் இந்தி மூலப்படத்தை பார்க்கவில்லை. பார்த்த நண்பரும் சொல்கிறார் அதை அழகு கெடாமல் அப்படியே கொண்டுவந்திருப்பது அதுவும் சங்கரின் கைவண்ணத்தில் பிரும்மாண்டமாக செய்திருப்பது மகிழத்தக்கதாய் இருக்கிறது.
ஷ்ரிவத்ஸன் என்ற பாத்திரத்தில் வரும் சத்யன் நகைச்சுவையும்; சத்யராஜின் பாத்திரம் உணர்ந்த நடிப்பும் தமிழ்படத்தில் மாறுபட்ட கோணத்தில் நாம் இதுவரை பார்க்காத துய்க்காத இன்பம். படத்தில் வில்லன் என்ற பாத்திரங்களோ; அடிதடி குத்து சண்டை; வெட்டு கொலை இல்லாதிருப்பது மிகவும் இரசிக்கத்தக்கது. ஒருவேளை இது விஜய் இரசிகர் பட்டாளத்துக்கு வேண்டுமானால் ஏமாற்றமளிப்பதாய் இருந்திருக்கலாம். ஆனால் படம் பார்க்கும் அனைவர்க்கும் குதூகலத்தையே தருகிறது. இலியானா ஒரு அடுத்த ஐஸ்வர்யா. உடலும் தோற்றமும் நடிப்பும் கதைக்கும் பாத்திரத்துக்கும் கனகச்சிதமாக பொருந்துகிறது.
விஜய்; ஜீவா; ஷ்ரீகாந்த் இந்த மூவரின் அணி காட்சிகளை அள்ளிச் செல்கிறது. தமிழில் கூட இதுபோன்ற அணியாக சேர வைத்து நடிக்கவைக்கவும் கதை சொல்லவும் படம் எடுக்கவும் முடியும் என சங்கர் நிரூபித்துவிட்டார். ஷோலே படம் வந்தபோது தமிழில் இதை ரீமேக் செய்வார்களா என எதிர்பார்த்திருந்தனர்- ஆனால் செய்யவில்லை. இந்த 3 இடியட் இந்தி படத்தை தமிழில் செய்திருக்கும் சங்கருக்கு நமது பாராட்டுகளும் நன்றிகளும் உரித்தாகட்டும். அவரின் முயற்சிகள் மேலும் மேலும் வளரட்டும்.
படம் வெற்றி பெற்றே தீரும் என நம்புகிறோம். ஆனால் படம் வெளிவந்த அதே நாளில் வெளியில் டி.வி.டிக்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேம்.அனைவரும் பார்க்க வேண்டிய படம். யாராவது பார்க்காதிருந்தால் பாருங்கள் தியேட்டரிலோ டி.வி.டியிலோ; வலைதளத்தின் வழித்தடங்களிலோ எப்படி வேண்டுமானாலும் பாருங்கள் ஆனால் பார்க்காதிருந்துவிடாதீர் ஒரு நல்ல படத்தை அது உமக்கே இழப்பு. என்னைக் கேட்டால் இந்தப் படத்திற்கு ஒரு காலக் கட்டத்தில் வரிவிலக்கு அளித்து அனைத்து மாணவர்களையும் சென்றடையும் வண்ணம் எல்லா தியேட்டர்களிலும் திரையிடலாம். நான் பள்ளிகளுக்கும் கூட போட்டுக் காட்டச் சொல்வேன்.சமுதாயம் சார்ந்த அக்கறையுடன் ஒரு நல் எண்ணத்துடன் எடுக்கப்பட்ட படம். நாம் சங்கருக்கு நன்றி சொல்ல வேண்டும். எந்திரன் எடுத்தபோது திட்டிய அதே தணிகை இன்று மனமுவந்து எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாயப் பொறுப்புடன் எடுக்கப்பட்ட படத்தை வரவேற்கிறேன். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு புகழ் பாடுகிறேன். இதைப் பார்க்க எனக்கு வாய்ப்பளித்த ஒரு கல்லூரி இளைஞன் ஒருவனுக்கும் சிறுவர்களுக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினேன். நூற்றுக்கு 75 மதிப்பெண் தாராளமாக கொடுக்கலாம். ஆள் மாறாட்டம் செய்து படிக்குமளவு நமது அரசுகள் இருக்கிறது என்பதை ஏற்க முடிந்தாலும் செரிக்க முடியவில்லை அந்த சூரியா -விஜய் ஆள் மாறாட்டம்- பஞ்சவன் பாரிவேந்தன். பாரி நீ ஒரு நகைச்சுவை மாரி.
இவண்
கவிஞர் தணிகை
மறுபடியும் பூக்கும்வரை






நல்ல விமர்சனம்.
நன்றி ஐயா.
Adu Enna boss ஷிரீக்காந்த் ………….. i don’t accept this…… is……
dear Muthu: I don’t know to type Srikanth in thamiz so; I typed it like that.pl.forgive this kind of mistakes and consider the core point and gyst. anyhow vanakkam. thank u for your sharing of this post.keep contact.