ராஜபாட்டையை விட ஒஸ்தி மௌன குருவும் தம்பி வெட்டோத்தி சுந்தரமும்:

 

ராஜபாட்டையை விட ஒஸ்தி மௌன குருவும் தம்பி வெட்டோத்தி சுந்தரமும்:
ராஜபாட்டை: தெய்வத்திருமகள் அழகிய திருமகனாக வந்த இந்த விக்ரமுக்கு இந்த படம் சரிவைத் தந்திருக்கிறது. யாரைக் கேட்டாலும் படம் சரியில்லை எனச் சொல்லுமளவு.வெறும் சண்டை சச்சரவுகளை வைத்துக் கொண்டு அது யார் எந்த பிரபல நடிகர் நடித்தாலும் கதி இதுதான். கதை இல்லை. கதை இல்லாமல் எந்த படமும் நன்றாக இருக்காது. சேலம் மாண்ட்போர்ட் பள்ளியில் படித்த எங்களது மாவட்ட மாணவராயிருந்த திறமையான நடிகர் விக்ரம் இதுபோன்ற படங்களை இனி ஒத்துக் கொள்ளாதிருப்பது அவருக்கும் பார்க்கும் நமக்கும் நன்மை.

விஸ்வநாத் எனப்படும் மாபெரும் தெலுங்கு இயக்குனர் இமயத்துக்கு இந்த சிறுபிள்ளைத்தனமான கதாபாத்திரமெல்லாம் தேவைதானா? குருதிப் புனலில் அவர் பங்கு நன்றாகவே வந்திருந்தது என்பதை நாம் எவரும் மறந்திருக்க முடியாது. மொத்தத்தில் இந்த ராஜபாட்டை வெறும் முள்காடு. அட்டர் பிளாப். வேறு சொல்ல ஒன்றுமில்லை இந்தப் படத்தைப் பற்றி.

ஒஸ்தி: சிலம்பரசனின் பட வரிசையில் இதுவும் பேர் சொல்லும். நகைச் சுவைக்கு பஞ்சமில்லை. திருநெல்வேலிச் சீமைத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. அனைவரையும் அப்படியே பேசவைத்த இயக்குனருக்கு ஒரு பாராட்டு. நல்ல நகைச்சுவையுடன் கதை ; தாய் தந்தை; சகோதர சென்டிமென்ட் யாவும் நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. நன்றாக இருக்கிறது என்கிறதே இந்த படத்திற்கு இளைஞர்கள் தரும் சான்று. நல்ல பொழுதுபோக்கு படம். ரிச்சாவை ரிச்சாவாகவே காட்டியிருக்கிறார்கள். சந்தானம் காவல்துறைப் பட்டாளம் ஒரு நகைச்சுவைக் கச்சேரியே நடத்தியுள்ளது.

மற்றபடி அடிதடி கலக்கல்; மசாலா கலக்கல் எல்லாம் சிம்புவின் பேர் சொல்லி.

மௌன குரு: அருள்நிதி பேர் சரியா சொல்லிட்டேனா? அந்த கலைஞர் குடும்ப வாரிசு மெதுவாக அடி எடுத்து வலுவாக திரைப்படத்துறையில் ஊன்றிக் கொண்டதை பறைசாற்றும் படம். சிக்கலான கதை என்றாலும் சிக்கு எடுத்து பார்க்கும்படி வைத்துள்ளார்கள். மனிதன் பணத்துக்காக சுயநலத்துக்காக காவல்துறை என்ற பேரிலும் எதை வேண்டுமானாலும் செய்வார் என வெளிப்படுத்தியுள்ளார்கள். கல்லூரி இளைஞர்கள் தேவையில்லாமல் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது மாட்டிக்கொண்டால மீண்டு வருவது எவ்வளவு கடினம் என்பதை வலியுறுத்துகிறது படம். மனநிலைக் காப்பகம் செல்லும் கதாநாயகனை மறுபடியும் ஏன் என்கவுண்டர் என்ற பேரில் போட்டுத்தள்ளி யிருக்கலாமே என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. இவரை மட்டும் கொல்லாமல் இவர் சொல்மட்டும் எடுபடாமல் செய்தால் போதும் என நினைக்கும் காவல்துறைக் கதை லாஜிக் கொஞ்சம் இடிக்கிறது . இதைத் தவிர்த்துப் பார்த்தால் சிரமப்பட்டு பார்க்க வேண்டிய படமாயிருக்கிறது. மருந்துக்கும் பொழுதுபோக்கு அம்சம் இல்லை. கதாநாயகி அதுதான் இந்த இளைஞரை நேசிக்கும் பாத்திரம் ஹோம்லியாக உள்ளது நடிகையாக தெரியாதது கதைக்கு +பாயிண்ட்தான் ஆனாலும் இடுப்பு பெருத்து பெரிய பெண்பிள்ளையாக இந்த நடிகை காட்டப்பட்டிருப்பதைவிட வேறு நடிகையை போட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

சொந்த குடும்பத்தில் தாய்; சகோதரன்; அண்ணி யாருமேகூட நம்பமுடியாமல் அந்த மனநிலைபிறழ்ந்தவராக நல்ல மனநிலையில் உள்ள அந்த இளைஞரைக் காட்டியிருப்பதும் எந்நிலையிலும் மனம் கலங்காமல் எல்லா சோதனைகளையும் மீறி அந்த இளைஞர் மீறி வென்று நிற்பதும் கதை. கடைசியில் கர்நாடகா தமிழக மாநிலப் பிரச்சனையாக மாறக் கூடும் எனவே அந்த கேஸை அப்படியே விட்டுவிடுங்கள் என்பதும் அந்த ஏழெட்டு கோடிப் பணமும் என்ன ஆயிற்று எனச் சொல்லாமல் விடப்பட்டதும் மௌனகுரு காதுகேளா வாய்பேசா குழந்தைகளுக்கு ஆசிரியப்பணி செய்யச் சென்றுவிடுவதுமாக கதை முடிக்கப்பட்டிருக்கிறது. படம் முடிவதற்குள் போதுமடா சாமி என்றாகிவிடுகிறது. சிரமப்பட்டு பார்க்கவேண்டிய படம்.

தம்பி வெட்டோத்தி சுந்தரம்: மிகவும் குதூகலமாக ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சோகமாக நடந்துமுடிந்த உணமைச் சம்பவத்தை படமாக்கியதாக சொல்கிறார் இயக்குனர். கரன்; அஞ்சலி பாத்திரங்கள் மட்டுமல்ல சரவணன்; மற்றும் எல்லா கொடூரமான பாத்திரங்களும் நன்றாகவே காட்டப்பட்டிருக்கிறது.. கேரள மலையாள வாடை வீசும் தமிழ். குமரி மாவட்டம் வளர்ச்சி இன்றி தனித்து விடப்பட்டிருப்பதாக இயக்குனர் ஆதங்கப்பட்டிருக்கிறார் என்னவோ தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்கள் எல்லாம் தழைத்தோங்கி உச்சியில் இருப்பதாக நினைக்கிறாரோ? குமரியிலாவது:சூரியன் சந்திர  முக்கடல் சங்கமிப்பு; சூரியன் சந்திர காட்சிகள்; விவேகானந்தா நினைவு மண்டபம்; 133 அடி திருவள்ளுவர் ; காந்தி மண்டபம் இப்படி சிறப்பு இருப்பதாக நாங்கள் நினைத்திருக்க இவர் அங்கு நிலவும் நிலவிய கடத்தல்; கொலை கொடூரங்களை காட்டியுள்ளார். அந்த படித்த இளைஞர் வெட்டோத்தி சுந்தரம் பலிகடாவாக்கப்பட்டிருப்பதை சொல்லியுள்ளார்.

படம் குறை சொல்லுமளவு இல்லை என்றாலும்; நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரர்களை எப்படி பயன்படுத்தியுள்ளார்கள் என நாம் தெரிந்து கொள்ளமுடிந்ததுபோல் மனிதர்கள் எவ்வளவு கொடூர சிந்தை உள்ளவர்கள் என்பதை ஆக்சிட்கலந்த சுண்ணாம்பை சுந்தரத்தின் கண்களில் தேய்த்து அவருக்கு தண்ணீர் கிடைக்கச் செய்யாமல் காரண காரியங்களை சற்றும் அலசிப் பார்க்காமல் வெறும் ஆத்திரத்தாலே எத்தனை மனிதவாழ்க்கை அஸ்தமித்துப் போகிறது என நெஞ்சை உருக்கும் கதை படமாகியுள்ளது. இதை எல்லாம் பார்க்க இளகிய மனம் இருந்தால் பார்க்கமுடியாது.

இயக்குனர்கள் சமூக அவலங்களை; வக்கிரங்களை படம்பிடித்துக் காட்டுவதாக சொல்கிறார்கள்; குற்றவாளிகள் படத்தைப் பார்த்து கற்றுக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். எது உண்மையோ? முட்டையா கோழியா எது முதலில் என்பது போல விடை தெரியாத கேள்விகள். ஆனால் குற்றம் எப்படியெல்லாம் மனித மனங்களின் வக்கிரங்களால் கொடூரமாக நடக்கமுடியும் என செரிக்கமுடியாமல் காட்டியுள்ளார்கள். இதையெல்லாம் பார்த்தால் மனிதம் முன்னோக்கி போவது போலத் தெரியவில்லை.

மறுபடியும் பூக்கும்வரை
கவிஞர் தணிகை.

 

2 Responses to ராஜபாட்டையை விட ஒஸ்தி மௌன குருவும் தம்பி வெட்டோத்தி சுந்தரமும்:

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 192 other followers