ஏர்செல் கம்பெனி ஒழிக;அழிக:இது எனது குரலின் பதிவு மட்டுமல்ல.எனைப் போன்று பாதிக்கப்பட்ட இலட்சக் கணக்கானவர்களின் ஓலம்.இது ஒரு வசை மாரி.எனது எழுத்துக்களைப் படித்துவரும் பெருமான்களும் பெருமாட்டிகளும் நான் இப்படி எழுதுவதற்கு பிழை பொறுப்பாராக. அல்லது படிக்காமல் விட்டுவிடுவார்களாக.
ஏர்செல் கம்பெனியின் முதலாளி மற்றும் நிர்வாகிகள் தமது மனைவி மக்களை விற்றுகூட பிழைக்கலாம் இப்படி வாடிக்கையாளர் பணத்தை வஞ்சித்துக் களவாடுவதற்கு மாறாக; இப்படி திருடுவதற்கு மாறாக; இப்படி பகற்கொள்ளையடிப்பதற்கு பதிலாக. அதில் பணியாற்றும் நியாயமான பணியாளர்கள் உடனே அந்த நிறுவனத்திலிருந்து பணி புரிவதிலிருந்து விலகி பாவம் காத்துக் கொள்வது நல்லது. இந்தக் கம்பெனி முதலாளிமார்களும் தலையாய பதவியில் இருக்கும் குடும்பத்தினரும் பயணம் செய்யும் கார்கள் அந்துவானக் காட்டில் விபத்துக்குள்ளாகி குடிநீர் தரக் கூட ஆளின்றி தவித்து இறக்கலாம் நல்ல சாவு கூட வராமல்.இவர்கள் செல்லும் இரயிலும்; விமானமும் அப்படியே நொறுங்கி சிதையலாம். இவர்கள் வீட்டில் பணி செய்யும் ஓட்டுனர்களும்; வேலைக்காரர்களும் இவர்களது பெண்டு பிள்ளைகளை களவாடிச் சென்று கெடுத்து பிச்சையெடுக்கவோ அல்லது சிவப்பு விளக்கு. விபச்சார விடுதிகளிலோ விற்றும் விடலாம்… இவர்களின் அடுத்த தலைமுறைக்கு வளரும் பேரன் பேத்திகள், மகன், மகள்கள் உறவுகள் இவர்கள் கண்முன்பே அழிந்து போகலாம். இப்படி எல்லாம் இவர்களை சபிக்க காரணமுண்டு. ஆனால் அது எமது தகுதிக்கு குறையாகி விடும் என்ற காரணமும் இருப்பதால் இவற்றை எல்லாம் நான் எழுதவில்லை, எழுத விருப்பமும் இல்லை. இப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணுகிறார்கள் அதில் தவறு ஏதுமில்லை.
சிவகுமார் மகன் சூரியா கண்ணியம் காப்பவராக இருந்தால் குடும்பப் பெருமை காத்துக் கொள்ளவேண்டுமானல் “அகரம்” மூலம் பெறும் புண்ணியம் உண்மையாகவே அவர் குடும்பத்துக்கு சேரவேண்டுமானால் முதலில் இந்த ஏமாற்றுக் கும்பல் கம்பெனியிலிருந்து விளம்பரம் செய்து பொருளீட்டுவதை நிறுத்துவது நல்லது.அத்தனையும் அடுத்தவரைத் தட்டிப் பறித்த பாவக் காசு. அதில் இவர் பங்கு போடுவதை விட ஏமாற்றுக் காரக் கம்பெனிக்கு துணைபோவதை விட சும்மா இருப்பது இவருக்கு புண்ணியம். சொன்னால் நடிகர்கள் கேட்பார்களா?
ஏன் எனில் இவர்கள் கொலை; கொள்ளைக்காரர்களை விட மிக மோசமாக வாடிக்கையாளர் பணத்தை கபளீகரம் செய்து இரத்தம் உறிஞ்சும் இரத்தக் காட்டேறிகளாக மாறி வருகிறார்கள். இது போன்ற தனியார் கம்பெனிகளுக்கு 2G.3G எல்லாம் தாரை வார்த்துவிட்டு அட்சயப்பாத்திரத்தை விற்று பிச்சைப்பாத்திரத்தை ஏந்திவரும் நாட்டிலும் அரசிலும் ஏதும் நடக்கலாம்.
இன்னும் மலைப்பாங்கான பகுதிகளில்; யாரும் எளிதில் அடையமுடியா பகுதிகளில் கூட பி.எஸ்.என்.எல் சிக்னல் கிடைக்கிறது. மற்ற தனியார் நிறுவனங்களின் டவரோ; சிக்னலோ, சமிக்ஞைகளோ கிடைப்பதில்லை என்பதை நாம் நினைவு கூர…
மற்ற எல்லா பி.எஸ்.என்.எல்; டாட்டா டொகோமோ; ஏர்டெல்; வோடா; ஐடியா போன்ற கம்பெனிகளைவிட ஏர்செல் மிக மோசமான பகற்கொள்ளை அடிப்பவர்கள் என்பதை புரிந்துகொண்டு உங்கள் இணைப்பு இவர்களோடு இருந்தால் உடனே அதே எண்ணுக்கு மற்ற கம்பெனி இணைப்புகளை பெற்றுக் கொள்ளுங்கள். அல்லது ரீசார்ஜ் செய்வதை இனி நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது அந்த ஏர்செல் சிம் கார்டை எடுத்து ஆற்றிலோ; குளத்திலோ கழிப்பகத்தின் மலத்தொட்டியிலோ வீசி எறிந்து விடுங்கள் இவை உமக்கு நல்லது. உங்கள் நன்மைக்காகவே இதை சொல்கிறேன்.இவர்களின் வண்டவாளம் தெரிந்து வெகுகாலம் இவர்கள் இணைப்பை நான் உபயோகிக்கவே இல்லை.
என்கிருந்தோ வந்தான்; இடைச்சாதி நான் என்றான்; இங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்பதற்கேற்ப ஒரு இளைய நண்பருக்காக இந்தக் கம்பெனியின் இணைப்பை நான் பெற்றதன் பயனை இப்போது நான் அனுபவித்துவிட்டேன் . பிறகு கேட்டால் எங்கு எங்கெங்கும் இதே குரல். பெரும்பாலும் அவர் மட்டுமே அந்த எண்ணில் எமை அழைத்துப் பேசுவது வழக்கம். கடந்த 20.01.2012ல் 60 ரூபாய்க்கு மேல் இருந்த எனது பணம் படிப்படியாக 48.17ஆக குறைந்துவிட்டது நான் பேசாமலே. உபயோகப்படுத்தாமலே. எப்படி குறைந்தது ஏன் குறைந்தது என்று கேட்கப்போனால் வந்தது வம்பு.
பொதுவாக கஸ்டமர் கேரை அணுகுவது படித்தவர்க்கே இந்த தனியார் செல்கம்பெனிகளில் சிரமம். அப்படி அணுகிவிட்டால் ஏர்டெல்; பி.எஸ்.என்.எல்; டாட்டா டொகோமோ, ஏன் வோடா ப்போன்ற கம்பெனிகளில் கூட தவறு அவர்களுடையது எனில் மன்ன்னிப்பு கேட்டுவிட்டு தனது போக்கை மாற்றிக் கொண்டு நமது காசை மறுபடியும் நமக்கு சேர்த்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பல அனுபவம் நேர்ந்ததுண்டு எனக்கும். “கஸ்டமர் கேர்” தொடர்புக்கு எந்தக் கம்பெனியிலும் பேச்சுவார்த்தைக்கு ஏதும் நம்மிடம் கட்டணம் எடுக்க மாட்டார்கள். பொதுவாக எந்த நிறுவனத்திலுமே.
ஆனால் இந்த திருட்டு கொள்ளைக்காரர்கள் இருட்டிலே பிடித்த கொழுக்கட்டைகள் கம்பெனியில் முதலில் “கஸ்டமர் சீட்டிங்” சென்டர் நடத்திவருகிறார்கள். இதைக் கஸ்டமர் கேர்லஸ் சென்டர் என்றும் சொல்லலாம். இதை முதலில் அணுகுவதே கடினம். அதை அணுகியவுடன் மறுபடியும் ஐ-பேட் வெங்காயம் என இவர்களின் விளம்பரமே வரும்.படித்தவர்க்கே இந்நிலை எனில் படிக்காத ஏழைப் பாமரர் நிலை சொல்லத் தரமன்று. அதற்குத் தகுதியான மொபைல் வேண்டும்.டச் ஸ்கிரீன் அல்லது வேறு ஏதேனும் மொபைல் இருந்தாலும் வாடிக்கையாளர் ஒரு கணம் தாமதித்தாலும் அந்த கஸ்டமர் கேர்லஸ் சென்டரை அணுகவே முடியாது.
வெகு உஷாரான வாடிக்கையாளர் மட்டுமே இவர்க்ள் பாடும் பாட்டுக்கேற்ப தாளம் போட்டபடி கஸ்டமர் சீட்டிங் சென்டருக்குள் சென்று பேசமுடியும்.அவர்கள் பக்கம் தவறு இருந்தாலும் நம்மைப் பார்த்து நமது காசையும் தின்றுகொண்டு ஏன் கத்தறீங்க? என எக்ஸ்கியூட்டிவ் எனப் பேர் சொல்லும் கழுதைகள் கனைக்கும், மென்றுகொண்டே திருட்டுத்தனமாக அப்டுடேட் ஆகவில்லை 1 மணி நேரம் கழித்துப் பேசுங்கள் எனச் சொல்லும் அப்படி 1 மணி நேரம் கழித்து மறுபடியும் முதல் இடத்திலிருந்தே ஆரம்பித்து கஸ்டப்பட்டு நஷ்டப்பட்டு பேசினால் 2 மணி நேரம் கழித்துப் பேசுங்கள் என கீறல் விழுந்த அதரப் பழசான பதிலையே திரும்ப சொல்லும்.
இத்தனைக்கும் முதலில் நாம் பேசுவது இலவசமாம். 2 ஆம் முறைக்கு 50பைசா 3 நிமிடத்துக்கு; 3 ஆம் முறை பேச 60 பைசாவாம் அதே 3 நிமிடத்துக்கு. என நமது பிரச்சனையை முடிக்காமல் நமதுகாசையே உறிஞ்சிக்கொண்டே செல்லும். இந்த முறையை உலகிலேயே முதல் முதலாக இந்த கழுதைமுண்டங்களின் கம்பெனியிடம்தான் கண்டேன்.
எடுத்த காசை போடுவதுமில்லை. இவர்கள் செய்யும் தவறுக்கு நாம் புகார் செய்வதற்கும் சேர்த்து நம்மிடமே அபராதமும் பெற்றுக் கொண்டு கம்பெனியை நாடெங்கும் நடத்திவருகிறார்கள் கடை பரப்பியபடி. இந்த எருமைகளை எருமை மாடுகளோடு ஒப்பிட்டால் எருமைகள் கோவித்துக் கொள்ளும்.
ரௌத்ரமான இளைஞர்கள் இவர்கள் அலுவலகத்தை சூறையாடினாலும்; அடித்து நொறுக்கினாலும் அதில் தவறு ஏதுமில்லை; அது தீவிரவாதமில்லை; அது பகற்கொள்ளையை வஞ்சக ஏமாற்றை தடுப்பது என்பதே ஆகும். இது எனது கருத்து மட்டுமல்ல பாதிக்கப்பட்ட பல்லோரின் கருத்துமாகும். அட என்னிடம்தான் இப்படி என்கிறீர்களா? அதுதான் இல்லை…21 அன்று கந்தாஸ்ரமம் -உடையாபட்டி- சேலம் சென்றோம் அங்குள்ள நன்கொடை மேசையை கவனித்துக் கொள்ளும் ஒரு முதியவரும் நான் பாடும் அதே பாட்டையே பாடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக 48 மணிநேரத்தில் காசை போடுகிறோம் என்றதாக பெரியவர் சொன்னார். இவனுங்களுக்கு ஒழுங்காக கம்பெனி நடத்த வக்கு வழி இல்லையெனில் யோக்யதை இல்லை எனில் கம்பெனியை இழுத்து மூடிவிட்டு செல்வதை விட்டு விட்டு வாடிக்கையாளர்களின் வேதனையை உச்சத்திற்கு கொண்டுசெல்வது எந்த வகையிலும் நியாயமில்லை.
எனவே இதற்கு ஈடாக எவ்வளவு தொகை தந்தாலும் அது சமாதானமாகாது. இப்படி சம்பாதிப்பதைவிட பிச்சை எடுப்பது சால சிறந்தது. இவர்கள் எனக்கு எதிராக எந்த வழக்கு தொடர்ந்தாலும் அதை சந்திக்க தயார்தான். இதைப் படிக்கும் அன்பர்களும்; நண்பர்களும் எனக்கு ஏதாவது செய்ய விரும்பினால் முதலில் இந்தக் கம்பெனியின் தொடர்பை அறுத்துக் கொள்ளுங்கள். இது எனது அன்பான வேண்டுகோள். உமக்கும் அது நல்லதுகூட. சிரமம் மேற்கொண்டு நுகர்வோர் மன்றமும் செல்லலாம் என்றே இதை தற்காலிகமாக முடிக்கிறேன். உமக்கு வேறு வழி ஏதாவது தெரிந்தால் விவரங்களுடன் பங்கிட்டுக் கொள்ளுங்கள்: நோடல்; ட்ராய் இப்ப்படி. அனைவரிடமும் சொல்லுங்கள் இவர்களை மேலும் ஒழிக்க உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் அனைவரிடமும் இந்த கருத்தை கொண்டு செல்லுங்கள்.அழியட்டும் ஏர்செல் போன்ற கம்பெனிகள் ஒழியட்டும் அது அடிச்சுவடே இல்லாமல்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.






true true true ….. Aircel is no.1 fraud company
Now-a-days Vodafone is also charging for customer care calls.
thank u and vanakkam to share this post Guna_Hema and Tamilan. keep contact
MTS is also doing the same. We are not able to contact the customer by doing so many efforts
vanakkam thankyou
Notify all new posts
thank you
thank u prabu.vanakkam..keep contact.