போராளி: சசிக்குமாரும் சமுத்திரக் கனியும் போராளிகள்தான் என்பதை இந்தப் படம் மூலம் நாம் அறிய முடிந்திருக்கிறது. ஷ்ரீதர்;பாலச்சந்தர்;பாரதிராஜா;பாலுமகேந்ரா;மகேந்திரன்,பாக்யராஜ் பசங்க பாண்டிராஜ் போன்றோர் வரிசையில் இந்தப் போராளியின் படைப்பாளிகளும் ஒரு காலக்கட்டம்வரை அலைவீசுவார்கள் என உறுதியாக நம்பலாம். மணிரத்னம்;சங்கர்; லிங்குசாமி;கௌதம் மேனன்; இன்னும் பல புது அலைபரப்பும் படைப்பாளிகளை ஏன் குறிப்பிடவில்லை எனில் இவர்கள் சில நேரங்களில் கதையின் அடித்தளத்தை நம்புவதைவிட காட்சியின் பிரும்மாண்டத்தில் பெரும்பாலும் ஈடுபடுகிறார்கள்.
மௌனகுருவும் போராளியும் எங்கோ சில புள்ளிகளில் இணைகின்றன எனினும் கதைக்களமும் போக்கும் வேறு வேறு. சினிமா என்ற மீடியத்தை அப்பழுக்கற்ற வாழ்வியல் படப்பிடிப்பாக சுப்ரமணியபுரம் தந்த இரட்டையர்கள் “சசிக்குமாரும் சமுத்திரக்கனியும் வழங்கியுள்ளார்கள். மௌனகுரு இதை விட நன்கு ஓடியிருப்பதாக நம்பத்தகுந்த நண்பர் குறிப்பிடுகிறார். அவர் சேலம் ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிப்ளக்ஸ் அருகே அலுவலகம் வைத்திருப்பவராதலால் அவர் சொல்வது சரியாகவே இருக்கலாம்.
ஆனால் மௌனகுருவை விட இந்த படம் மேல் என்பது எனது கருத்து. சொல்ல மொழியில்லை சூபர்ப். இத்தனை நாளாக எங்கிருந்தீர் மதுரை நண்பர்களே எனக் கேட்குமளவு.படம் நகர்வதே தெரியவில்லை . படுவேகம்.
சசிக்குமாரும் பெட்ரோல்பங்கும், தீமைக்கும் நன்மைக்கும் செல் நெம்பரும்; உதிரி நடிகையாக வரும் சுப்ரமணியபுரத்து தெத்துப்பல் நடிகையும், இணைக் கதாநாயகனாக வரும் அந்த இழுப்பு இழுத்தபடி நடிக்கும் அந்த உயரமான இளைஞனும்;விலங்கு வேசமிடும் கருப்புவும்; கிராமப் பின்னணியும், சென்னை நகரச் சூழலும், மன நிலை பிறழ்ந்தோர்க்கான மருத்துவமனையும் எவருமே நடித்ததாகத் தெரியாத காட்சி அமைப்புகளும் படபதிவுகளும்; நல்ல படம். நண்பர்கள் பார்க்கச் சொன்ன படம். காலம் கடந்தும் தாழ்த்தியும் பார்த்தபின்னும் அதிர்வலைகள் அடங்கும் முன் சசிக்குமாரையும் சமுத்திரக்கனியையும் பாராட்டவேண்டும் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.
அந்த ஆட்டுக்கார தென்மேற்கு பருவக்காற்று நாயகி கொஞ்சநேரம் வந்தாலும் அருமையான வீராங்கனையாக நம் நினைவில் பதிகிறார். எவ்வளவு காலம்தான் துரத்த துரத்த ஓடிக் கொண்டே இருப்பது என நானும்கூட இந்த குடிகாரர்களையும் குடிகார அரசையும் எதிர்த்து திரும்பி நிற்கலாம் இந்த போராளியைப் போல என்றாவது ஒருநாள். நல்ல யதார்த்தமான பார்வை சினிமாத்தனம் கலக்காத சினிமா எனச் சொல்லலாம். அந்த சண்டைக்காட்சிகளை மிகைப்படுத்தாதிருந்திருந்தால்.
ஆனாலும் நல்ல சுவை; ருசி; அருமையான கதை; நல்ல இயல்பான வசனம் சிறந்த நல் இயக்கம்; யதார்த்தமான நடிப்பு இணைந்த இசை ஆனால் பாடல்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி காட்சியின் கவர்ச்சிகள் நம்மை விழுங்கிவிடுகின்றன. எல்லாரையும் இதில் ஈடுபட்ட அத்தனை போராளி நண்பர்களையும், தோழர்களையும் பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம். மறுபடியும் பல நல்ல வெற்றிப்படங்க்ளை சோடைபோகாமல் உழைத்துப் பெற்றுத் தர.! மதுரை மண் தந்த அத்தனையும் பொன்.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.






நல்ல பதிவு.
நன்றி ஐயா.
thank u sir.vanakkam. keep contact.