எல்லாவற்றையும் சொல்ல முடியாது:
செந்தாமரையை காப்பாற்றிய வெடிமுத்து “என்னய்யா இப்படி செஞ்சிட்டீங்க? இந்த நேரத்தில் ஓடிவரக்கூட முடியாமல் எதுக்கு இந்தப்பக்கம் வந்தீங்க”?
கம்பெனி குதிரைகள் வெடிச்சத்தம் கேட்டு அரண்டு வேறுபக்கம் திரும்பியிருக்க வேண்டும் குதிரை காலடிசத்தம் நின்றிருந்தது.
“என்னைத் தேடி கம்பெனி ஆட்கள் துரத்தி வந்தார்கள் அதுதன். இப்படி கண் மண் தெரியாமல் ஓடி வர வேண்டியதாயிற்று என்றார் செந்தாமரை.
அவர்கள் எதற்கு உங்களைத் தேடி வர வேண்டும்? அப்படியே பிடித்தாலும் அவர்களால் உங்களை என்ன செய்துவிட முடியும்?- வெடிமுத்து.
இப்போது வெடியும் பாறையும் செய்யாது விட்ட வேலையை அப்போது பாம்பு செய்யாத வேலையை அவர்களால் செய்துவிட முடியும். என்றார் செந்தாமரை.
அதென்ன வேலை?-வெடிமுத்து.. அவர்களால் என்னைக் கொன்றுவிடவும் முடியும்- செந்தாமரை.
அப்படி என்ன பெரிய தப்பா செய்திருக்கப் போகிறீர்கள்? பார்த்தால் படித்தவராயும் நல்லவராயும் இருப்பது போலத் தெரிகிறதே..
“ஆமாம் படித்து நல்லவராயிருப்பதுதான் தவறு. பதிலை நீயே உன் வாயாலேயே சொல்லிவிட்டாய். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மறுபடியும் குதிரைகளின் காலடி சத்தம் மெதுவாக கேட்க ஆரம்பித்துவிட்டது.
“கேள்வி மேல் கேள்வி கேட்டு நீயும் என்னை அவர்களிடம் அனுப்பிவிடாதே, ஆசுவாசப்படுத்திக்கொள்ள இடம் தேடு” என்றார் செந்தாமரை.
“நீங்க கவலைப்படாதீங்க இனி என்னை மீறி எவரும் உங்களை அண்டமுடியாது என்ற வெடிமுத்து இப்படி வாருங்கள் என சற்றுத்தள்ளியிருந்த ஒரு ஆயில் மோட்டார் வைத்த பம்ப் செட் அறைக்குள் இவரை அழைத்துச் சென்று கதவைத் தாழிட்டார். உள்ளே கடலைக்காயும் பனைவெல்லமும் இருக்கு சாப்பிட்டுக் கொண்டிருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் மீதியை என்ற வெடிமுத்து வெளியேறிய
சற்று நேரத்திலேயே”வில்லியம் சேண்டர்ஸ்” Fவைன்ட் அவுட் த மேன் குயிக்லி; என்ற ஆர்டர் கேட்டது. என்ன மணியக்காரரே என்ன இந்த நேரத்திலே யாரைத் தேடறீங்க என்று அந்த வெள்ளையனுடன் இருந்த மணியத்தை கேட்க ” இந்தப்பக்கம் ஒரு ஆள் காலை நொண்டியபடி வந்தானா? எனக் கேட்க: அப்படி யாரும் வந்திருக்கவே முடியாது. வந்திருந்தாலும் கொஞ்ச நேரத்துக்கு முன் வெடித்த வேட்டு அவனை பரலோகம் அனுப்பியிருக்கும், நான் விடிவதற்குள் இந்த கிணறை ஆழப்படுத்தும் வேலையை முடித்துத் தர வேண்டும் சீக்கிரம் செல்லுங்கள் அய்யா; இன்னும் ஒரு வேட்டு பாக்கியிருக்கிறது என்றான் வெடிமுத்து இயல்பாக.
வாட் ஹி ஈஸ் டெல்லிங்? ஹி ஈஸ் டெல்லிங், நோபடி கேம் ஹியர்.சார். வாட் ஹி ஈஸ் டூயிங் இன் திஸ் டைம் ? ஹி ஈஸ் பிளாஸ்டிங் ராக்ஸ் இன் தெ வெல் டு கெட் த வாட்டர் சார். வெதர் ஹி ஈஸ் லைசென்ஸ் டு டூ தட்?
எஸ் சார். ஹி ஈஸ் த மேன் ஆவ் தெ பர்பெக்ட் சார். ஹி ஈஸ் லைசென்ஸ் டு டூ தட்; வி ஒன்லி புரவைடட் தட் என மணியமும் வில்லியம் சேண்டர்ஸ்-உம் உரையாடியபடியே ஓகே லெட் அஸ் மூவ் என அனைவரும் திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
அவர்கள் சென்ற அரவம் அடங்கியதும், பம்ப் செட் கிணற்றின் கதவு தாளைத் திறந்து “போய்ட்டாங்க , இனி எந்த கவலையும் வேண்டாம் ஐயா, என்ற வெடிமுத்து அவர்களிடம் சொல்லியது போல இன்னொரு வெடியையும் முடித்துவிட்டு வந்துவிடுகிறேன் அதுவரை இங்கேயே இருங்கள் என அடுத்த ஒரு ஒயரிலும் தீப் பொறியை வைத்தான்.
அதுவும் சில மணித்துளிகளில் சுறுசுறுவென பற்றிப் படர்ந்தபடி வெடியை நோக்கி முன்னேறி தப்பாமல் வெடித்துச் சிதறியது. வெடிச்சத்தம் கேட்ட பரங்கியரும் இவன் சொல்வது உண்மையே என நம்பி நகர்ந்து திரும்பிச் செல்ல ஆரம்பித்தனர். விடியற்காலை சேவல்கள் கூவ ஆரம்பித்துவிட்டன. மணி 3 இருக்கும் இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும் நாம் சற்று உறங்குவோம் என வெடிமுத்துவும் செந்தாமரையும் முயற்சி செய்தனர். மறுபடியும் வாய் இருக்க மாட்டாமல் அப்படி என்னதான் செய்தீர்கள்”? செய்கிறீர்கள் என வெடிமுத்து கேட்க:
“எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்லமுடியுமா? என்றார் செந்தாமரை. அது சரிதான். சரியான தத்துவம் படித்த பேர்வழியாய் இருப்பீர் போலிருக்கிறதே நான் ஏதும் கேட்கவேயில்லை, நீங்களும் சொல்லவேண்டாம் ஓய்வெடுத்துக் கொள்ளுவோம் என அமைதியானர்கள்.
செஞ்சூரியன் பொற்கிரணங்களுடன் புறப்பட்டான்…
அறவுரை(அமைதி நல்மொழி அற்புத வழி)
கவிஞர் தணிகையின் காவிரிக்கரையோரத்தின் காலச் சங்கிலிகள்
தொடர்: வலையம்: 44.
எல்லாவற்றையும் சொல்லமுடியாது.
மறுபடியும் பூக்கும்வரை:
கவிஞர் தணிகை.





நல்ல கதை.
நன்றி ஐயா.
thanks sir. vanakkam.I am always got good encouragement from u as a elder.