கேட்டுக் கொள்ளுங்கள்;
பொறுத்துச் சொல்லுங்கள்.
அந்தியும் விடியலும் போனால்
உம் வாழ்வில் ஒரு நாள் தீரும்
பூமியின் சுழற்சியில் மறுபடியும்
கவிதைப் பஞ்சம் தீர்க்க வந்தேன்
திருவாய் மலர்ந்தருளி:
விடியல் சேவல் துயில் எழுப்ப
பண்ணைக் கோழிகளின் குரல் பதிவில் இருக்காது.
ஆட்டு மந்தைக் கூட்டமோ அங்கீகரிக்கப் படாது.
அதிலும் செம்மறி ஆடுகளோ உயிர்விட கழுத்தை காட்டும்.
வெள்ளாடோ வெகுண்டெழுந்து பாயும்;
விதி தகர்த்து மாயும்.
இரத்த வெள்ளத்தில் சாயும். ஆனாலும்
அதன் பெயர் உச்சரிக்கப்படும்.
நீங்கள்
துயில் எழுப்பும் சேவலா?
பண்ணைக் கோழியா?
ஆட்டு மந்தைக் கூட்டத்திலா?
செம்மறி ஆட்டுத் தோட்டத்திலா?
வெள்ளாட்டுப் பா(ரா)ட்டிலா?
வெளி நாட்டுப் பாட்டிலிலா?
கவிஞர் தணிகை






அருமையான கவிதை.
நன்றி ஐயா.
thank u for the feedback sir. vanakkam.kk.
thank u for the feedback . sir. vanakkam.kk